இல்லாமல் போனவர்கள்

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

கே.பாலமுருகன்அவர்கள்
இல்லாமல் போனவர்கள்!

எப்பொழுது என்ற பதிவுகள்
இல்லாமலே
இல்லாமல் போய்விட்டார்கள்!

தோட்டத்தில் வாழ்ந்த போது
பக்கத்து வீட்டில் இருந்த
வேணி. .

கம்பத்தில் வாழ்ந்த போது
வயலுக்கு அப்பால் இருந்த
மகேன் தம்பி. . .

ராஜா அண்ணன்
பள்ளிக்கூடத்தின் தோட்டக்காரர்
அப்பளநாய்டு அண்ணன். . .

புளிய மரத்தில் வீடு
கட்டி விளையாடிய மன்றத்துப் பையன்
மகேந்திரன். . .

இப்படி பலர்
இப்பொழுது இல்லாமல் போனவர்களாக
எனது ஞாபகத்தில். . .

அவர்கள்
நினைவுகளில் மட்டும். ..
நிஜத்தில் என்றுமே
இல்லாமல் போனவர்கள்தான்

சுமந்து திரிகிறேன்
இன்றுவரை
அந்த இல்லாமல் போனவர்களை. .

கே.பாலமுருகன்
மலேசியா


bala_barathi@hotmail.com

Series Navigation

கே.பாலமுருகன்

கே.பாலமுருகன்