This entry is in the series 20040722_Issue

நளாயினி தாமரைச்செல்வன்


++ ++ ++ ++ ++ ++ ++ ++
அந்த மாலைப்பொழுதின்
மதுரமாக நீ.
சூாிய கதிர்கள் போல்
உன் விழிகள்.
உன் பார்வையில்
ஓர் குளிர்மை.
உன் தேசிப்பழ நிற மேனி
ஏனோ என்னை அதிகம் கொல்கிறது.
சூாியனோ
தன் சேவை முடித்து
ஓய்வு பெற
நீ மட்டும்
எனக்கு
எப்போதும் சூாியனாய்.
நீ குளித்து விட்டு
தலை முடியை
உதறிய
நீர்த்துளியில்
பூத்தது தான்
உன் மீதான
காதல்.
உன் குரல்
செவி வளி
பாய்ந்து
மனதை அள்ளும்.
உன் வார்த்தையின்
மென்மையில்
கன்னம் வைத்து
துயிலும் மனசு.
உன் தமிழ்த் தோட்டத்துள்
நீ கொய்து அனுப்பும்
வாசனை வார்த்தைகளின்
உறுதி
நிச்சயமாய்
உன் மீதான
காதலுக்கு
மாலை சூட்டும்.
இப்போதெல்லாம்
எப்போதும்
உன் நினைவாய்.
உயிரும் , மனசும்
என்னிடமில்லை.
அவை இப்போ புதிய
அத்தியாயத்தை
பிரசவித்து நிக்கிறது

நளாயினி தாமரைச்செல்வன்.
சுவிற்சலாந்து.
—-
thamarachselvan@hotmail.com

Series Navigation