ஓடிவா மகளே!

This entry is part [part not set] of 29 in the series 20030119_Issue

புஷ்பா கிறிஸ்ரி


சந்தக் கவிதை பாடிவரும்
சொந்த மகளே ஓடிவா
அன்னைத் தமிழில் பாடிவரும் – என்
அன்பு மகளே ஓடிவா
இனிய குரலில் பாடிவரும்
இளைய மகளே ஓடிவா
புனித வாழ்வைப் பாடிவரும் – என்
புதிய மகளே ஓடிவா
விண்ணைத் தொடும் பாடலை
விளக்கிடும் மகளே ஓடிவா
கண்ணைக் கசக்கி நில்லாமல் – நீ
மண்ணில் மகிழ்ந்து பாடிவா
மாயப் பாடல் சொல்லாமல்
மனது கேட்கப் பாடிவா
வாயால் பாடல் பாடாமல் – உன்
மனதால் பாடல் பாடிவா
தாகமாக இருக்கிறேன் – உன்
பாடல் கேட்கத் துடிக்கிறேன்
வேகமாக ஓடிவா மகளே!
விரைந்து நீயும் பாடிவா!

***

pushpa_christy@yahoo.com

Series Navigation