மஞ்சுளா நவநீதன்
வைகோ கைது : கேட்கப்பட வேண்டிய கேள்விகள்
தடை செய்யப் பட்ட இயக்கத்தை ஆதரித்ததற்காக வைகோ கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்லப் படுகிறது. அப்படியென்றால் மற்ற பலரும் – வீரமணி, நெடுமாறன் , ராமதாஸ் போன்றோர் – ஏன் கைது செய்யப்படவில்லை ? இந்தக் காரணம் ஒரு பொய் என்று எல்லோருக்குமே தெரிகிறது ? என்ன திரைமறைவுப் பேரங்கள் பின்னணியில் உள்ளன ? ம தி மு க அமைச்சர்களால் ஜெயலலிதாவிற்கு ஆக வேண்டிய காரியம் என்ன ?
***
அரசியல்வாதிகளின் பின்னணி மக்களுக்குத் தெரியவேண்டாமா ?
அரசியல்வாதிகளின் பின்னணியை மக்களுக்குத் தெரிவிக்கக் கூடாது என்று எல்லாக் கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடிக் கொண்டிருக்கின்றன.வேறு எந்த செயலுக்கும் ஒன்று சேராத இவர்கள் தன்னுடைய குற்றப் பின்னணியும், சொத்துப் பின்னணியும் மக்களுக்குத் தெரியக் கூடாது என்பதில் மட்டும் மிகவும் ஒற்றுமையாய் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.
மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டும். உங்கள் எம் பி, எம் எல் ஏக்கு எழுதுங்கள். ஜனாதிபதிக்கு எழுதுங்கள். இந்த விதிகளைப் புறக்கணித்து நீர்த்துப் போன உருப்படியில்லாத சில சட்டங்களை இயற்றி இந்த விதிகளை ஒன்றுமில்லாமல் செய்ய இவர்கள் முயலுகிறார்கள். அவர்களைப் புறக்கணியுங்கள்.
பத்திரிகையாளர்களே இந்தப் போராட்டம் உங்கள் போராட்டமும் தான். சட்டப்படி தரவேண்டியதில்லை என்று நாடாளுமன்றம் சொல்ல முயன்றாலும் பத்திரிகைகளில் இந்த விஷயத்தை வெளியிட்டு அரசியல்வாதிகளை அம்பலத்துக்குக் கொண்டு வாருங்கள்.
***
ஜம்மு காஷ்மீரை மூன்றாகப் பிரிக்க வேண்டும்
இந்தக் கருத்தை முன்வைத்தவர்கள் ஆர் எஸ் எஸ் என்பதாலேயே இதை எதிர்ப்பவர்கள் உண்டு. ஆனால் மக்கள் எப்போதுமே சிறிய மாநிலங்களை ஆதரித்து வந்திருக்கிறார்கள். ஏற்கனவே உத்திரப் பிரதேசம் மூன்று மாநிலங்களாய்ப் பிரிந்ததுண்டு. தெலிங்கானாவை ஆந்திராவிலிருந்து பிரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கூடப் போராடுகிறது. இப்போதைக்கு நாயுடுவை அரசிலிருந்து இறக்க முடியாது, தெலிங்கானா அமைந்தால் ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்பது தான் காங்கிரஸின் நோக்கம் என்றாலும் கூட.
தமிழ் நாடும் கூட மூன்று பிரிவுகளாய் அமைவது தான் சரி. நாகர்கோவிலில் இருக்கும் ஒருவர் ஏன் நெடும்பயணம் செய்து தலைநகரை அடைய வேண்டும் என்பது புரியாத புதிர். சிறிய மாநிலங்கள் தான் உள்ளூர்ப் பிரசினைக்கு முக்கியத்துவம் தரும் அளவில் ஆட்சி செய்ய முடியும். அரசியல் அதிகாரப் பகிர்வும் நடைபெறும். ஜெயலலிதா ஆட்சியில் இல்லாத போது மதுரையில் தமிழ்நாட்டை இரண்டாய்ப் பிரிக்க வேண்டும் என்று ஒரு சிலர் கோரி மதுரையில் கூட்டம் போட்டுப் பேசினார்கள். ஆனால் இப்போது அது பற்றி யாருமே மூச்சு விடவில்லை. ஏற்கனவே பாண்டிச்சேரி தனி மானிலமாக இருப்பதே , தமிழ் பேசும் பகுதிகள் எல்லாம் ஒரே மானிலத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதன் நிரூபணம் தான்.
***
ஜம்மு காஷ்மீர் சுதந்திரப்போராட்டத்தில் இன்னும் ஒரு பொன்னான பக்கம்
ஜம்மு காஷ்மீர் சுதந்திரப்போராட்டத்தில் இன்னும் ஒரு பொன்னான பக்கம் தங்க எழுத்துக்களால் எழுதப்பட்டிருக்கிறது. காஷ்மீர் மக்களின் இனவிடுதலைக்கு எதிராக இருந்த இந்து கூலித்தொழிலாளர்கள் என்ற துரோகிகளின் முடிவு எதிர்கால துரோகிகளுக்கு ஒரு பாடமாக இருக்கும். இதுவரை படிப்பித்த பாடங்கள் புரியாமல் இன்னும் இந்துக்களாகவே தொடரும் துரோகிகளின் முடிவு எதிர்கால சுதந்திர (அல்லது பாகிஸ்தானிய)காஷ்மீரில் பிளாட்டின எழுத்துக்களால் எழுதப்படும்.
***
manjulanavaneedhan@yahoo.com
- அவள் அழுகிறாள்….
- மருமகள்
- ஒலிக்கும் சதங்கை
- யுவான் ருல்ஃபோவின் பெட்ரோ பராமோ காட்சி பதிவும் கதை வெளியும்
- விளையாட்டும் விபரீதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 19 – சி.சு.செல்லப்பாவின் ‘குருவிக்குஞ்சு ‘)
- திருமதி. வனிதா முறை (Method) ‘மட்டன் பிரியாணி ‘
- மனிதர்களிடன் இருக்கும் எய்ட்ஸ் -எதிர்ப்பு ஜீன்
- கண்ணே! கவிதைப் பெண்ணே!
- கனவு வந்து போனது
- இதுவும் அதுவும்
- ஆழம்
- ஐந்தாம் வகுப்பு நண்பன்.
- நட்பு
- அந்த ஒரு மாதம்…
- ஆழ்ந்த ஆசை
- அதிசயம் ஆனால் உண்மை : அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்தனர்
- சிகாகோவில் தமிழ் மாநாடு : மறுபடியும் பழமைக்குண்டுசட்டிக்குள் குதிரை ஓட்டுவோம்.
- இந்த வாரம் இப்படி – சூலை 14 2002 (வைகோ, அரசியல்வாதிகள், ஜம்மு காஷ்மீர், படுகொலைகள்)
- ஒலிக்கும் சதங்கை
- கொச்சைப்படுத்தாதீர்கள், தயவு செய்து..
- இலைக் குணம்