இரண்டு முன்னுரைகள்

This entry is part [part not set] of 30 in the series 20050715_Issue

வெங்கட் சாமிநாதன்


சமீபத்தில் வெளியான என் புத்தகங்களில் இரண்டின் முன்னுரைகள் இங்கு தரப்பட்டுள்ளன. வரவிருப்பதன் வானிலை முன்னறிவிப்பு மாதிாி என்று கொள்ளலாமே. இதற்கும் மேற்சென்று, இவை வரவிருப்பது தென்றல் காற்றா, குளிர்விக்கும் மழையா, சுட்டொிக்கும் வெயிலா, அல்லது சுனாமியா, எது என்பது என்னைப்பற்றி அவரவர் முன் தீர்மானங்களைப்பொறுத்தும், அவரவர் மனோபாவம் பொறுத்தும் அமையும். அவரவர்க்கு விதிக்கப்பட்டது அவரவர்க்குக் கிடைக்கும்.

1. வியப்பளிக்கும் ஆளுமைகள்

இக்கட்டுரைகளில் பேசப்படும் மனிதர்கள் ** என்னை வியப்பில் ஆழ்த்தியவர்கள். தம் ஆளுமையின் தாக்கத்தால் தமிழகச் சூழலில் பாதிப்பை ஏற்படுத்தி தம் தடம் பதித்தவர்கள். என் வியப்புகளில் சிலவற்றை தமிழ்ச்சமூகம் ஒப்புக்கொள்ளலாம். அநேக மற்றவற்றில் என் வியப்பு, சமூகம் நினைத்துப்ப் பார்த்திராத காரணங்களுக்காக. அக்காரணங்கள் வரும் பக்கங்களில் விாிகின்றன.

பொதுவாக நமக்கு, எல்லா மனிதர்களும் கறுப்பு அல்லது வெள்ளை ஆகிய இரண்டு குண/நிற வகைக்குள் அடங்குகிறவர்கள். 40 வருடங்களுக்கு மேல் இருக்கும். தபன் சின்ஹாவின் வங்காளப்படத்தில் (லோஹோ காபோட்) பார்த்தேன். சிறைக்குள் அடைபட்டிருக்கும் ஆயுட் கைதிகள் ஒவ்வொருவரும் கொடூர குற்றவாளிகள். எனினும் அவர்களுடைய இருண்ட மனத்தின் ஒரு மூலையில் மிக எளிதில் இளகிப் போகும் மிருதுவான பகுதி மறைந்திருக்கும். நமது தாய்த்தெய்வங்களுக்கு மூர்க்கமான ஒரு சொரூபம் உண்டு. கல் மனதினனாக பிடிவாதம் பிடிக்கும் கணங்கள் காந்தியிடம் இருந்தது.

இப்படி நான் ஏதும் தேடிப்போகவில்லை. சாதரணமாக நம்மவர் பார்வையிலிருந்து வேறுபட்ட பார்வை இங்கு பேசப்படும் மனிதர்களைப் பற்றி எனக்கு இருந்தது. இப்பார்வை என்னவென்று தொிந்து கொள்ளாமலேயே, பெயரை மாத்திரம் கேட்டு, உடனே கோமாளித்தனமான அபிப்ராயங்களைக் கொட்டிய அறிவு ஜ ‘விகளை நான் அறிவேன்.

எம்.ஜா.ஆர். அதிகாரத்திலிருந்த போது அவரைப் புகழ்ந்து எழுதினார். இப்போது சென்னை வந்ததும் கருணாநிதியைப் பற்றி புகழ்ந்து எழுதத் தொடங்கியாயிற்று என்று, ஒரு செக்கச் சிவந்த சீருடைக்காரர், செங்கொடியைப் பார்த்த மாத்திரத்திலேயே, பயிற்றுவிக்கப்பட்ட கோஷங்களை இரைச்சலிடுபவர் சொன்னார்: கோஷமிடுபவர்களுக்கு படிக்கவோ, உண்மை சார்ந்து இருக்கவேண்டும் என்ற தேவையோ இல்லை. ‘நீர் என்ன எழுதினாலும் கருணாநிதியிடமிருந்து உமக்கு ஒன்றும் கிடைக்காது தொியுமில்லையா ‘ என்று ஒரு நண்பர் திருவாய் மலர்ந்து அருளினார். ‘இப்போ சாமிநாதன் வைரமுத்து பத்தியெல்லாம் எழுத ஆரம்பித்து விட்டார் ‘ என்றார் மற்றொருவர். ‘சாமிநாதனை ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு அழைச்சிட்டுப் போய் விருந்து கொடுத்தாராம் வைரமுத்து. உடனே சாமிநாதன் அவரைப் புகழ்ந்து எழுத ஆரம்பிச்சுட்டார் ‘ என்று செய்தி பரப்புவது இன்னொரு மஹானுபாவர்.

