எச். பீர்முஹம்மது
ஈராக் மீது அமொிக்காவின் போர்தொகுப்பு நடவடிக்கையானது சர்வதேச அளவில் நவ. ஏகாதிபத்தியம் குறித்த புதிய புாிதல்களை உண்டு பண்ணியிருக்கின்றன. ஏகாதிபத்தியம் தன்னளவில் ஓர் அதிகாரத்துவ அமைப்பாக இருக்கிறது. அமொிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாறு என்பது அதனால் தொடர்ச்சியான தன்மை கொண்டதாக இருக்கிறது. ஏகாதிபத்தியம் சார்ந்த புாிதல் சர்வதேச அளவில் அதன் போர் நடவடிக்கையை தொடர்ந்து ஏற்பட்டுள்ளது. அமொிக்க ஏகாதிபத்தியத்தை குறித்து அறிந்து கொள்ளும் முன் அதன் இராணுவ இயந்திரம் குறித்து அறிவத அவசியமானதாகும். இராணுவ இயந்திரம் எனப்படுகையில் அதன் படைத்தலைமை/ யூனிட்டுகள்/ படைப்பிாிவுகள்/ பாதுகாப்பு அமைச்சகத்தின் நிர்வாக இயந்திரம்/ தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் அதன் உறுப்புகள்/ அமொிக்காவின் இராணுவ அரசியல் தலைமையை வழிநடத்தும் சிந்தனை ஆலைகள்/ இராணுவ பிரச்சனைகளை விவாதிக்கும் காங்கிரசின் கமிட்டிகள்/ துணைக் கமிட்டிகள் ஆகியவை அடங்கும். அமொிக்காவின் நவீன இராணுவ வாதம் என்பது ஏகாதிபத்தியத்தின் விளைபொருளாகும். தன்னுடைய இரு வடிவங்களிலுமே அது பிந்தைய முதலாளித்துவத்தின் (latecapitalism) ஜீவாதார வெளிப்பாடாகும். இராணுவ பலம்/ ஆயுத பெருக்கம் என்ற வகையில் முதலாளித்துவ அரசுகளின் வெளி மோதல்களின் போத பயன்படுத்தப்படுகிறது. இன்னொரு வகை பாட்டாளி வர்க்கத்தின் சகலவிதமான ஒடுக்கு முறைகளையும் நிகழ்த்துகிறத. அதனின் சொவியத் அபாயம் அல்லது கம்யூனிச அபாயம் என்ற பனிப்போர் காலகட்டத்து நிலைபாடும் இத்தகையது தான். அதன் பேரரசு என்பது நாட்டின் உள்ளேயிருந்து ஆரம்பமாகிறது. அதனுள்ளிருந்து தான் உலகையை மறு கண்டுபிடிப்பு செய்கிறது. செவ்விந்தியர்களை சுட்டு தள்ளுவதிலிரந்த நீச்ரோக்களை அடிமைப்படுத்துவதிலிருந்தும் இது ஆரம்பிக்கிறது. 19-ம் நூற்றாண்டில் மட்டுமே அமொிக்கா 114 யுத்தங்களை நடத்தியிருக்கிறது. 1846-1848-ல் மெக்சிக்கோவுடன் நடந்த யுத்தமும் இதில் அடங்கும். இந்த யுத்த நடவடிக்கையின் மூலம் மெக்சிகோவின் பரப்பில் 2/3 பங்கை அமொிக்கா தன்னுடன் இணைத்துக் கொண்டது. பசிபெருங்கடல் பகுதியை அதன் உள்நாட்டு ஏாியாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஹவாய் தீவுகள் மற்றும் பிலிப்பைன்ஸ் தீவுகளை தன் வசமாக்கி கொண்டது. ஸ்பெயின் மீதான தாக்குதல் நடவடிக்கையும் இத்தகையது தான்.
இரண்டாம் உலகப்போர் காலகட்டம் என்பது உலகியல் வரலாற்று பிரதிகளுக்கான தொடக்கம். தன் பாசிச நடவடிக்கை மூலம் சுமார் அறுபது இலட்சம் யூதர்களை கொன்று குவித்த ஹிட்லாின் செயலானது பாசிசம் பற்றிய புதிய புாிதலை அன்று வெகுஜன மத்தியில் ஏற்படுத்தியது. அந்த போாில் ஹிட்லர் கொல்லப்பட்ட பிறகு பனிப்போர் காலகட்டம் ஆரம்பமானது. சோசலிசம் – ஏகாதிபத்தியம் என்ற இரு எதிாிணைகளாக உலகம் புாிந்தது. இந்த காலகட்டத்தில் சோவியத் தலைமையிலான சோசலிச முகாமின் தகர்வுக்கு அமொிக்க ஏகாதிபத்தியம் பயன்படுத்திய யுக்தியே இஸ்லாமிய அடிப்படை வாதத்தை மீள் கட்டுமானம் செய்து அதன் மூலம் தன்னை தகவமைத்து கொள்வது.
