This entry is in the series 20090205_Issue

செல்வராஜ் ஜெகதீசன்



சமையல் கியாஸ் தீர்ந்த
ஒரு அதிகாலைப் பொழுதில்
பள்ளிக்குப் போகும்
மகனுக்கு கொடுத்தனுப்ப
ஏதாவது வாங்கிவர
இறங்கி நடந்த தெரு
மார்கழி மாதக் குளிரில்
சில்லிட்டிருந்தது.
வெண்ணிற உடையில்
உடற்பயிற்சிக்காக
ஓடியபடி ஒருவனும்
இடது கண்ணில்
கட்டொன்றோடு
கையில் காரியர் சகிதம்
கட்டிட வேலைக்குப் போகும்
மற்றொருவனும்
சிகரெட் ஒன்றோடு
செல்போனில் பேசியபடி
இன்னொருவனும் ஆக
சிக்னலைக் கடந்த அந்த
காலைப் பொழுது

இன்னமும் சில்லிட்டுக் கொண்டிருக்கிறது
உள்ளே ஏதேதோ சொல்லியபடி.

Series Navigation