ஒபாமா

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

ரஜித்


அன்று மார்ட்டின் லூதர் கிங்கின் எழுச்சி
இன்று ஒபாமாவின் புரட்சி.

வெள்ளையும் கருப்பும்
விலகியிருந்தால்
அவை விழிகளல்ல

ஏற்றுக்கொண்டுவிட்டது
ஏகாந்த உலகம்

அன்று லூதரின் எழுச்சி
இன்று ஒபாமாவிம் புரட்சி

வானம் தொடுகிறது
வாக்குரிமையற்ற சமுதாயம்

கருப்பு வைரமொன்று
காலடி பதிக்கிறது
வெள்ளை மாளிகையில்

ஆயிரம் கோடி மக்களின்
ஆக்ஸிஜனாக இன்று ஒபாமா

மக்களாட்சியை
மக்களுக்காக
மக்களோடு நடத்த
இதோ
ஒபாமாவின்
புரட்சிப் பிரகடனம்

குண்டுகள் செய்யும் சமூகத்தை
குறுத்துக்களாக்குவோம் வா
மேடுகள் கரைத்து
மடுக்கள் நிரப்புவோம் வா
அழுக்குகள் செரித்து
பூக்களை வளர்ப்போம் வா
பாலைகள் முளைவி
வெள்ளங்கள் திருப்புவோம் வா
தூர்ந்துவிட்ட பொருளியலை
தூர்வாற உடனே வா வா வா

Series Navigation

author

ரஜித்

ரஜித்

Similar Posts