எதேச்சதிகாரம்

This entry is part [part not set] of 37 in the series 20090312_Issue

கோ.புண்ணியவான்


எதேச்சதிகாரம் 1

புனையப்பட்ட
பல குற்றச்சாட்டுக்களை
முன்வைத்தும்
கடவுள் தப்பித்தே வந்தார்
ஒன்றுமே பலிக்காத பட்சத்தில்
அவரை
என்கௌண்டரில்
கொள்வதென
ஆள்பவனின் முடிவானது

எதேச்சதிகாரம் 2

அவன் இல்லாத உலகில்
ஒரு பத்து வருடம்
வாழ ஆசை எனக்கு

எதேச்சதிகாரம் 3

நீ இல்லாதபோது
இருப்பதற்காகத்தான்
இந்த ஏற்பாடென்றால்
நீ இருக்கின்றபோதே
இல்லாமல் இருப்பது ஏன்?

எதேச்சதிகாரம் 4

உன் சிலைகள்
உடைக்கப்படுவதற்காகவே
மிக நேர்த்தியாய்
கட்டப்படுகின்றன

எதேச்சிதிகாரம் 5

வாரிசாக விட்டுப்போ
மேலான உன் செருப்பை
அது போதும்.

எதேச்சதிகாரம் 6
நீ செய்த கொலைகளுள்
மிகக்கொடூரமானது
குற்றுயிரும் கொலையுயிருமாய்
நாள்கடத்தி
சாகடித்த
ஜனநாயகம்தான்.

Series Navigation

கோ.புண்ணியவான்

கோ.புண்ணியவான்