இன்ரர்நெற் உலகமும் எம் சிறார்களும்

This entry is part [part not set] of 50 in the series 20041202_Issue

நளாயினி தாமரைச்செல்வன்


புலம் பெயர் வாழ்வில் அவலம் பல நிறைந்த வாழ்வை சகித்து , உணர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் எம் குழந்தைகள் எதிர்காலம் பற்றி , ஈழத்தில் எம் பெற்றோர் எவ்வாறு கற்பனைக்கோட்டைகளுடன் எம்மை வளர்த்தார்களோ அதே கற்பனைகளுடன் இங்கும் எம் குழந்தைகளை வளர்த்து வருகிறோம். பலவற்றை குழந்தைகள் விருப்பின்றியே நையப்புடைத்து திணித்தும் வருகிறோம். நையப்புடைத்து என்பது அடிப்பது என்று இங்கு பொருளல்ல. அடிப்பதற்குச் சமனாக ஆனால் அதிலும் உளப்பாதிப்பை அதிகம் ஏற்படுத்தக் கூடியவாறு மனதில் பலகாயங்களை ஏற்படுத்தி திணித்து வருகிறோம். இவ்வாறு எம் வாழ்வியல் சூழல் அமைகிறபோது கணணித்துறையில் எம் குழந்தைகள் ஆர்வமாக மிக வேகமாக வளர்ந்து வருகிறார்கள். இங்கு பாடசாலைக் கல்வியில் கணணி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் உலகமே கணணி மயமாய் மாறி உள்ளது.

நாம் பிள்ளைகள் மீது கட்டிவைத்துள்ள கற்பனைக் கோட்டையுள் கணணி தொடர்பான கற்பனையும் புகுந்துள்ளதை யாரும் மறுக்க முடியாது.

நாம் வியக்கத்தக்க வகையில் எம் சிறார்களும் கணணியை மிக லாவகமாக கையாள்கிறார்கள். பல்வேறு வகையில் கணணிக்குள் முன்னேறிய இவர்கள் அரட்டை உலகத்துள் போய் மீளமுடியாமல் திணறுகிறார்கள்.

இன்ரநெற் அரட்டை உலகத்துள் பெரும்பாலும் 16 வயதுக்கு மேற்பட்ட இளைஞர் இளை ?ிகள் ராச்சியம் தான். படு குசியாக சம்பாசிக்கிறார்கள். இதற்குள் போனவர்கள் யாரும் மீண்டதாக இல்லை.

நான் கூட இந்தக் கட்டுரையை எழுத வேண்டும் என்பதற்காக கடந்த ஒரு மாதமாக குறிப்பிட்ட ஒரு அரட்டை உலகத்துள் பிரவேசித்து விடுவேன். ஒரு மாதமாக என் வீடு தலை கீழ் என்பது வேறு விடயம். நிற்க.

இந்த அரட்டை உலகத்துள் நான் சந்தித்தவர்களில் பலர் தனியாக வாழ்பவர்கள். இவர்களுள் சிலர் முழுநேர வேலை செய்பவர்கள். சிலர் உயர்கல்வியை தொடர்ந்து கொண்டு பகுதிநேர வேலைக்குச் செல்பவர்கள். ஒரு சிலர் குறிப்பிட்ட துறையில் சிறப்புத்தேர்ச்சிக்காய் படித்துக்கொண்டிருப்பவர்கள்.

இவர்கள் சுவி ?, கனடா, லண்டன், கொழும்பு குவைத், பாரி ? இந்தியா , மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாட்டில் இருந்து அரட்டை உலகத்துள் பிரவேசிக்கிறார்கள். ( இவர்களில் பலர் ஈழத்தமிழ் சிறார்கள்.) (சிலர் இந்தியாவை பிறப்பிடமாகவும் மற்ற நாடுகளை தற்காலிக வதிவிடமாகவும் கொண்டவர்கள்.)

மொத்தத்தில் அனேகர் தற்காலிக வதிவிடமே.

இந்த அரட்டை உலகத்துள் கூடுதலானவர்கள் புனை பெயர்களிலேயே வலம் வருகிறார்கள். நானும் ஒரு புனை பெயரோடு உள்ளே நுழைந்தேன். என்பெயரைப்பார்த்ததுமே பல இளைஞர் வணக்கம் சொன்னார்கள். அங்கு நடந்த உரையாடலில் கொஞ்சம் இந்தக் கட்டுரைக்காக.

இங்கு பெயர்கள் எல்லாம் மாற்றி தரப்பட்டுள்ளது.

