என்ட வீடும் அப்புன்டேயும் கறுப்பு

This entry is part [part not set] of 41 in the series 20050415_Issue

வானரன்


கண்ணாடி பூக்கள்

நடிகர்கள்: பார்த்திபன்,காவேரி ,அஸீன்

நெறியாள்கை: சாஜகான்

மலையாளத்தில் சில வருடங்களுக்கு முன் வெளிவந்த என்ட வீடும் அப்புன்டேயும் என்ற படம் தமிழில் கண்ணாடி பூக்களாக மலர்ந்துள்ளது. இதில் (தமிழிலிலும்மலையாளத்திலும்) சிறுவனாக நடித்த அஸீனுக்கு தேசியவிருது கிடைத்துள்ளது மலையாளத்துக்காக. இவர் மலையாள நடிகர்கள் ஜெயராம் பார்வதி தம்பதிகளின் புதல்வராவர்.

பார்த்திபனின் முதல் மனைவி இறந்துவிட பக்கத்து; வீட்டு காவேரி பார்த்திபனை மணமுடிக்கிறார். அத்துடன் பார்த்திபனின் மகனுக்கும் தாயாகிறார். இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாகின்றனர். காவேரிக்கு பிள்ளை பிறக்கிறது. அனைவரதும் கவனம் பிள்ளை மேல் திரும்புகிறது. ஒரு நாள் வாசலில் பாடசாலை பேருந்து காத்து நிற்கின்றது. தலைவார தாயை எதிர்பார்த்து தனயன். பிள்ளை அழுகிறது. இந்த கணத்தில் பார்த்திபன் மகனை அடித்து விடுகிறார். மகன் கோபத்தில் பிள்ளை மீது பூச்சி கொல்லி மருந்தை தெளித்து விடுகிறார். பிள்ளை இறந்து விடுகிறது. பல விசாரனைகளுக்கு பின் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுகின்றார். மகனான அஸீனை சுற்றம் நண்பர்கள் என அனைவருமே வெறுக்கின்றனர். தாய் தந்தை மற்றும் தாத்தா தவறை உணர்ந்து அஸீன் மீது பாசம் காட்டுகின்றனர். உளவியல் மருத்துவர் சரத்பாபு கூற்றின்படி சீர்த்திருத்த பள்ளியில் இருந்து திரும்பும் அஸீனுக்காக மற்றொரு பிள்ளை பெற்று கொடுக்கின்றனர். அது அவனுக்கு நம்பிக்கையளிப்பதுடன் அவனை உறுதிப்படுத்திறது.

சிறப்பம்சங்கள்

– தமிழில் இவ்வாறான படங்கள் வெளிவருவது வெகு குறைவு.

– படத்தில் கூறப்பட்டுள்ள விடயம் தமிழுக்கு புதிது. மசாலா பட கருவுக்கு எதிரானது. (பழிக்கு பழி)

– காத்திரமான தர்க்கரீயான முடிவு.

– மலையாள மூலத்தை அப்படியே தமிழில் கொண்டுவந்தமைக்கு சாஜகானுக்கு பாராட்டுக்கள்.

– யதார்த்தமான காட்சி படிமங்கள்

– சிறப்பான நடிப்பு – குறிப்பாக அஸீன்

கவைலைக்குரியவை

– இவ்வாறான ஒரு கருவுக்கு மலையாளத்தில் தங்கி இருக்கவேண்டிய நிலை.

கறுப்பு

பல வெகுசன ஊடகங்கள் பாராட்டை அள்ளி குவிக்கின்றன.

சில வருடங்களுக்கு முன்னர் தேவதாஸ் படத்தை பல நூறு கோடி செலவளித்து தயாரித்த சன்ஜய் லீலா பன்சாலி யே இப்படத்தின் இயக்குனர்தயாரிப்பாளர்.

மிசல் (ராணி முகாஜி) ஆங்கிலோ இந்திய குடும்பத்தில் பிறந்த இவர் தனது 18 வது மாதத்திலேயே நோயினால் காது கேட்கமுடியாதவராக கண் பர்hவையற்றவராகின்றார்.

48 வயது டெபிராஜ் சகாய் (அமிதாப்) குடிகாரர் னநயக-டிடiனெ பாடசாலையில் ஆசிரியர். இவர் குடிபோதை காரணமாக பாடசாலையை விட்டு வெளியேற்றப்படுகின்றார். இந்த பாடசாலையின் அதிபரின் பரிந்துரையின் பேரில் மிசலின் ஆசிரியாகின்றார். வழமையான கற்பிக்கும் முறையை தவிர்த்து புதிய முறையில் கற்பிக்கின்றார். மிகவும் கடினமாக செயல்படும் மிசல் படிப்படியாக சொற்களை அறிகின்றார்.

