This entry is in the series 20030925_Issue

நாதன்


காவேரி பாலத்தில் இருந்து கீழே குதித்தான்,
மண்டை உடைந்தது.

அனைவருக்கும் ஒரு தனித்திறமை கடவுள் கொடுப்பார்
சொன்னார்கள்!
யோசித்தான்!
தாம் எதற்கும் லாயக்கில்லை என்பதை உணர்ந்தான்
அரசியல்வாதி ஆனான்!

காலை ஓன்பது மணி..
தேவியில் க்யூவில் நின்றிருந்தான்..
தலைவரின் படத்தை பத்தாவது முறையாக பார்க்க..
நடுவில் புகுந்தான் ஒரு ரசிகன்
இவன் அவனை அடித்து
பின்னுக்கு தள்ளினான்..
பெருமை பிடிபடவில்லை, அவனை பின்னுக்கு தள்ளியதை நினைத்து!
பாவம் அவனுக்கு தெரியவில்லை!
வாழ்க்கையில் இன்னும் பலரை பின்னுக்கு தள்ளவேண்டும் என்பது!

gsvnatha@rediffmail.com

Series Navigation