எனது பெயரை சிந்து என வைத்துக்கொள்வோம்.

சிந்து எங்கே போய் விட்டாய் ? நலமா ?

ரகு- ‘டேய் சிந்து என்ரை தங்கச்சியடா. சேட்டை விடாதை. ‘

குமார்- ரகு நீ உன் வேலையைப்பார். ஏன் இன்னும் உன்ரை ஆள் வரேலை ? (ரகுவின் ஆளை நான் இன்னும் சந்திக்கவில்லை)

காதலன்- ‘காய் சிந்து இவங்கள் இப்பிடித்தான். நீங்கள் என்னோடு கதையுங்க. சிந்துநீங்கள் எங்கிருந்து கதைக்கிறீங்க. நான் கனடா. நீங்கள் ‘

சிந்து – ‘சுவி ? நீங்க உங்கு என்ன செய்கிறீங்கள் ‘

சுமதி வந்திருக்கிறார்;

காதலன். – ‘காய் சுமதி. ‘

காதலன்.- ‘நான் படித்துக்கொண்டு வேலை செய்கிறேன். ‘

சிந்து- ‘ என்ன படிக்கிறீங்கள். ‘

மஞ்சு வந்திருக்கிறார்.

காதலன் – ‘காய் மஞ்சு. ‘

காதலன். கணணித்துறையில் படிக்கிறன்.

காதலன்.- ‘ ஏய் மஞ்சு வணக்கம் சொல்லிப்பழகு. ‘

மஞ்சு – ‘போடா. ‘

ரதி. – ‘என்ன மஞ்சு காதலன் சேட்டை விடுறானா ? ‘

காதலன்.- ‘ சியா வாவன் ஓடிப்போவம் ‘

மஞ்சு – ‘அவனுக்கு இதே வேலையாய்ப் போச்சு. ரதி இன்டைக்கு யாரோ சிந்துவோடை கதைக்கிறான். ‘

மஞ்சு- ‘சியா எடி என்னை திரத்திறாண்டி காப்பாத்துங்கடி. ‘

காதலன் – ‘பொத்துங்கடி. வாயை. ‘

ரதி -போடா.

மஞ்சு- போடா.

சியா ஐயோர்ர்ர்ர் ஓடிப்போடா அரட்டை உலகத்தை விட்டு.

காதலன்- ‘ போய்ப் படுங்கடி. ‘

சிந்து – ‘என்ன காதலன் மரியாதை இல்லாமல், பேசுறீங்க. ‘

காதலன்.- ‘ எல்லாம் சும்மா பகிடிக்கு. என்ன இண்டைக்கு நீங்கள் புதிசா. ‘

சிந்து – ‘ஆம். நான் அரட்டை உலகம் தொடர்பாக ஒரு கட்டுரை எழுதப் போறன். அதனால் தான் அரட்டை உலகத்துள் வந்தேன். ‘

ரதி – ‘வணக்கம் சிந்து நீங்கள் கட்டுரை எல்லாம் எழுதுவீங்களா ? ‘

மஞ்சு – ‘வணக்கம். சிந்து எண்ட பெயரிலையே எழுதுவீங்களா ?

சுமதி வணக்கம் சிந்து எங்களுக்கும் அந்த கட்டுரையை அனுப்புவீங்களா ? ‘

சியா – ‘சிந்து காதலனைப்பற்றி கட்டுரையிலை கிழிச்சு விடுங்கோ. ‘

சிந்து – ‘ஆம் அனுப்புகிறேன்.

சிந்து அப்பிடி எண்டால் உங்களுடன் நான் ஒரு மாதத்தால் தொடர்பு கொள்கிறேன்.

சுமதி சரி நல்லது.

காதலன்.- ‘ பொம்பிளையள் ராச்சியமாயே இருக்கு ஓடிப்போங்கடி. ‘

மஞ்சு – ‘போடா ‘

சுமதி – ‘நீ ஓடிப்போடா. ‘

சியா – ‘உன்னை முதல்லையே சென்னனான் எல்லே ஓடிப்போடா எண்டு . இப்பவும் இங்கைதான் நிக்கிறியா ? ‘

மஞ்சு – ‘பேட்டாண்டிடிடிடி ‘

காதலன் – ‘சிந்து நீங்கள் நல்ல னீங்களாக தெரிகிறீங்கள் இவர்களோடை கதைக்காதீங்க. பொல்லாதவர்கள் இந்த மூண்டு பேரும். ‘

மஞ்சு – ‘போடாடாடாடாடா ‘

இப்படியே இவர்களின் அரட்டை உலகம் விரிகிறது. இங்கு என்ன நடக்கிறது. ?