இஸ்லாமின் தொடக்க கால வரலாறு என்பது வித்தியாசமான நிகழ்வுகளை கொண்டது. அதற்கான தனித்தன்மைகள் மற்றம் வரையறைகள் கொண்டது. முகமது நபியின் வரகை பல்வேறு விதமான குழப்பங்களாலும்/ கிளர்ச்சியாலும்/ கலகங்களாலும் உருகுலைந்திருந்த அரேபிய மண்டலத்தை புனரமைப்பு செய்வதாக இருந்தது. அக்கால கட்டத்தில் புதிய மதத்திற்கான தேவையாகவும் அச்சூழல்இருந்தது. மதங்கள் தங்களுக்கு மதம் தேவை என்று உணர்வதோடு மக்களின் மதத் தேவைகளையும் உணர்கின்றவர்களால் நிறுவப்படுகின்றன என்றார் ஏங்கெல்ஸ். கிறிஸ்தவத்தின் தோற்றமும் இவ்வாறானது தான். கிறிஸ்தவம் அதன் தொடக்க காலத்தில் எப்படி இருந்தது என்பதை யோவானின் சுவிசேஷத்தை படித்து தொிந்து கொள்ள முடியாது. கட்டுப்பாடற்ற குழப்பமான வெறித்தனம்/ கிறிஸ்தவ அறநெறி என்று கூறப்படுவதன் அடிப்படையில் குறிப்பிடுவதை உடம்பை துன்புறுத்துவது/ கோட்பாடுகளின் தொடக்க நிலைகள்/ பற்பல தீர்க்க தாிசனங்கள் ஆகியவற்றை தான் அதில் காணலாம். இணைக்கப்படுத்தப்பட்ட கோட்பாடுகளுடன் புதிய படிவம் பெற்ற கிறிஸ்தவம்/ முதலில் ரோமானியர்களுக்கு எதிர்ப்பு தொிவிப்பதற்காகவே உருவாகியிருந்த போதிலும்/ அந்த ரோமானியர்களே பிற்காலத்தில் விரும்பக்கூடியதாக மாறிவிட்டது. சக்கரவர்த்தி கான்ஸ்டாண்டைன் தாம் இந்த புதிய மதத்தை ஏற்றுக் கொள்வது ரோமானிய உலகின் ஏதேச்சதிகாாி என்ற நிலைக்கு தம்மை உயர்த்தி கொள்வதற்கு சிறந்த வழி என்று கண்டார். இவ்வாறு சக்கரவர்த்தி தன் அதிகாரத்தை நிலைப்படுத்தி உள்ளொழுங்காக மாற்றும் கருவியாக மதத்தை கண்டார். ஆனால் இஸ்லாம் மக்காவின் ஆதிக்கம் பெற்றிருந்த வர்த்தக பூர்ஷ்வாக்களின் மதமாக இருந்தது. இந்த வர்த்தகர்களுக்கு மாறாக இனக்குழுக்களாக தங்களை பாவித்துக் கொண்ட பதூயின்கள் என்ற நாடோடிகள் இருந்தார்கள். இருவருக்குமிடையே அடிக்கடி சண்டைகள் நடந்தன. நாடோடிகளின் தொழிலே உணவுக்காக கொள்ளையடிப்பது./ இதன் விளைவாக பல கொள்ளை போர்கள் நடைபெற்றன. ஓருவகையில் புனித போர்கள் அனைத்தும் கொள்ளை போர்களே. அன்றைய ரோமின் சர்வாதிகாரத்திற்கு எதிராக அடிமைகள்/ விவசாயிகள்/ தொழிலாளர்கள் ஆகியோர் கிளர்ச்சி செய்தார்கள். இதில் முக்கியமானதுஅல்பி இயக்கம். இவர்கள் வடக்கு இத்தாலியிலும்/ தெற்கு பிரான்சிலும் திருச்சபைக்கு எதிராக கலகம் செய்தார்கள். அன்று திருச்சபையே அரசமைப்பை அதிகாரம் செலுத்தும் சாதனமாக விளங்கியது. அன்று ஐரோப்பியாவில் திருச்சபைக்கு எதிராக பல்வேறு விதமான போராட்டங்கள்/ கிளர்ச்சிகள் நடைபெற்றன. அவற்றில் பல ஒடுக்கப்பட்டன. இதன் விளைவாக ஏற்பட்டதே புரொட்டஸ்டாண்டு இயக்கம். மார்டின் லூதர் கிங் தலைமையில் புலொட்டஸ் டாண்டுகள் திருச்சபைக்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். அதன் விளைவாக அடிப்படைவாத கிறிஸ்தவம் விடுதலை இறையியல் கோட்பாட்டு கிறிஸ்தவமாக மாறியது. இன்றும் கூட அமொிக்காவில் அடிப்படை வாத கிறிஸ்தவம் வலுவாக இருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றி வெளிப்படுத்தும் மேற்கத்திய ஊடகங்கள் இந்த கிறிஸ்தவ அடிப்படைவாதம் பற்றி கண்டுகொள்வதில்லை. அடிப்படை வாதம் என்றாலே இஸ்லாம் தான் என்றிருப்பதற்கு காரணம் அதன் நிறுவனமயதன்மை தான். கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் அரபுலகின் வரலாறு தூய்மையான மதம் என்ற பெயாில் நடத்தப்பட்ட கொடுமைகளின் நீண்ட பட்டியலாகவே இருக்கிறது. