This entry is in the series 20100206_Issue

நட்சத்திரவாசி


மழை பெய்து ஓய்ந்தாலும்
கனம் எய்தி வீழ்ந்தாலும்
மரத்துக்கன்றோ
முறிதலும் வேதனையும்
சொல்லா துயரொன்றை
விட்டு போனதோ மழை
பாரம் சுமந்து தளர்ந்து
போனதோ பூமி
எதுவாகட்டும்
சாய்ந்து போன மரத்தின்
வீழ்தலிலும் மடிதலிலும்
மழையின் பெருங்குற்றம்
காணாதோ மரத்தின்
ஆழ வேருகள்
மழையோடு பேசி
மழையோடு வாழ்ந்து
மழையோடு வீழ்ந்து
போகுமே அன்றி
மரம் போலுள்ளதோ
மாசற்ற உறுதியில்
அதன் கிளைகள்

Series Navigation