ஏமாற்றுக்காரி

This entry is part [part not set] of 60 in the series 20040429_Issue

சாந்தி மனோகரன்


மருத்துவரும் ஊராரும் சொன்னார்கள்
இரண்டொரு நாள்தான் ஆத்தாவின்
ஆயுள் கணக்கென்று…!

உறவினர் வீட்டுக்குச் சென்றாலே
பிரிவு தாக்காவண்ணம் பார்த்துக்கொள்ளும் ஆத்தா
பரிதவிக்கவிட்டு பிரிந்து செல்வாளோ என
எண்ணிக்கொண்டதால் அவர்தம் வார்த்தைகளை
நம்பவில்லை நான்…!!

இரு நாட்கள் உருண்டோடின
மருத்துவரும் ஊராரும் உயர்ந்து நின்றனர்
அவர்தம் கணிப்புகள் சரியானதால்…ஏனோ
என் நம்பிக்கையை தகர்த்தெறிந்து
இறந்துபோன ஆத்தாமட்டும்-மனதில்
உறைந்துபோனாள்-ஒரு
ஏமாற்றுக்காரியாக…!!!

shanthi_yem@yahoo.com

Series Navigation

சாந்தி மனோகரன்

சாந்தி மனோகரன்