உள் நோக்கு

This entry is part [part not set] of 54 in the series 20040527_Issue

ஸ்ரீமங்கை


இடுப்பொடிய ஒருமணிநேரமாய்
இட்ட கோலத்தில்
மஞ்சளாய் மூத்திரம் பெய்து
சாணியிட்டுச் சென்ற
காறாம்பசு மேல்
கோபப்படமாட்டாள் அம்மா.

‘செம்பருத்தி பூ செருகி
நாளைய கோலத்தில் வைக்க
சாணி உருண்டைகளுக்கு
கவலையில்லை. ‘

இன்று…
காவல் பலமான காலனிகளின்
மின்விளக்குகளில்
ஒளிரும் ஸ்டிக்கர் கோலங்கள்
ஏனோ அமங்கலமாய்த்தான்
தெரிகின்றன
—-
kasturisudhakar@yahoo.com

Series Navigation