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டிற்கும் கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட காலம் இஸ்லாத்தின் பொற்காலம். மிகச்சிறந்த இஸ்லாமிய வரலாற்றாசிாியர் இபின் கல்தூன் இந்த காலத்தவர் தான். அறிவியல்/ தத்துவம்/ மருத்துவம் இவற்றில் குறிப்பிடதக்க ஆய்வுகளும் பணிகளும் நடைபெற்றன. இக்காலகட்டத்தில் அறிவியல் வளர்ச்சியடைந்ததற்கு காரணம் இஸ்லாத்திற்குள்ளே இருந்த வலுவான அறிவு பாரம்பாியம் தான். இந்த பாரம்பாியத்தை சார்ந்த முஸ்லிம் சிந்தனையாளர்கள் முத்தஸிலாக்கள் என அழைக்கப்பட்டனர். (தற்பொழுது இந்த பாரம்பாியம் சிதைந்து விட்டது) மனிதனின் தாராள விருப்புறுதியை வற்புறுத்திய இவர்கள் எல்லாமே முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு விட்டதால் இறைவனிடத்தில் எல்லாவற்றையும் ஒப்படைப்பதை தவிர வேறு வழியில்லை என்ற விதிவாதிகளின் கோட்பாட்டை நிராகாித்தனர். விதிவாதம்/ நம்பிக்கை வாதம் முன்னை விட இறுக்கமாக இப்பொழுது தன்னுடைய வேலையை செய்கிறது. போர் முனையில் நிற்கும் ஈராக் மக்கள் மீது இதனை அமல்படுத்த முடியும். அதன் மூலம் அவர்கள் எல்லாம் அவன் செயல் என்ற விதி வாதத்திற்குள் கொண்டு வரப்படலாம்.
இதே காலகட்டத்தில் இன்னொரு அமைப்பு இஸ்லாமை கிரேக்க தத்துவ ஞானத்துடன் இணைத்த விளக்கம் கண்டது. குறிப்பாக பிளேட்டோவின் கருத்துக்களை பெரும் அளவில் எடுத்துக் கொண்டு இஸ்லாமுக்கு புதிய முறையில் பொருள் கூற முயன்றது. இப்பிாிவு தான் இஸ்மாயிலி பிாிவு. பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது என்பதை விளக்குவதற்கு கூட அவர்கள் கிரேக்க தத்துவத்தை பயன்படுத்தினர். இந்த பிாிவின் தலைவர்களாக வந்தவர்கள் முன்னணி பாரசீக அறிஞர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். இஸ்மாயிலிகளின் உட்பிாிவுகளில் ஒன்று தான் கராமித்தா அல்லது கரமேத்தியன் என்பது கி.பி. 874-ல் ஹமதான் கர்மத் என்பவரால் நிறுவப்பட்டது. இப்பிாிவு இஸ்லாமிலேயே மிகவும் புரட்சிகரமான பிாிவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இவர்கள் சோசலிச கருத்துக்களை உள்வாங்கி கொண்டனர். அவர்கள் உள்நாட்டு மக்களிடையே குறிப்பாக நபாட்டிய விவசாயிகள்/ கைவினைஞர்கள் ஆகியோாிடையிலும்/ அரேபியர்களிடையிலும் தீவிர பிரசாரம் நடத்தினர். இந்த காரணத்தால் தான் தற்கால எழுத்தாளர்கள் சிலர் இவர்களை இஸ்லாமின் போல்ஷ்விக்குகள் என்று அழைக்கிறார்கள்.
இம்மாதிாியான மாற்றங்கள் நிகழ்ந்து வரும் சூழலில் தான் அப்துல் வஹ்ஹாப் நஜ்தி தலைமையிலான இஸ்லாமிய சீர்திருத்த வாதம் அல்லது பழமைவாத இயக்கம் ஏற்பட்டது. இவர்கள் சவுதி அரேபியாவை தலைமையிடமாக கொண்டு விளங்கினார்கள். இவர்களின் வாாிசுகளே சவூதி அரேபியாவின் தற்போதைய ஆட்சியாளர்கள். இவர்கள் இஸ்லாமிற்கு பிரதி சார்ந்த அடிப்படை வாத விளக்கங்களை கொடுத்தார்கள். இஸ்லாம் உலகமயப்படுத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். உலகமயமாக்கலின் விளைவு சம காலத்தில் எம்மாதிாியான தாக்கங்களை உண்டு பண்ணியிருக்கிறதோ அம்மாதிாியான விளைவுகளை உண்டு பண்ணியது இவர்களின் கோட்பாடு. எப்பொழுதுமே சமூக ாீதியான ஒடுக்குமுறை அதிகமாகும் போது சமூக மக்கள் தங்களை விதி/ நம்பிக்கை வாதம் பக்கம் திருப்பி கொள்கிறார்கள். அவர்களின் கோட்பாட்டு திருப்பலுக்கு இது சாதகமாக அமைந்தது. இதே காலகட்டத்தில் மற்றொரு பழமைவாத இயக்கம் இமாம் அல்-காஸியின் தலைமையில் எழுந்தது.
