இந்தியாவில் வறுமையின் முடிவு, நிலைமையும் காரணங்களும்.

This entry is part [part not set] of 26 in the series 20020421_Issue

இரா மதுவந்தி


இந்தியாவில் வறுமையில் இருப்பவர்கள் 26 சதவீதம்

பெப்ரவரி 26ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொருளாதார சர்வே 2001-2002 அறிக்கையின் படி, இந்தியாவில் 26 சதவீதத்தினரே வறுமையில் வாழ்கிறார்கள். கணக்கு எடுத்த நாட்களிலின் ஆரம்பத்திலிருந்து மிகக்குறைந்த சதவீதம் இது.

1973-74 இல் 55 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்துவந்தார்கள். இது 1993-94இல் 36 சதவீதமாகக் குறைந்து, இப்போது 26 சதவீதமாக இன்னும்குறைந்துள்ளது. வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் சதவீதம் குறைந்தாலும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை கடந்த இருபது வருடங்களில் அதே எண்ணிக்கையில்தான் இருக்கிறது. அதாவது சுமார் 32 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆனால், 1999-2000த்தில் எடுத்தக் கணக்குப்படி இந்த மக்கள் தொகையும் வெகுவாகக் குறைந்து 26 கோடியாக ஆகியிருக்கிறது.

கிராமப்புறத்தில் 27.09 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 23.62 சதவீதமாகவும் குறைந்திருக்கிறது. நாடு முழுவதும் எடுத்தால், 26.10 சதவீதமாக இருக்கிறது.

பஞ்சாப் ஹரியானா மாநிலங்களில் அதிக விவசாய வளர்ச்சியின் காரணமாக வறுமை குறைந்திருக்கிறது. கேரளா மனித வாழ்க்கை வளர்ச்சி முன்னேற்றங்களாலும், மேற்கு வங்காளத்தில் நிலச்சீர்திருத்தங்களாலும், பஞ்சாயத்து முறைகளாலும் வறுமை குறைந்திருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில், உணவு தான்யங்களை நேரடியாக மக்களுக்கு வினியோகம் செய்வதால் வறுமை குறைந்திருக்கிறது. ஜம்மு காஷ்மீரில் வறுமையில் இருப்போரின் எண்ணிக்கை 21.69சதவீதம் குறைந்திருக்கிறது. ஹரியானாவில் 16.31 சதவீத குறைவு நடந்திருக்கிறது. ஹிமாசல் பிரதேஷ் 19.70 சதவீதமும், பஞ்சாப் 5.61 சதவீதமும் குறைந்திருக்கின்றது. 1993-94 எண்ணிக்கையையும், 1999-2000 எண்ணிக்கையையும் கணக்கிலெடுத்தால் இந்தக்குறைவுகள்.

பஞ்சாப் மாநிலத்தில் சுமார் 5.75 சதவீதமே ஏழைகள் இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் 6.35 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 5.75 சதவீதமாகவும் இது இருக்கிறது. ஹரியானாவில் இது நகர்ப்புறங்களில் 9.99 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 8.27 சதவீதமாகவும் இருக்கிறது.

மறுபுறம், ஒரிஸ்ஸா, மத்தியப்பிரதேஷ், பிகார், உத்தர பிரதேஷ் மாநிலங்களில் வறுமையில் வாழ்பவர்களின் சதவீதம் 42.83 சதவீதத்திலிருந்து 30.89 சதவீதமாக 1999-2000த்தில் குறைந்திருக்கிறது. இதே காலகட்டத்தில் கேரளா, ஜம்மு காஷ்மீர், கோவா, லட்சத்தீவுகள், டெல்லி, ஆந்திரபிரதேஷ், குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா, மேற்குவங்காளம், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய இடங்களில் குறிப்பிடத்தக்க அளவு வறுமை குறைந்திருக்கிறது.

