எளிதாய்

This entry is part [part not set] of 46 in the series 20031218_Issue

பவளமணி பிரகாசம்


பத்துக் காசு பெறாத சங்கதிகள்
பத்த வைக்குது பெருந்தீயை;
உப்புப் பெறாத சர்ச்சைகள்
உலையில் போடுது உறவினை;
அற்பமான சண்டைகள்தானே
வீட்டை, நாட்டை ஆட்டிடும்
கலகம் பிறக்கும் காரணம்!
பொறுமை அரிதாய் போனதோ ?
அகந்தை அதிகம் ஆனதோ ?
சிந்திக்காமல் உதிர்த்த சொல்லுக்கும்,
கவனக்குறைவான செயலுக்கும்
“மன்னிப்பு” என்ற மருந்தை நாடாமல்
கணவன் மனைவி பிணங்குவதோ ?
பந்தம் நீங்கி விலகுவதோ ?
ஒரு ஆணி குதிரைக்கு அடியாமல்
அரசே கவிழ்ந்து போனதாம்-
புல்லும் தடுக்குமாம் பயில்வானை,
எதையும் எளிதாய் ஒதுக்காமல்
முளையில் கிள்ளணும் வினைகளை.
————————————————-
pavalamani_pragasam@yahoo.com

Series Navigation