அல்காஸி தெய்வீக வெளிப்பாட்டை காரண அறிவுக்கு மேலானதாகவும்/ விதியை மனிதனின் கட்டற்ற செயலுறுதிக்கு மேலானதாகவும் முன்னிறுத்தினார். காரண காாியம் இவற்றிற்கிடையேயான உறவின் சாத்தியபாட்டை மறுத்த அவர் என்ன நடக்கும் என்று மனிதனால் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியாது. கடவுள் மட்டும் தான் அறிவார் என்றார். மேலும் கணிதவியலை இஸ்லாத்திற்கு எதிரானதாகவும்/ அது மத நம்பிக்கையை குலைத்து விடும் போதை பொருள் என்றும் கண்டனம் செய்தார். இவாின் ஆட்சி காலத்தில் பல்வேறு இஸ்லாமிய சிந்தனையாளர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு இஸ்லாமிய விரோதி என்ற முத்திரை குத்தப்பட்டது.
பனிப்போர் காலகட்டம் என்பது ஒருவகையில் ஏகாதிபத்தியம் / சோசலிசம் இவற்றிற்கிடையேயான முரண்பாடாக இருந்த நிலையில் மற்றொரு வகையில் அடிப்படை வாதத்தின் எழுச்சியான காலகட்டம். சவூதி அரேபியாவை மையப்படுத்திய அடிப்படை வாதம் உலகம் முழுவதும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ஏகாதிபத்தியத்தோடு கைகோர்த்து கொண்டது. உலகமயமாக்கலுக்கு பிறகு ஏகாதிபத்தியம் என்பது ஐரோப்பிய யூனியனை சேர்த்து தான் குறிக்கும். உலகம் என்ற கருதுகோள் மீதான நம்முடைய பார்வை தவறானதாக இருக்கிறது. நாம் காலையில் எழும்பும் போது ஒன்று வீட்டிலிருந்து எழுகிறோம். இன்னொன்று உலகத்தினின்று எழகிறோம். நம்முடைய உளவியல் அந்நிய பாடாக இருப்பதால் நாம் அவ்வாறு பிாித்து பார்க்கிறோம். இந்நிலையில் அமொிக்கா உலகம் என்பதையே தானாக பார்க்க நிர்பந்திக்கிறது. குழந்தை மனங்களில் இம்மாதிாியான கட்டமைப்பை நுண்தளங்களில் ஊடகங்கள் ஏற்படுத்துவதை நாம் காண முடிகிறது. இதன் ஒரு பகுதி தான் வால் போன்ற அமைப்புடைய வளைகுடா பிராந்தியத்தை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நடவடிக்கை 1953-ம் ஆண்டில் சி.ஐ.ஏ. ஏற்பாட்டில் நடந்த புரட்சியில் ஈரானின் முஷ்டாக் பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டு ரஸா ஷா பஹ்லவி பதவியில் அமர்த்தப்பட்டார். பிாிட்டன் எகிப்தின் நாசரை குறி வைத்தது. இந்தோனேசியாவில் சுகர்ணோ தூக்கியயெறியப்பட்டு சுகர்டோ பதவியில் அமர்த்தபட்ட இரத்தப் புரட்சியில் பத்து லட்சம் பேர் மடிய நோிட்டது. ஏகாதிபத்தியத்தின் அடுத்த முக்கிய இலக்காக விளங்கியது ஆப்கானிஸ்தான். எண்ணெய் வளமிக்க காஸ்பியன் கடல் பகுதி அதன் பிம்ப உள்நாட்டு ஏாியாக விளங்கியது. ஆப்கானிஸ்தானின் எண்ணெய் படுகைகள் ஏகாதிபத்தியத்தின் புவி அரசியல் கூறாகும்.(பநடி-ிடிடவைைஉயட) புவி – அரசியல் என்பது பிரடாிக் ஜேம்சன் சொல்வது மாதிாி பிந்தைய முதலாளித்துவத்தின் அழகியல் வெளிப்பாடு. தன்னை புவியியல் ாீதியாக ஸ்தாபித்து கொள்வதற்கான யுக்தியே அதன் ஆக்கிரமிப்பு போர். ஆப்கானிஸ்தானின் துயர வரலாறு இதைத்தான் காட்டுகிறது. 