எது என் பட்டம் ?

This entry is part [part not set] of 40 in the series 20110206_Issue

கோமதி நடராஜன்விண்ணிலே சிறகடிக்கும் பறவை போல்
சுழன்றாடும் பட்டங்களில் என் பட்டம் எது?
வண்ணமெல்லாம் குழைத்தெடுத்து
ஓவியமாய் மின்னும் பட்டமா?
என் கை சுற்றியிருந்த ,கயிற்றை இழுத்தேன் ,
வரவில்லை அந்த பட்டம்.
அன்னம்போல் வடிவாகி, நீல வானமே
நீரலையாய் ,நீந்தி ஆடும் அந்த பட்டமா?
இழுத்தேன் ,இம்முறையும் வரவில்லை
எனக்குச் சொந்தமில்லா அந்த பட்டம்.
பட்டுத்துணிகளும் சின்ன மணிமாலைகளுமாய்
கண் கவரும் கலையான பட்டமா/
இழுத்தும் ஏனோ வரவில்லை
வண்ணமில்லை வடிவம் இல்லை
வெற்றுத்தாள் பறப்பது போல்
வளைந்து நெளிந்து பறக்கும் சாதா பட்டமா?
இழுத்த உடன் என் கையில் இறங்கியது.
இறைவன் சொன்ன சேதியை எனக்குரைத்த்து.
அழகாய் இருக்கிறது என்று,
அடுத்தவர் பட்ட்த்துக்கு ஆசைப் படாதே.
உன் பட்டம் உருவாவது ,உன் கையில் .இருக்கிறது
வண்ணத்தால் பிரகாசிப்பது உன் எண்ணத்தில் இருக்கிறது.
அடுத்தவரது உரிமையை உனதாக்கிக் கொள்ளாதே
அவரது திறமையை உனக்கென அபகரிக்காதே.
அவரவர் பட்டம் அவரவர்களுக்கே.
அடுத்தவன் பட்டம் உனக்கு வராது
உன் பட்டம் யாரிடமும் போகாது .
புரிந்து கொண்டால்
இதயம் இனிய பட்டமாகும்
சிறகின்றி சந்தோஷ வானில்
சிட்டாய் பறக்கலாம்
ஆனந்தக்கடலில்
துடுப்பின்றி அழகாய்
நீந்தலாம்.

Series Navigation