இதற்கு முந்தைய வருட வறுமை சதவீதங்களை கீழ்க்கண்ட முகவரியில் பார்க்கலாம்

http://www.nic.in/stat/comenv2000tab7.1.4.htm

சில 1993-94ஆம் வருட அட்டவணைகள் (ஒன்பதாம் ஐந்தாண்டு திட்டத்தின் பிற்சேர்க்கைகளிலிருந்து)

கிராமப்புற, நகர்ப்புறங்களில் வறுமையின் கணிப்பு.

(அந்த வருடம், அந்த குறிப்பிட்ட அளவு பணத்துக்குக் கீழ் மாதம் ஒருவர் தன் செலவுக்கு பெற்றால், அவர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவராக கணிக்கப்படுவார்)

( உதாரணமாக, தமிழ்நாட்டில், சென்னையில், ஒரு குடும்பத்தில் 4 பேர் இருக்க, குடும்பத்தலைவர் மட்டுமே சம்பாதிக்கும் ஒரு வீட்டில், 1993 ஆம் வருடம், மாதம் 1000 ரூபாய் மட்டுமே சம்பாதித்தால் அந்த நான்கு பேரும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களாக மதிக்கப்படுவார்கள்)

கிராமப்புற, நகர்ப்புறங்களில் வறுமைக்கோடு

Poverty Lines in Rural and Urban Areas

(Rs. monthly per capita)

Rural Urban

S.No. States —————- —————–

1973-74 1993-94 1973-74 1993-94

—————————————————————-

1. Andhra Pradesh 41.71 163.02 53.96 278.14

2. Assam 49.82 232.05 50.26 212.42

3. Bihar 57.68 212.16 61.27 238.49

4. Gujarat 47.10 202.11 62.17 297.22

5. Haryana 49.95 233.79 52.42 258.23

6. Himachal Pradesh 49.95 233.79 51.93 253.61

7. Karnataka 47.24 186.63 58.22 302.89

8. Kerala 51.68 243.84 62.78 280.54

9. Madhya Pradesh 50.20 193.10 63.02 317.16

10. Maharashtra 50.47 194.94 59.48 328.56

11. Orissa 46.87 194.03 59.34 298.22

12. Punjab 49.95 233.79 51.93 253.61

13. Rajasthan 50.96 215.89 59.99 280.85

14. Tamil Nadu 45.09 196.53 51.54 296.63

15. Uttar Pradesh 48.92 213.01 57.37 258.65

16. West Bengal 54.49 220.74 54.81 247.53

—————————————————————-

17. All India 49.63 205.84 56.76 281.35

—————————————————————-

Note : (1) The state-wise poverty lines are based on the methodology of

the Expert Group as adopted by the Planning Commission.

(2) The poverty lines at All India level are implicitly derived

from All India poverty ratio and NSS consumption expenditure

distribution of the year.

(குறிப்பு. 2001-02இல் இந்தியாவின் வறுமைக்கோடு என்பது ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு சுமார் 100 ரூபாய் வருமானமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 4 பேர் இருக்கும் ஒரு வீட்டில், ஒருவர் மட்டுமே சம்பாதிக்கும் போது, அவரது மாத வருமானம் சுமார் 12000 ரூபாயாக இருக்க வேண்டும். இந்தக் கணக்கின் படி, தமிழ்நாட்டில் இருப்பவர்களில் 70 சதவீதத்தினர் இதற்கு மேல் சம்பளம் பெரும் குடும்பத்தில் இருக்கிறார்கள்.)

இந்த அட்டவணை ஒரு மாநிலத்தில் எவ்வளவு பேர் அவ்வாறு வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கிறார்கள் என தெரிவிக்கிறது.

1973இல் தமிழ்நாட்டில் சுமார் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்தார்கள் சுமார் 57 சதவீதம். அதாவது 1.72 கோடி மக்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருந்தார்கள்.

