This entry is in the series 20021110_Issue

ராஜி


பிரகாசச் சூரியனைப் பாராய் தோரணம்
ஆகாசத்தில் பரவும் ஒளிரும் கிரணம்!
அடிவானம் சுவர்ணம் போல், அமர்க்களம் பாராய்…
ஒட்டியாணம் போல் அழகாய் உதிக்குது ஜோராய்! (1)

மலையில் எட்டி முகம் காட்டு கின்றான்…..
தலை ஆட்டித் தனக்குள்ளே சிரிக்கின்றான்!
குயிலும், பறவையும் மயங்கியே பாடுது..
மயிலும், பூவும் குலுங்கியே ஆடுது! (2)

கோழியும் கூவுது செல்லப் பெண்ணே…
தோழன் வருகிறான் தங்கக் கண்ணே!
எழுந்திரு பொன்னே! பள்ளி போகணுமே…
ஆழ்ந்த அறிவும் அதிகமாய் வேணுமே! (3)

***
r2iyer@acs.ryerson.ca

Series Navigation