This entry is in the series 20020924_Issue


தேவையான பொருட்கள்

5 உருளைக் கிழங்கு தோலை நீக்கிச் சீவி சிறு துண்டங்களாய்ச் செய்தது

1 முட்டை – நன்றாய்க் கலந்தது

உப்பு – சுவைக்கேற்ப

சிறிது இஞ்சி அரைத்தது

கால் தேக்கரண்டி மிளகுத் தூள்

கால் கோப்பை சீஸ் சீவியது-தூள் வடிவில்

செய்முறை:

1. உருளைக் கிழங்குத் துண்டங்களையும் முட்டையையும் ந்ன்றாய்க் கலக்கவும்

2. இஞ்சி அரைத்ததை இதனுடன் சேர்த்து கலக்கவும்.

3. உப்பு, மிளகுத் தூளையும் இதனுடன் கலந்து கொள்ளவும்

4. பேக்கிங் செய்யும் குழிவாக தட்டில் இதனை வைக்கவும்

5. 200 டிகிரி செல்சியசுக்கு சிறிது நேரம் சூடாக்கியபின்பு பேக்கிங் ஒவ்வனில் வைக்கவும்

6. சீஸ் கரையும் வரை – 45 – 50 நிமிடங்கள் ஆகலாம்) வேக விடவும்

7. சூடாய்ப் பரிமாறவும்

Series Navigation