Annexure-1.2

Incidence of Poverty in 1973-74

——————————————————————————-

Rural Urban Total

—————– ————— —————–

S.No. State No. of Poverty No. of Poverty No. of Poverty

Poor Ratio Poor Ratio Poor Ratio

(Lakhs) (%) (Lakhs) (%) (Lakhs) (%)

——————————————————————————-

1. Andhra Pradesh 178.21 48.41 47.48 50.61 225.69 48.86

2. Assam 76.37 52.67 5.46 36.92 81.83 51.21

3. Bihar 336.52 62.99 34.05 52.96 370.57 61.91

4. Gujarat 94.61 46.35 43.81 52.57 136.42 48.15

5. Haryana 30.08 34.23 8.24 40.18 38.32 35.36

6. Himachal Pradesh 9.38 27.42 0.35 13.17 9.73 26.39

7. Karnataka 128.40 55.14 42.27 52.53 170.67 54.47

8. Kerala 111.36 59.19 24.16 62.74 135.52 59.79

9. Madhya Pradesh 231.21 62.66 45.09 57.65 276.30 61.78

10. Maharashtra 210.84 57.71 76.58 43.87 287.42 53.24

11. Orissa 142.24 67.28 12.23 55.62 154.47 66.18

12. Punjab 30.47 28.21 10.02 27.96 40.49 28.15

13. Rajasthan 101.41 44.76 27.10 52.13 128.51 46.14

14. Tamil Nadu 172.60 57.43 66.92 49.40 239.52 54.94

15. Uttar Pradesh 449.99 56.53 85.74 60.09 535.73 57.07

16. West Bengal 257.96 73.16 41.34 34.67 299.30 63.43

17. All India 2612.90 56.44 600.46 49.01 3213.36 54.88

——————————————————————————-

1993-94இல் தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து 1.2 கோடி மக்களாகக் குறைந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களில் 32 சதவீதத்தினரே வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பதாக கணிக்கப்படுகிறார்கள். அதாவது மூன்றில் ஒருவர் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கிறார். பஞ்சாபில் வறுமை வெகுவாகக் குறைந்திருப்பதைக் காணுங்கள்.

Annexure-1.3

Incidence of Poverty in 1993-94

——————————————————————————-

Rural Urban Total

State —————— —————- ——————–

No. of Poverty No of Poverty No of Poverty

Poor Ratio Poor Ratio Poor Ratio

(Lakhs) (%) Lakhs) (%) (Lakhs) (%)

——————————————————————————-

1. Andhra Pradesh 79.49 15.92 74.47 38.33 153.97 22.19

2. Assam 94.33 45.01 2.03 7.73 96.36 40.86

3. Bihar 450.86 58.21 42.49 34.50 493.35 54.96

4. Gujarat 62.16 22.18 43.02 27.89 105.19 24.21

5. Haryana 36.56 28.02 7.31 16.38 43.88 25.05

6. Himachal Prade 15.40 30.34 0.46 9.18 15.86 28.44

7. Karnataka 95.99 29.88 60.46 40.14 156.46 33.16

8. Kerala 55.95 25.76 20.46 24.55 76.41 25.43

9. Madhya Pradesh 216.19 40.64 82.33 48.38 298.52 42.52

10. Maharashtra 193.33 37.93 111.90 35.15 305.22 36.56

11. Orissa 140.90 49.72 19.70 41.64 160.60 48.56

12. Punjab 17.76 11.95 7.35 11.35 25.11 11.77

13. Rajasthan 94.68 26.46 33.82 30.49 128.50 27.41

14. Tamil Nadu 121.70 32.48 80.40 39.77 202.10 35.03

15. Uttar Pradesh 496.17 42.28 108.28 35.39 604.46 40.85

16. West Bengal 209.90 40.80 44.66 22.41 254.56 35.66

17. All India 2440.31 37.27 763.37 32.36 3203.68 35.97

——————————————————————————-

கீழ்க்கண்ட அட்டவணை, இந்தியா தொடர்ந்து 7 சதவீத உற்பத்தி வளர்ச்சி ஒவ்வொரு வருடமும் கொண்டிருந்தால், இந்தியாவின் வறுமை எவ்வாறு குறையும் என்று ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் நிர்ணயித்த எண்ணிக்கை. 2011-12 ஆம் வருடம் தமிழ்நாட்டில் சுமார் 4 சதவீதத்தினரே வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பார்கள் என்பதைக் காணுங்கள்.