1973-ம் ஆண்டு மன்னர் ஷாகிர்ஷா தூக்கியயெறியப்பட்டு அதன் பின்னர் அவருடைய உறவினர் முகம்மது தாவூத் ஆப்கானின் ஆட்சியை கைப்பற்றுகிறார். அதன் பின்னர் 1978 இல் பப்ராக் கர்மல் என்பவாின் தலைமையில் இடதுசாாி அரசு ஏற்படுகிறது. அதன் பின்னர் தான் நாடு முழுவதும் அரசியல் கலகங்கள் ஏற்படுகின்றன. இதனின் நீட்சியாக அமொிக்காவின் இராஜேந்திர ாீதியான நடவடிக்கை ஆரம்பமானது. இஸ்லாமை மீட்பதற்கான புனிதப்போர் என்று இஸ்லாமிய இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்தது அது. அரசியல் நிலையற்ற தன்மைக்கு முடிவு கட்டுவதற்காக சோவியத் யூனியன் ஆப்கன் மீது 1979-ம் ஆண்டு படையெடுத்தது. (ஒரு வகையில் இது பிரேஷ்னேவ்வின் புவி – அரசியல் நடவடிக்கையாகும்). இதன் பின்னர் அமொிக்கா தன் கோட்பாட்டிற்கு செயல்வடிவம் கொடத்தது. சவூதி அரேபியாவை தலைமையிடமாக கொண்டு பல புனிதப் போர் குழுக்கள் ஏற்பட்டன. இதனுடன் சி.ஜ. ஏவுடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பும் இணைந்து கொண்டது. இதன் விளைவாக சூடான்/ எகிப்து/ அல்ஜீாியா/ பாகிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இஸ்லாமிய இளைஞர்கள் புனிதப் போருக்காக பயிற்சியளிக்கப்பட்டனர். அவர்கள் முஜாஹிதீன்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அமொிக்கா தன் இராணுவ ஒதுக்கீட்டில் பெருமளவை இதற்கு செலவிட்டது. அன்றைய அமொிக்க ஜனாதிபதி ாீகன் வெளிப்படையாகவே இவர்களை சாத்தான்களை எதிர்த்து போராடும் துணிச்சல் மிக்க விடுதலை வீரர்கள் என்று அறிவித்தார். (இன்று இவர்கள் தான் அமொிக்காவில் பயங்கரவாதியாக உருமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்கள்)
சோவியத் யூனியன் படைகளின் பின் வாங்கல் மற்றும் சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஆகியவற்றை தொடர்ந்து தலிபான்கள் உருவானார்கள். ஒசாமா பின்லேடன் என்ற சர்வதேச உருவம் ஏற்படுத்தப்பட்டது. ஆப்கானில் அதிபராக இருந்த நஜிபுல்லா தூக்கிலிடப்பட்டார். அம்மாதிாியான சூழல்களின் நீட்சியாக செப்டம்பர் 11 நிகழ்வுக்கு பிறகு அமொிக்கா தன்னையே மறுபிரதிபலிப்பு செய்து கொண்டது. ஓசாமா பின்லேடன் சர்வதேச பயங்கரவாதியானர். சோவியத் யூனியன் வீழ்ச்சிக்கு பிறகு வதந்திகள் எல்லாம் அமொிக்காவில் அதிகார பூர்வ தகவல்களாக மாறின. செய்திகள் தொடர்ச்சியற்றவை. தன்னை சுய-குறிப்பு (ளுநடக துரஅிைபே) செய்து கொள்பவை. சி.என்.என். பி.பி.சி. மற்றும் எ.பி.சி இதைத்தான் செய்கிறது. ஏகாதிபத்தியத்தின் அதிகார பூர்வ தகவலாக்க கருவியாக இவை செய்யப்படுகின்றன. போர் பிரகடனம் அறிவிக்கம் நேரத்தில் புஷ் முடிவெட்டி கொண்டிருந்த காட்சியை பி.பி.வி. ஒளிபரப்பியது. பின்னர் அதற்கு மன்னிப்பு கேட்டு கொண்டது. மறுமுனையில் சதாமை உருமாற்றமாக/ போர்ஜாியாக சித்தாித்தது. நிஜமான புஷ் என்ற ஒரு பக்கத்தில் சதாம் போலியான சதாமாக காட்டப்பட்டார். அவாின் பிரகடனமே மிமிக்ாியாக்கப்பட்டது. மீடியாக பயங்கரவாதம் இந்த இடத்தில் தன் காாியத்தை லாவகமாக நிறைவேற்றுகிறது.