ஒருவருக்கொருவர் அறிமுகமாகிறார்கள். புனைபெயர்களில். இளைஞர்கள் , இளை ?ிகள் நிறையவே பொய்யும் சொல்கிறார்கள். சிலர் காதல் புரிவதற்காக வருகிறார்கள். இவர்களோடு தனிஅரட்டை அறைகளில் கதைத்த போது இவர்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட தகவல்கள்.

தனிய இருக்கிறோம். பொழுது போகவில்லை. கொஞ்ச நேரம் சங்தோசமாய் பொழுதை போக்க அரட்டை உலகத்துள் வருகிறேன். யாரும் நண்பர்கள் இல்லை. யாரை நல்ல நண்பராக தேர்ந்தெடுப்பது என்ற பிரச்சனை. கனடாவில் அக்கா இந்த மாதம் 60 பேரை திருப்பி இலங்கை அனுப்பப் போகிறார்கள். இவர்கள் கனடாவில் குழுச்சண்டையில், ஈடுபட்டவர்கள். வெளியில் போகவே பயமாய் இருக்கு. இதாலை வேலை படிப்பு அரட்டை உலகம் என்று இருக்கிறேன்.

இங்கு பெண்பிள்ளைகள்தான் அதிகம் அரட்டை உலகத்துள் வருகிறார்கள் பெற்றோர் இதை கவனிப்பதில்லையா ? என கேட்டேன். பெண்பிள்ளைகள் வெளியில் போகாமல் வீட்டுக்குள் இருந்தாலே போதும் என பெற்றோர் நினைக்கிறார்கள். என்றான் இந்த இளைஞன்.

ஊரில் இருந்து கடிதம் வரும் , தொலைபேசி வரும். ஒரே கவலையாய் இருக்கு வேலையும் இல்லை. கையிலை காசும் இல்லை. சந்தோசமாய் கொஞ்ச நேரம் அரட்டை அடிப்பமெண்டா நீங்கள் கட்டுரை எழுதப் போறன் எண்டு அரட்டை அடிக்காமல் களுத்தறுக்கிறீங்கள். என என்னிடமிருந்து தப்பித்துக்கொண்டார்.

தொலைபேசிச்செலவு மிச்சம். நாங்கள் மூன்று பேர் நண்பிகள். குறிப்பிட்ட நேரத்திற்கு ஒன்றாய் வந்து அரட்டை உலகத்துள் பிரவேசித்து கதைப்போம். என்றார் ஓர் பெண்.

சும்மா கட்டுரை எண்டு சொல்லி என்னை ஏமாத்தப்பாக்கிறீங்கள். நீங்கள் என்னை காதலிக்கிறீங்கள். அது தான் என்னை கேள்வி கேக்கிறீங்கள் ? என ஒரு இளைஞன் போட்டானே ஒரு போடு. இவனுக்கால் தப்ப என்பாடு பெரும்பாடாகி விட்டது.

இதிலிருந்து என்ன தெரிகிறது. எமது சிறார்களுக்கு ஓய்வுப்பொழுதை எப்படி செலவழிப்பது என தெரியாமல் உள்ளது. அரட்டை உலகத்துள் வெறும் வீணான பொழுதுகள் தான். எந்த விதமான நோக்கமும் இன்றி நேரத்தை வீணாக்குகிறார்கள்.

அரட்டை உலகத்தினால் சில நன்மைகளும் உள்ளது போல் தெரிகிறது.

1. தனிமையில் வாடுபவர்களுக்கு இது ஓரளவு விடுதலை கொடுக்கிறது.

2. எம்மவர்களால் குழுச்சண்டைகள் பெருகிவரும் புலம்பெயர் மண்ணில் நல்ல நண்பர்களை பெற முடியாதவர்கள், வெளியில் போனால் பிரச்சனைகள் வந்து விடுமோ என நினைக்கும் இளைஞர்க்கு இது ஒரு பாதுகாப்பகமாய் இருக்கிறது.

3. போதை வ ?து, குடிப்பழக்கம், புகைப்பிடிக்கும் பழக்கங்களில் இருந்து இது தள்ளி வைக்கிறது.

4. மனக்க ?டம் கூடும் போது மனதை சற்று நேரம் அமைதியாக்க அரட்டை உலகம் கை கொடுக்கிறது.

