எதை நிறுத்த ?
செண்பகபாண்டியன்

நிறுத்தச் சொன்னாய்!
எதை நிறுத்த ?
நித்திய நிருத்தங்களையா
நீங்காத நினைவுகளையா
நின்றுபோன படிமங்களும்
நித்திரையான உணர்வுகளும்
நிற்கச்சொல்லாமலே
நின்றுவிட்ட நிழல்களும்
நீட்டி நீட்டி வட்டமிடுமந்த
நிந்தனை சுமைகளை
நிற்காமல் ஓடி மறையச்சொல்!
நின்று விடுகிறேன்.
நிறுத்தியும் விடுகிறேன்.
senbag@phe.com