அமொிக்க ஏகாதிபத்தியத்தின் தற்போதைய அவசர நடவடிக்கைக்கு அதன் டாலர் சந்தையும் காரணமாகும். தற்றொழுது உலக சந்தையில் யூரோவே முன்னிற்கிறது. டாலருக்கு இரண்டாம் இடம் தான். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் இம்மாதிாி டாலர் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது. அதனை ஈடு செய்யும் விதமாக பெட்ரோ – டாலராக மாற்றம் செய்ய விரும்புகிறது. அது எப்பொழுதுமே ஆயுத டாலர் என்பதிலிருந்து தான் பெட்ரோ டாலருக்கு மாற்றம் செய்யும். செப்டம்பர் 11 நிகழ்வுகளுக்கு பிறகு அமொிக்க பாதுகாப்பு ஆலோசகராக இருந்த பிக்னீவ் பிரெஸெஸென்கியை சந்தித்து இஸ்லாமிய அடிப்படை வாதம் ஒரு உலகளாவிய பிரச்சனையாக வளர்ந்துள்ள இன்றைய சூழலில் அமொிக்காவின் முந்தைய நடவடிக்கைகளை மீள்பாிசோதனை செய்யும் போது அவை தவறானவை என்று தோன்றுகிறதா எனக் கேட்டதற்கு அவர் உலக வரலாற்றில் எது முக்கியம், தலிபானா அல்லது சோவியத் சாம்ராஜ்ஜியத்தின் வீழ்ச்சியா, ஒரு சில கலாச்சார முஸ்லிம்களா அல்லது மத்திய ஜரோப்பாவின் விடுதலையும் பனிப்போாின் முடிவுதா, என்று எதிர் கேள்வி கேட்டார். பிரெஸெஸென்கி குறிப்பிட்ட ஒரு சில கலாச்சார முஸ்லிம்கள் இந்த உலகத்தை மாற்ற விரும்பினார்கள் . அதில் அவர்கள் வெற்றி பெறவும் செய்தார்கள். இன்று நூறு கோடி முஸ்லீம்கள் 48 நாடுகளில் பரவி வசித்து வருகிறார்கள். இந்த 48 நாடுகளில் ஒன்று கூட ஒரு நிலையான ஜனநாயக அரசியலமைப்பை இன்னும் உருவாக்கி கொள்ளவில்லை. ஜனநாயக அரசமைப்பு என்பது ஒருவகையில் ஏகாதிபத்தியத்தின் காாியார்த்தமான நடவடிக்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும். எனவே தான் அமொிக்க வளைகுடா பிராந்தியத்தில் மன்னராட்சி முறைக்கு மாறான ஜனநாயக அரசமைப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது. இன்று வறுமையின் பிடியில் சிக்கியிருப்பவர்கள் உலகளாவிய நிலையில் அதிகம் முஸ்லிம்கள் தான். இந்த விஷயம் அடிப்படை வாதிகளால் திட்டமிட்டு மறைக்கப்பட்டு வருகிறது. சமூக – கலாச்சார ஒடுக்குமுறையைப் பற்றியே அதிகம் பேசப்பட்டு வருகிறது. ஆனால் பொருளாதார ஒடுக்குமுறை என்பது அடிப்படை வாதத்திற்கு சவாலான விஷயம் என்பதால் இது மேல்நோக்கப்பட்டு வருகிறது. அடிப்படைவாதத்திற்கு இவ்வுலகம் இரண்டாம் பட்சமானது. எனவே காயம்பட்ட ஆத்மாக்களுக்கு போின்ப மருந்து தடவப்படும். சிற்றின்பத்திலிருந்து போின்பத்திற்கு மாற்றம் செய்யும் அதிகார தலைமையின் கருத்தியல் ஏகாதிபத்தியத்திற்கு சாதகமான அம்சம். தீர்க்கதாிசியின் பிறப்பிற்கு பிற்பாடு தான் அரேபிய மண்டலத்தில் வலுவான அரசமைப்பு உருவானது. பிறகு அம்முறையே நான்கு கலிபாக்களால் பின்தொடரப்பட்டது. பின்னர் அப்பாஸிட்/ உமய்யத் என்ற இரு வம்ச பரம்பரையின் ஆட்சியாக மாறிற்று. இவர்கள் தங்கள் பேரரசின் எல்லைகளை விாிவாக்கினர். அப்பாஸிட் பேரரசு மிகவும் பரந்து விாிந்ததாகவும் மிகவும் வித்தியாசமான பல்வேறு வகை மக்களை உள்ளடக்கியதாகவும் இருந்தது. கலீபாவுக்கு கப்பம் செலுத்துவதம் மத ாீதியாக அவருக்கு விசுவாசமாக இருப்பதும் ஆகிய அம்சங்களே இவர்களிடையே இருந்தன. ஆனால் கடுமையான வாிவசூல் முறைகளும்/ அளவுக்கதிகமான சுரண்டல்களும் காரணமாக அரசுக்கெதிரான கிளர்ச்சிகள் பல இடங்களில் நடைபெற்றன. பல சமயங்களில் இந்த கிளர்ச்சிகள் மத உட்பிாிவுகளாக வடிவம் பெற்றன. சுரண்டலை முதலாளித்துவத்தின் அறிவுச் செயல்பாடு என்றார் மார்க்ஸ். முதலாளித்துவம் பாட்டாளி வர்க்கத்தை சுரண்டுவது மூலம் தன்னை இருத்திக் கொள்கிறது. இஸ்லாம் செயல்முறை சார்ந்த அறிவு வாதத்தை அதிகம் வலியுறுத்துகிறது. குர் ஆனில் பல இடங்களில் நீங்கள் வானத்தை பூமியை பார்க்கவில்லையா, இந்த மரம் செடி கொடிகளை பார்க்கவில்லையா, என்று கூறுகிறது. சுய அவதானிப்பின் காாியமே இது. இன்றைய உலகமயமாக்கல் நான் சிந்திக்கிறேன் என்பதிலிருந்து நான் வாங்குகிறேன் என்பதாக மனித இருப்பை மாற்றி விட்டது. இதன் தொடர்ச்சியாக ஏகாதிபத்தியம் ஆயுதம் வாங்கு என்கிறது. பின்னர் பெட்ரோலை வழங்கு/ என்பதாக மாற்றுகிறது. இதில் பெட்ரோல் வழங்கும் சாதனங்களாக வளைகுடா பபிராந்தியங்கள் இருக்கின்றன.
