ஈரமான தீ

This entry is part [part not set] of 45 in the series 20060120_Issue

மனஹரன்


யாரடி நீ
விடிந்து பார்த்தால்
கர இடுக்கில்
உனது விரல்
மெல்ல
சினுங்கல் உடைத்து
உள்ள சுளுக்கை
இழுத்தும்
புன்னகை முடியவிழ்த்து
போய் வரும்
உனது பிம்பத்தை
பூவினும் மெல்லிய
இதழ் தேடி
துவட்டிட வேண்டுமன்றோ
எனதுயிர் உன்னை
மடிதனில் இருத்தி
நித்தமும் பேசும்
சுட்டும் விழிதனை
சுடர் நீக்கி
நெருங்கிட
மோகத்தீ ஏற்றும்
உன்னொரு பார்வையின்
தழல் குறைத்தால்
தாகம் தீராதல்லவா
திசை அறுக்கும்
யாழ் குரலில்
புல்லினங்களின்
பூபாளமாய்
உன் பாடலை
செவிக்குள்
சேகரித்து வைக்க
தனியானதொரு
அறை வேண்டும்
வியர்க்க வைக்கும்
வேண்டுதலை
துரத்திவிட்டு
நேசக்கையோடு
இணங்கிவர
சம்மதம் கேட்டும்
ஓசையில்லாமல்
சிக்கலுடைத்தும்
நேற்றும்
இன்றும்
நாளையும்
சிற்றலை வீசும்
வீசிக்கொண்டேயிருக்கும்

-மனஹரன்,மலேசியா
kabirani@tm.net.my

Series Navigation