5. பெண்களை இங்கும் வீட்டுக்குள் பெற்றோர் முடக்குவதால் அவர்களுக்கு மற்றவர்களுடன் உரையாட பாலம் சமைக்கிறது.

6. தொலைபேசிச்செலவை மிச்சம் பிடிக்கக் கூடியதாக இருக்கிறது.

இப்படியாக நன்மைகள் இருந்தாலும் தீமைகளும் இருக்கத்தான் செய்கிறது.

1. படிப்பில் கவனம் சிதைகிறது.(சிலர் இதை ஒப்புக்கொண்டுள்ளார்கள்.)

2. வேலைக்குப்போனாலும் எப்போ வேலையால் வருவோம் என இருக்கும்.

3. பல நண்பர்களை இழந்து விட்டேன் (இந்த அரட்டை மோகத்தால் ஓர் இளைஞனின் கவலை).

4 . சிலரில் உண்மையாகவே ஏதோ ஒரு பிரியம் வருகிறது. ( ஓர் இளை ?ியின் கருத்து)

5. கண்டபடி மின்னஞ்சலைக்கொடுப்பதால் கணணியுள் வைர ? பாதிப்பு நிகழ்கிறது.

6. குடும்பத்தில் இருக்கக்கூடிய கவனம் சிதைகிறது. ( இது எனது அனுபவம்.)

7. தனிமையையே தொடர்ந்து நாடக்கூடிய தூர்ப்பாக்கிய நிகழ்வை மனத்தளவில் ஏற்படுத்தி விடுகிறது.

8. உலக விடயங்களை அறிகிற தன்மை, அற்றுப்போகிறது.

9. விடிவது, இருள்வது இவை எல்லாம் தெரியாது.

10. சாப்பிடாமலே பல மணிநேரங்கள் அரட்டை அடிப்பதால் சமிபாட்டுத்தொகுதி பாதிக்கிறது.

11. முதுகு, நாரி நோ ஏற்படுகிறது, கண்மிகவும் நோகிறது. (இது எனது அனுபவம்.)

12 . அடுத்து இவ் அரட்டை உலகத்துள் தமிழை ஆங்கிலத்தில் எழுதுகிறதன்மை தான் அதிகம்.

உதாரணமாக நான் உன்னை காதலிக்கிறேன் என்றால்

யெெ ரெயெை மயவாயடமைநசயெ. இப்படியாக எழுதுகிறார்கள். தமிழ் எழுத்துக்களை மறக்கிற கொடுமையும் நிகழ்கிறது. (எனக்குக் கூட இக்கட்டுரையை கணணியில் எழுதும் போது ஆங்கிலத்தில் தான் எழுத எத்தனிக்கிறது விரல்கள். பாமினி கலைஅரசி எழுத்துக்கள் விரல் நுனிகளுக்குள் வர மறுக்கிறது.)

அடுத்து பலர் இவ் அரட்டை உலகுள் தம் வாழ்க்கைத்துணையை தேடிக்கொள்கிறார்கள். பொய்யான படங்களை தன் காதலிக்கு அல்லது காதலனுக்கு மின்னஞ்சல் செய்கிறார்கள். அவர்களும் நம்பி அழகானவன், அழகானவள் என நினைத்து காதல் புரிகிறார்கள். இவ் அரட்டை அரங்கத்துள் வார்த்தை ?ாலத்திற்கே முதலிடம். எல்லோரிடமும் அரட்டைப்பாசைகளை அவிழ்த்து விட்டால் எல்லோரையும் எம் பக்கம் ஈர்க்கலாம். இவ் அரட்டை அரங்கத்துள் போன என்னை மூன்று நாட்களாக யாரும் நட்புடன் விசாரிக்கவே இல்லை. வணக்கம் சொல்வதோடு சரி. பின் என் கணவர் கூறினார் இப்பிடியே இருந்தீங்கள் எண்டால் கட்டுரை எழுதின மாதிரித்தான். நீங்களும் வாடி போடி என்னடா நான் உன்னை காதலிக்கிறேன் என எழுதுங்கள் என்றார் எழுதினேன். எல்லோரையும் என் வசமாகிகினேன். கட்டுரை ஒன்று தயார்.

இதைச்சற்று ஆழமாக நோக்குவோம்.