இவ்வளவு அசிங்கங்களுக்கு இடையே தான் நான் வாழ வேண்டியிருக்கிறது. இவர்கள் நினைவாக இக்கட்டுரைகளை இவர்களுக்கு அர்ப்பணிப்பு செய்து கொள்கிறேன். இம்மஹானுபாவர்களின் பெயர்களை வெளியிடாதிருப்பதற்கு அவர்கள் எனக்கு நன்றி சொல்ல வேண்டும்.

வெங்கட் சாமிநாதன்

**1. என்.எஸ். கிருஷ்ணன், 2. எம்.ஜா.ஆர். சமூகவியலில் ஒரு உன்னத நிகழ்ச்சி, 3. மு. கருணாநிதி: திருக்குவளையிலிருந்து கோட்டைக்கு; 4. கே.பி.சுந்தராம்பாள்; 5. டி.எஸ். சொக்கலிங்கம். 6. வைரமுத்துவின் வெற்றியை முன் வைத்து; 7. சோ: தமிழக அரசியல் சூழலில் ஒரு விசித்திர மனிதர்:

வியப்பளிக்கும் ஆளுமைகள் (கட்டுரைகள்) வெங்கட் சாமிநாதன்: யுனைடெட் ரைட்டர்ஸ்: 63. பீட்டர்ஸ்சாலை,. ராயப்பேட்டை, சென்னை-14

2. புதுசும் கொஞ்சம் பழசுமாக:(கவிதை பற்றி)

என்னுடைய பிரதாபங்களைப் பற்றிச் சொல்லவேண்டும். முப்பது வருடங்களுக்கு முன், மு. மேத்தா என்னும் ாவானம்பாடிா இயக்கத்தைச் சேர்ந்த கவிஞர் மிகப் பிரமாதமாக, வானம்பாடிகளாலும் இன்னும் மற்றோராலும் புகழப்பட்ட கவிஞராகத் திகழ்ந்தார். தமிழ்க் கவிதா வானில் அப்துல் ரஹ்மானும், வைரமுத்துவும் பின்னரே பிரகாசிக்கவிருந்தனர். அவருடைய ாநெம்புகோல்ா கவிதை மிகப் பிரசித்தி பெற்றது. அவர்களுக்கெல்லாம் மார்க்ஸ ‘ய வேதாகம வகுப்பு நடத்தி வந்த கோவை ஞானி, வருங்காலத்தில் இவர்கள்தான் தமிழ்க் கவிதைக்குப் புதிய பாதைகளை அமைப்பவர்கலாக இருப்பார்கள் என்றோ என்னவொ ஆரூடம் கணித்திருந்தார்.

அத்தகைய பெருமை வாய்ந்த மு. மேத்தாவின் கவிதை பற்றி நான் எழுதியிருந்தேன்: ’35 வதான எந்தக் குடிமகனும் இந்தியக் குடியரசுத் தலைவராகும் வாய்ப்பு இருப்பது போல, மு. மேத்தாவும் எதிர்காலத்தில் என்றாவது கவிதை எழுதக்கூடும் ‘ என்று. எழுதியிருந்தேன். அதை யாரும் படித்தார்களா, ரசித்தார்களா, கோபப்பட்டார்களா எனத் தொியாது. மு. மேத்தா பற்றி குறிப்பாக அல்லாமல், பொதுவாகவே என் கருத்துகளைக் கொண்டு, நான் ாசி.ஐ.ஏ. ஏஜெண்ட், அமொிக்க ஏகாதிபத்தியத்தின் சதிக்கான தமிழ் நாட்டின் உளவாளி, அமொிக்காவில் இருந்து எனக்கு மணி ஆர்டர் வருகிறது (கவனிக்கவும், அமொிக்காவில் இருந்து மணி ஆர்டர்) என்ற முடிவுகள் இன்னமும் உறுதிப்படுத்தப்பட்டது என்று நினைக்கிறேன்.

பத்து வருடங்களுக்கு முன், முதன் முறையாக தமிழ் நாட்டில் சில புதியவர்களுடன் அறிமுகம் கிடைத்தபோது, அவர்கள் மு.மேத்தா பற்றி நான் இருபது வருடங்களுக்கு முன் சொன்னதைக் குறிப்பிட்டு, தாங்கள் அதை வெகுவாக ரசித்ததாகச் சொல்லி ஆரவாரமாகச் சிாித்தார்கள். பல்வேறு இடங்களில் பின்னாட்களின் இந்த அனுபவம் எனக்கு மறுபடியும், மறுபடியும் நிகழ்வதாயிற்று. ‘பரவாயில்லையே, நான்

கூட பொன்மொழிகள் உதிர்க்கிறேன் போல் இருக்கிறதே ‘ என்று சந்தோஷப்பட்டுக் கொண்டேன். இந்த மாதிாியான, அங்கீகாரம் எனக்கு மிக அாிதாகவே கிடைப்பதால், நான் சந்தோஷப்பட்டது ஒரு நியாயத்தில் சேரும்.

ஆனால், அந்த சந்தோஷம் சமீபத்தில் ஒரு நாள் பொட்டென, பழஞ்சுவர் காரை உதிர்வது போல் உதிர்ந்தது,.

