என் விடுமுறை

This entry is part [part not set] of 17 in the series 20010715_Issue

அனந்த்


இன்றோடு விடுமுறை ஆச்சு-சென்ற

இரண்டரை வாரமும் எங்கேதான் போச்சு ?

குன்றிலும் மேட்டிலும் தாவி-எங்கும்

குதித்துச் சிரித்துக் களித்திட்டென் ஆவி

சென்றங் கியற்கையை மேவி-இளம்

சிறுவனைப் போலம கிழ்ந்துநான் கூவி

நின்றப டியென்றன் நாளை- நித்தம்

நிம்மதி யோடுக ழித்தவா(று)ஆளைத்

தின்றக வலைகள் ஓடி-இன்பத்

தேனென வாழ்க்கையைத் துய்த்திட்டுப் பாடி

என்றன்ம னையாளும் நானும் – கொஞ்சி

இன்புற நேரங்கி டைத்தினி யேனும்

ஒன்றாயி ருந்திட லாகும் – காலம்

உள்ளப டிக்கினி நன்றாகப் போகும்

என்றுப லப்பல திட்டம்-தீட்டிச்

சென்ற திரண்டரை வாரமும், *கட்டம்!

இன்றோடு விடுமுறை ஆச்சு-ஐயோ!

இரண்டரை வாரமும் இவ்வாறு போச்சு! (இன்றோடு…)

Series Navigation

அனந்த்

அனந்த்