இன்றைய உலகின் எல்லா இஸ்லாமிய நாடுகளிலும் முற்போக்கான நடவடிக்கைகளோ/ புதிய கண்டுபிடிப்புகளோ வித்தியாசமான அணுகுமுறைகளோ இல்லை. இந்நிலையில் இஸ்லாமிய சகோதரத்துவம்/ ஒருமைப்பாடு என்ற புனைவு போர்த்தப்படுகிறது. இது வரலாற்றில் சாத்தியமில்லை என்பதே அதன் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன.
மாற்றுக்கருத்துக்கள்/ நிலைபாடகள் என்றைக்குமே அடிப்படைவாதத்திற்கு ஏற்புடையதல்ல. இஸ்லாமிய தத்துவ தாிசன பரம்பரையான சூபி இயக்கம் பாரசீகத்தில் கடும் தாக்குதலுக்கு உள்ளானது. சூபிகளின் தலைவர் ஹல்லாஜ் மன்சூர் என்பவர் அங்ககீன சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவாின் உடல் மாமிச கூறாக்கப்பட்டது. மரபு வழி நம்பிக்கை கொண்ட ஷியா பிாிவினர் உலகம் முழுவதும் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். (பக்ரைன் நாட்டில் அலி என்ற ஷியா பிாிவின் தலைவர் பெயர் வைப்பது கூட சட்ட விரோதம்) மின்னஞ்சல்கள் கூட கண்காணிக்கப்படுகின்றன. அது அடிப்படை வாத தொடக்கங்களோடு வருகிறதா என்பதே இதற்கு காரணம். சிறைக் கைதிகளை கண்காணிக்க ஏற்படுத்தப்பட்டிருந்த ஒருவழி கோபுரத்தை விட கடுமையான விஷயம் இது. அடிப்படை வாத நாடான சவூதி அரேபியா ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு ேமைந என்ற வணிக குறியீடு கொண்ட பொருட்களை தடை செய்தது. குர் ஆனில் வரும் யூதர்களின் தேவதையின் பெயர் கொண்டது அந்த குறியீடு என்பதே அதற்கு காரணம். இதே நாடு தான் இன்று ஏகாதிபத்தியத்தின் கொள்கலனாக விளங்குகிறது. தாங்கள் அகச்சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறோம் என்பது கூட சோசலிச அபாயம் என்கிற பெயரால் மறைக்கப்படுகிறது. இஸ்லாம் போற்றும் பண்புமுறை/ சோசலிசம் போற்றும் பண்பு முறையுடன் சில அம்சங்களில் ஒன்றுபடுகிறது. பண்பு முறைகள் தான் ஒரு கோட்பாட்டிற்கு அல்லது ஒரு மதத்திற்கு உயர்ந்த ஒரு பாிணாமத்தை தருகின்றன. இப்பண்பு முறைகளை/ லட்சியத்தை முறையிலன்றி/ தற்கால வரலாற்று ாீதியிலான சக்திகளை கருத்தில் கொண்டு வலியுறுத்துவதன் மூலம் இஸ்லாத்திற்கும் சோசலிசத்திற்குமிடையே ஆக்கபூர்வமான கூட்டிணைப்பை உருவாக்க முடியும். இன்று பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் குறிப்பாக வளைகுடா நாடகள் நவகாலனியத்திற்கு உட்பட்டு விட்டன. ஈராக் மீதான அமொிக்க போாின் விளைவு அதுவாகத் தான் இருக்கும். மறுபுறம் அந்நாடுகளோ லட்சியவாதம்/ போின்பவாதம் பற்றி அதிகம் பேசுகின்றன. இந்த அடிப்படை வாதம் ஏகாதிபத்தியத்தின் கருத்தியல் விளக்கீடு சார்ந்ததாக மாறி விட்டது. அவை சார்புநிலை பொருளாதாரத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு வருகின்றன. (பொருளாதார கோட்பாடு அதன் நடவடிக்கைகள் பற்றிய தெளிவான பார்வை இல்லாததும் இதற்கு காரணம்).
