This entry is in the series 20030925_Issue

அருண்பிரசாத் நடராஜன்


விரல்வழி உள்கசிந்தது.
உன் பூக்களின் ஈரம்.
இருந்தும் அடங்கவில்லை
கொதிமன உலையின் வெப்பம்.

நாம் விலகிச் சென்ற இடத்தைச்
சுற்றிலும் பரவியிருந்தது.
அலை அலையாய்
ஊடலின் மொழி.

உடைந்து வெளியேறுகிறேன்.
உன் பிம்பம் சுமந்த குமிழிகளாய்.
இறுதிவரை.

everminnal@yahoo.com

Series Navigation