உங்கள் மழை தட்டுகையில்…

This entry is part [part not set] of 31 in the series 20080828_Issue

அனாமிகா பிரித்திமா


அன்று என் காதல் மழையில்…
நனைந்த உங்களை…
விட்டு என்றும்…
மறையா மின்னல் நான் !
மின்னல் என்று மழையை …
பிரிந்திருக்கிறது?

வானவில் …
ஒளிபிறையாய் வந்தாலும்…
குருடாக்காது !
உங்கள் கண்களை …
குளிரத்தான் வைக்கும்…
இந்த வானவில் …
தன் வண்ணங்களால் !

உங்கள் இதய குடையில்…
மோதும் காதல் மழையாய் …
நான் இருக்கையில்…
வலியும் தோல்வியும்…
குடையில் மோதிய…
இந்த மழைக்கேயன்றி…
குடைக்கு இல்லை !

உங்கள் இதயத்தை…
நனைக்க இயலா…
இந்த காதல் மழை தங்கள்…
காலணிகளுக்குள்ளாவது…
நுளைந்ததில் மகிழ்ச்சி !

என் ஜன்னல் என்றும்…
திறந்த வண்ணமே…
இருந்தது…
உங்களிடம் இருந்து தூதாய்…
மழை என்ன, சாரல் என்ன…
துரல் கூட…
வரவில்லையே ?

உங்கள் காதல் மழை …
தட்டுமானால்…
என் ஜன்னலை…
எவ்வாறு சாத்துவேன் ?
என்னை நானே அரைவேனா ?

உங்கள் காதல் மழையை …
என் வாசலில் வைத்து …
“ச்சோ” வேன…
கதற விட என் மனம்…
ஆலங்கட்டி அல்ல !
என்றுமே என் மனம்…
தூய காதல் நீர் துளி !

வானம் பார்த்த நம் காதலில் …
நான் மழையாய் …
நனைக்க வருகையில்…
உங்கள் இதயம்….
கருப்பு குடையை…
பிடித்தது…
ஏன் ?

என் காதல், என்றும்…
உங்கள் இதய கூரையின்…
மேல் கொட்ட…
காத்திருக்கும்…
மழையேயன்றி !
பிழை இல்லை !


anamikapritima@yahoo.com

Series Navigation

அனாமிகா பிரித்திமா

அனாமிகா பிரித்திமா