சமீப காலங்களில் அமொிக்கா ஆளும் வட்டங்கள் ஜீவாதார நலன்கள் என்பதை முன்னிலைப்படுத்துகின்றன. அவை 1981.இல் வெளியான அமொிக்கா தேசிய பாதுகாப்பு என்னம் நூலில் வெளிப்படையாகவே கூறப்பட்டுள்ளன. இந்நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. இராணுவ ாீதியாக மற்றவாிக்ள விஞிச் நிற்கும் வகையில் உறுதியான/ யதாாித்தமான பலாத்கார அரசியல் நடத்துவது தான் அமொிக்காவின் வெற்றியை நோக்கிய மிக சிறந்த பாதையாகும். இந்த வெற்றியை பலாத்கார அரசியல் வளைகுடா நோக்கி இன்று திருப்பப்பட்டுள்ளது. சூப்பர் ராணுவம்/ சூப்பர் ஆயுதம்/ சூப்பாி பெட்ரோல் என்பதாக தன்ன அங்கு வடிவப்படுத்துகிறது. இன்று இஸ்லாமிய நாடுகள்முழுவதும் அமொிக்காவிற்கு எதிராக எழுச்சி ஏற்பட்டு வருகிறது. இந்த வெகுஜன எழுச்சி வெறும் போர் எதிர்ப்பு நடவடிக்கையாக குறுகி விடாமல் இஸ்லாமிய நாடுகளின் ஜனநாயக மாற்றத்திற்கு வழிவகுக்க வேண்டும் இன்று அமொிக்காவிற்கு இலட்சிய வீரர்கள் எல்லாம் பயங்கரவாதிகளாக தொிகிறார்கள். பலவீனமானவர்களின் கோட்பாடாக பயங்கரவாதம் இன்று மாறியிருக்கிறது. நபியின் பிறப்புக்கு முன்பு அபிசீனிய மன்னன் அப்ரஹா என்பவர் மக்காவின் புனித ஆலயம் மீது படையெடுத்ததாக தொல்கதை உண்டு. அப்படையெடுப்பில் இறைவன் அபாபீல் என்ற பறவைகளின் காலில் ஸிஜ்ஜால் என்ற கூழாங்கற்களை கட்டி மன்னனின் யானைப்படை மீது வீசியெறச் செய்து மன்ன்ன பின்வாங்க செய்ததாக அக்கதை நீள்கிறது. இன்று அந்த கூழாங்கற்கள் நவீன வடிவம் எடுத்து குவைத்திலிருந்து வீசப்படுகின்றன/ இதில் பலனடையப் போவது அப்துல் வஹ்ஹாப் நஜ்த்யின் வாாிசுகளா அல்லது அப்ரஹாவா ? ஒரு மனிதன் தன் நிழலை கூட தாண்டமுடியும். ஆனால் காலத்த தாண்ட முடியாது. என்று யேன்ம்ாிதால் சொன்னது இஸ்லாம் விஷயத்தில் சாியாகவே பொருந்துகிறது.
***
peer13@asean-mail.com
- ஏகாதிபத்தியமும் அடிப்படை வாதமும் – வளைகுடா அரசியலை முன் வைத்து
- போர் நாட்குறிப்பு – ஏப்ரல் 5, 2003
- உணவு அருந்தும் நாகரிகம்
- பேதம் உணராத குழந்தைமை (அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 55 )
- பாரதத்தில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து [Narora Atomic Power Station]
- அறிவியல் துளிகள்-21
- வேதம்
- தேடுதல்
- பேட்ரியாட்டும் பேரீச்சம் பழமும் – இரண்டு
- மீளத்துடிக்கும் மனம்
- விந்தைதான்
- வழி மாறிய தென்றல்
- அவசியம் ஒரு அஸ்திவாரம்.
- நினைவுகள்
- சுகம்
- பாதாள ரயில் நிலையம் – உரைவெண்பா
- ர்ர்.. கீச்..கீச்…
- புஷ்-ப்ளேர் நடத்தும் ஈராக் போரின் விளைவுகளும் இந்தியாவும்
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 18 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?
- நினைத்தேன். சொல்கிறேன். இந்தியும். நந்திகளும்.
- Tamil children song cassettes
- Polynation is Pollination: Theatre and Arts from the Margins
- மானசரோவர் டாட்காம்
- கடிதங்கள்
- அலைவரிசை
- கு ை க ர யி ல்
- சைக்கிள்-
- சைக்கிள் முனி
- ரசிகன்
- மாடன் மோட்சம்