அந்தப் ா ‘புகழ் பெற்ற வாக்கியத்தை ‘ா எந்த கவிஞருக்கும், கவிதைத் தொகுப்புக்கும் {பெயர் ஞாபகமில்லை, ாகண்ணீர்ப்பூக்கள்ா என்றிருக்கலாம்} உாியதாக்கினேனோ, அந்தக் கவிஞர் மு.மேத்தாவின், அந்த கவிதைத் தொகுப்பு 31வெது பதிப்பு பிரசுரமாயிற்று. அதற்கு ஒரு பெரும் விழா ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த விழா மேடையில் தமிழ் நாட்டின் பெரும் பெரும் தலைகள் எல்லாம் மு.மேத்தாவை பாராட்ட, மாலை போட, இன்னம் என்னவெல்லாம் உண்டோ அதெல்லாம் நடந்ததற்கான ஒரு புகைப்படம், அதில் மு.மேத்தா. அந்த நட்சத்திரக் கூட்டத்தில் நடுநாயகமாக நின்று முகம் மலர்ந்து காட்சி தருகிறார். பத்திாிகைகளில், அந்த செய்தியையும், புகைப்படத்தையும் பார்த்தேன்.

மு.மேத்தாவின் சிாித்த முகம் என்னைப் பார்த்தே சிாிப்பது போல் இருந்தது. ‘ என்னமோ பொிஸ்ஸா சொன்னியேய்யா, இப்போ பாத்தியா, நீ எங்கே, நா எங்கே ? இப்போ நீ உன் மூஞ்சியே எங்கே கொண்டு வச்சுக்குவே ? ‘ என்று மு.மேத்தா என்னைக் கேட்பது போல் இருந்தது.

எனக்குச் சொல்ல பதில் ஏதும் இல்லை.

இது ஏணியின் உச்சம். இந்த ஏணியின் இறங்கு படிகளில் நிற்கும் பலர், நான் அங்கீகாிக்காத பலர், என் கருத்துக்களைப் பற்றிக் கவலைப் பட வேண்டாதவர்கள் தான்.

இது கடந்த கால சாித்திரம். தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு இருக்கும் சாித்திரம்.

என் அபிப்பிராயங்கள் லெளகீக உலகில் ஒரு காசுக்கும் பயனில்லாதவை தான். இருப்பினும், இன்னமும் சிலர் கேட்க, பத்திாிகைகளும் கவிஞர்களும் கேட்க, எழுதுகிறேன். ஏன், ? இதனால் இவர்களுக்கு என்ன லாபம் ? தொியாது. என் கருத்து அவர்களுக்கு மகிழ்ச்சி தருவதாக இருந்தால், ‘ரொம்ப தாங்ஸ் சார், நல்லா எழுதியிருக்கீங்க ‘ என்று தற்செயலாக எங்கோ எப்போதோ வழியில் மோதிக் கொள்ளும்போது சொல்வார்கள். அதாவது, அவர்கள் எனக்கு பாஸ் மார்க் போடுகிறார்கள் என்று அர்த்தம். பாதகமாக இருந்துவிட்டாலோ, அவர்களில் கருணை உள்ளவர்கள் என்னை உதாசீனம் செய்வார்கள். அவர்கள் நினைவில் இருந்து நான் அழிக்கப்பட்டு விடுவேன். தான் எதிர்பார்த்தது கிடைக்காத வன்மம் கொண்டவர்களுக்கு, நான் ஜன்ம விரோதியாகி விடுவேன். உதாசீனத்திலிருந்து, விரோதிக்கு இடைப்பட்ட நிலைகளில் பலர்.

இத்தொகுப்பில் உள்ளவை, சென்னை வந்தபிறகு கவிதைகள் பற்றி எழுதியவை மட்டுமே. முப்பது வருடங்களுக்கு முன் ‘எதிர்ப்புக்குரல் ‘ தொகுப்பில் தங்கிப் போன சில பழசுகளும் இதில் உள்ளன.

புதிய உதாசீனங்களையும், வன்மங்களையும் எதிர்நோக்கி ெ சில மலர்ந்த முகங்களும் இடையிடையே காணக் கிடைக்கலாம் என்றும் நினைக்கிறேன்.

இதையெல்லாம் எதிர்பார்த்தா எழுதினேன் ? மனத்தில் பட்டதை எழுதுகிறேன். அவ்வளவே. வேறு சாத்தியங்கள் ஏதும் இதற்கு இல்லை. சிலர் யோசிக்கக் கூடுமானால், என்னுடனான சம்பாஷணையில் மறு பாிசீலனை சாத்தியமானால், அதுவே வேண்டியது, ஆரோக்கியமானதும்.

வெங்கட் சாமிநாதன்/ 25.05.05

புதுசும் கொஞ்சம் பழகுமாக (கவிதை பற்றி) (கட்டுரைகள்_ வெங்கட் சாமிநாதன். கிழக்கு பதிப்பகம், 16, கற்பகாம்பாள் நகர், மைலாப்பூர், சென்னை -4 )

*

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்