’எண்’ மகன். நாடகம்- பரீக்‌ஷா

This entry is part [part not set] of 45 in the series 20081009_Issue

ஞாநி


இன்றைய நிகழ்ச்சிகள்:
அக்டோபர் 12, 2008. ஞாயிறு:
பரீக்‌ஷா நாடகக் குழு: மகாஸ்வேத தேவியின் நாடகம்: ’எண்’ மகன். தமிழில்: ஞாநி . அலையன்ஸ் பிரான்சே அரங்கு, கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம். இரு முறை. மதியம் 3.30, மாலை 6.30.

மகாஸ்வேத தேவி( 82) வங்க மொழி எழுத்தாளர். மனித உரிமை ஆர்வலர். மரண தண்டனைக்கெதிராகவும் ஆதிவாசிகளின் உரிமைகள் நசுக்கப்படுவதை எதிர்த்தும் குரல் கொடுத்து வருபவர் அண்மையில் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்காக விவசாயிகளின் நிலங்கள் கையகப்படுத்துவதை எதிர்க்கும் போராட்டங்களில் பங்கேற்றார். ‘எண்’ மகன் நாடகம் எழுபதுகளில் கொல்கத்தாவில் நடந்த வன்முறைகளை ஒரு நகரக் குடும்பத்து தாயின் பார்வையிலிருந்து சித்திரிக்கிறது.
1978லிருந்து இயங்கி வரும் பரீக்‌ஷா நாடகக்குழு பிற மொழி படைப்பாளிகளான விஜய் டெண்டுல்கர், பாதல் சர்க்கார், பிண்ட்டர், பிரெக்ட், பிரிஸ்ட்லீ முதலியோரின் படைப்புகளை தமிழ்ச் சூழலுக்கேற்ற விதத்தில் மறு அறிமுகம் செய்துள்ளது. எண் மகன் நாடகம் ஒரு தாய் தன் மகனின் கொடூர மரணத்துக்குப் பின் அவனையும் தன்னையும் புரிந்துகொள்வது பற்றியதாகும்.
—————————————————–
பரீக்‌ஷா
நாடகக்குழு – 1978 முதல் மேடையில்…
————————————————————————
தொடர்புக்கு: ஞாநி 94440 24947Series Navigation

ஞாநி

ஞாநி