இப்படியாக காதல் வளருவதால் அரட்டை உலகத்துள் தம்மைப்பற்றிய உண்மைகளை பின்னரும் பலர் வெளியிட தயங்குகிறார்கள். உதாரணத்திற்கு சிலர் தம் வயதை குறைத்து சொல்லி இருப்பார்கள். தன்னை இளைஞனாக இனம் காட்டிக்கொண்டவர் ஓர் வயது முதிர்ந்தவராக அல்லது ஏற்கனவே திருமணம் முடித்து மனைவி பிள்ளைகளோடு வாழ்பவராகவும் இருக்கலாம். தன்னை பெண் என அறிமுகப்படுத்தியவர் சில சமயம் ஆணாகக்கூட இருக்கலாம். இப்போ என்ன நிகழ்கிறது ? ஆணும், ஆணும்காதல்செய்யும் கொடுமை நடக்கிறது. இதே போல் பெண்ணும், பெண்ணும் காதல்செய்யும் கொடுமையும் நடந்தேறுகிறது. சிலர் ஏமாற்றுவதற்கென்றே அரட்டை உலகத்துள் வருகிறார்கள். இங்கு தான் மிக கவனமாக இருக்கவேண்டிய தன்மை காணப்படுகிறது. பின்னர் ஒருவரை ஒருவர் சந்திக்க முற்படுகிறார்கள். சில சமயம் அச்சந்திப்பு பெற்றோருக்கு தெரியாமல் நிகழ்கிறது. அச்சந்திப்பு பலாத்கார பாலியல் வல்லுறவாக முடிகிறது. ஆண் ஓடி விடுகிறான். எங்கே தேடிப்பிடிப்பது ? தேடிப்பிடித்து என்ன பயன் ? தம் பாலியல் வக்கிரத்திற்கு இவ் அரட்டை உலகம் துணைபோகிறது என்பது எத்தனை சிறார்களுக்கு தெரியும் ? ஏமாந்து போகிற தன்மைதான் அதிகம். இவ்வாறு ஏமாற்றம் அடைகின்ற போது இவர்களின் உளவியல் எவ்வளவு தூரம் பாதிப்படையப்போகிறது ? தனிமை இவர்களை கொல்லுமா ? கொல்லாதா ? தொலைத்துவிட்ட நண்பர்கள் மீண்டும் ஒட்டுவார்களா ? ஒட்டமாட்டார்களா ? பள்ளிப்படிப்பில் மீண்டும் கவனம் போகுமா ? போகாதா ?

பாதிக்கப்பட்ட சமிபாட்டுத்தொகுதி மீண்டும் பழையநிலையை அடையுமா ? அடையாதா ? இப்படியாக கேள்விக்கணைகளை கேட்டுக்கொண்டே போகலாம்.

பெற்றோர் ஆகிய நாமும் சமூகப் பிரங்ஞை உள்ளவர்களும் என்ன செய்யப்போகிறோம்

இவ் அரட்டை உலக தீமைகள் பற்றி. ?

பெற்றோராகிய நாம் பிள்ளைகள் கணணிமுன் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் மேல் ஓர் கண்ணாய் இருத்தல் நல்லது. கண்டபடி மின்னஞ்சல்களை பாவிப்பதை தடுக்கலாம். அரட்டை உலகின் பாதிப்புக்களை எடுத்துச்சொல்லலாம்.

முக்கியமாக வேலை, வீடு என நாம் இராது பிள்ளைகளின் பொழுதுபோக்கு விடயத்தில் அதிக அக்கறை எடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். தனிமையில் குழந்தைகளை இருக்க விடாது பார்ப்பதுவும் எமது கடமையாகிறது.

இப்படியாக அரட்டை உலகத்தின் பாதிப்பு நீள்கிறது. அத்துடன் சிலர் தனி ஆங்கிலத்திலும், தனிடொச்சிலும், தனி பிரெஞ்சு மொழியிலும் உரையாடுவதை காணக் கூடியதாக இருந்தது. சில இளைஞர் அரட்டை உலகத்துள் வரும் எல்லோருக்கும் பதில் சொல்பவர்களாகவும் வினாத் தொடுப்பவர்களாகவும் இருந்தார்கள். எனக்குள் பெரிய ஆச்சரியம். ஓ இவர்கள் அட்டாவதானி தசாவதானிகளாய் இருப்பது.

இவர்களின் திறமைகள் அரட்டை உலகத்துள்ளேயே தொலைந்து போகப்போகிறது என நினைத்து என்னால் பெருமூச்சொன்றை விடத்தான் முடிகிறது.

நளாயினி தாமரைச்செல்வன்

2001

Series Navigation

author

நளாயினி தாமரைச்செல்வன்.

நளாயினி தாமரைச்செல்வன்.

Similar Posts