மிசலை வழமையான வாழ்வுக்கு இட்டு செல்ல வேண்டும் என்ற முயற்சியில் டெபிராஜ் தீவிரமாகிறார். ஆனால் டெபிராஜ் Alzheimer நோயால் பாதிக்கப்படுகின்றார். நினைவுகளை இழக்கத் தொடங்குகின்றார். இப்பொழுது மிசல் டெபிராஜ் க்கு நினைவுகளை மீட்க போராடுகின்றார்.

டெபிராஜ்ன் விருப்படியே மிசல் பட்டதாரியாகின்றார்.

இறுதியாக நோயாளியாக சங்கிலியால் கட்டப்பட்டுள்ள டெபிராஜை மிசல் சங்கிலியை அகற்றும் காட்சி முக்கியமானது.

இவ்விரு உறவுகளும் ஒருவரை ஒருவர் தாங்கிக் கொள்கின்றனர். இங்கு அன்பு என்பதை விட கடமையுடன் கூடிய பாசமே தாங்கும் காரணி; என்று கூறலாம்.

பிரபல கெலன் கில்லரின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டு The Miracle Worker என்ற படத்தை கறுப்பு நினைவூட்டுகிறது.

கறுப்பு என்பது இருட்டு இவர்களது வாழ்க்கையில் ஒளியே இல்லை. படத்தின் ஆரம்பக் காட்சியில் ஒளி வெள்ளத்தில் வீடு தோன்றுகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை சினிமாவின் பரிமாணங்களை காணலாம்.

மிசலின் உலகமே தொடுதல் மூலம் தான் உணரப்படுகின்றது. இவரது உள் உணர்வுகளை திரையில் காவியமாக்கியுள்ள ரவி கே சந்திரனும் அழகாக தொகுத்துள்ள பெலா சேகல் ம் பாராட்டுக்குரியவர்கள். இவர்கள் தங்கள் மீதுள்ள சவாலை வெகுநேர்த்தியாக நிறைவேற்றியுள்ளார்கள்.

ஒளி அளவு உள் செல்லும் ஒளிதேங்கும் ஒளி நகரும் ஒளி என ஒவ்வொரு காட்சியையும் ஆய்வு செய்யலாம். ரவி கே சந்திரன் கறுப்பின் ஒளியை பார்வையாளர்களிடம் சென்றயடையச்செய்துள்ளார். படத்தின் பெரும் பகுதி இரவிலே படமாக்கப்பட்டுள்ளது.

சன்ஜய் லீலா பன்சாலி ன் தேவதாஸை மக்கள் மறந்துவிடுவார்கள். சிறப்பான நெறியாள்கை. ஓவ்வொரு காட்சியையும் காவியமாக்கியுள்ளார்.

படைப்புக்கும் பார்வையாளருக்கும் இடையே ஒரு உணர்பூர்வமான தொடர்பை உருவாக்கியுள்ளனர்.

படத்தின் சிறப்பம்சம் ராணி முகர்ஜின் நடிப்பு. வங்காளத்தில் இருந்து மற்றொரு சிறந்த நடிகை. அதி அற்புதம் என்றால் மிகையாகது.

அமிதாப் – ஆங்காங்கே நாடக நடிப்பு ஆனாலும் சிறப்பாக செய்துள்ளார்.

மிசல் போன்ற பாத்திரங்களை வாழ்வில் அதிகம் நாம் சந்திப்பதில்லை. அல்லது வெளி உலகுக்கு கொண்டு வரப்படுவதில்லை. எனவே சினிமாவே யதார்த்தமாக மாறிவிடுகிறது. அஞ்சலி படத்திலும்இதிலில் மிசலின் சிறு வயது பாத்திரமும் அவ்வாறானதே.

மிசல் போன்றவைர்களை வழமையான வாழ்வுக்கு இட்டுச் செல்ல எடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது.

ஊடல் ஊனமுற்றோரை கடவுளுக்கு சமமானவர்களாக காட்ட முற்படுவது தவறானது. அவர்களுக்கும் எங்களுக்கும் அவர்கள் சாதரணமானவர்கள் என்ற எண்ணம் ஏற்படவேண்டும்.

இவ்வாறான கருவுக்கு ஒரு ஆங்கிலோ இந்திய குடும்பத்தை நாடவேண்டியுள்ளது. சாதாரண குடும்பத்தில் சாத்தியமில்லை. அவர்கள் விசேட பாடசாலையைத்தான் நாடவேண்டும்.

வானரன்

Series Navigation

வானரன்

வானரன்