Table 1-12 : Projection of Statewise Poverty Ratios in the

Perspective Period

(per cent)

—————————————————————

Sl.No. State 1996-97 2001-02 2006-07 2011-12

—————————————————————

1. Andhra Pradesh 17.35 11.13 5.35 2.44

2. Assam 26.46 10.65 3.82 2.07

3. Bihar 44.09 27.46 14.08 6.52

4. Gujarat 17.07 9.05 3.94 1.28

5. Haryana 18.41 10.16 5.00 2.58

6. Himachal Pradesh 22.38 14.02 7.34 3.14

7. Karnataka 30.72 17.86 8.68 3.45

8. Kerala 21.22 11.35 4.76 1.38

9. Madhya Pradesh 33.38 21.97 12.75 6.81

10. Maharashtra 32.74 20.66 11.41 5.43

11. Orissa 40.21 22.93 10.76 4.63

12. Punjab 8.02 2.98 0.85 0.15

13. Rajasthan 20.31 10.85 4.70 1.52

14. Tamil Nadu 30.73 18.11 8.96 3.59

15. Uttar Pradesh 32.52 21.91 12.88 6.92

16. West Bengal 25.08 13.54 6.26 2.86

————————————————————-

All India 29.18 17.98 9.53 4.37

All India (weighted) 29.02 17.65 9.19 4.39

————————————————————-

பிகார், மத்தியபிரதேஷ், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களின் முதலெழுத்துக்கள் சேர்க்கப்பட்டு பீமாரு மாநிலங்கள் என்று கூறப்படுகின்றன. பீமாரு என்றால் ‘நோய்வாய்ப்பட்ட ‘ என்று இந்தியில் பொருள். இந்த மூன்று மாநிலங்களுக்கும் மத்திய அரசாங்கம் தேவைக்குக் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்வதாலும், இந்த மாநிலங்களில் ஊழல் நிறைந்து இருப்பதாலும், பெரிய மாநிலங்களாக இருப்பதால் வளர்ச்சிப்பணிகள் நிர்வாகம் சரியாக நடைபெற முடியாததாலும், இந்த மாநிலங்களின் ஏழ்மை மற்ற மாநிலங்களை விட அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக தெற்கு மாநிலங்களான ஆந்திர பிரதேஷ், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகியவை மற்ற மாநிலங்களை விட குறைவான ஏழைகளைக் கொண்டு இருப்பதைப் பார்க்கலாம். மிகக்குறைவான ஏழைகள் இருப்பது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் பஞ்சாப் மாநிலத்திலும். மேற்கு மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா ஆகியவையும் திறந்த தொழில்துறை கொள்கை காரணமாக ஏழ்மையைக் குறைத்து உள்ளன.

இந்தியாவில் வறுமை குறைவதற்கு முக்கிய காரணம் , இந்திராகாந்தியின் ‘வறுமையை ஒழிப்போம் ‘ (கரீபி ஹடாவ்) போன்ற கோஷங்கள் அல்ல. நரசிம்மராவ் ஆட்சிக்கு வந்ததும் கொண்டுவந்த திறந்த பொருளாதார சீர்திருத்தங்கள் தான் காரணம்.

இந்த திறந்த பொருளாதார அமைப்பை உருவாக்க வேண்டுமென்று, நேருவுடன் மனஸ்தாபப்பட்டு, காங்கிரஸிலிருந்து முதன் முதலில் பிரிந்தவர் ராஜாஜி. ராஜாஜி பரிந்துரைத்த திறந்த பொருளாதார அமைப்பை உருவாக்கியிருந்தால் இந்தியா இன்னேரம் உலக பணக்கார நாடுகளில் ஒன்றாக இருக்கும் என்று பலர் கூறுகிறார்கள். ராஜாஜி முக்கியமாக வெறுத்தது லைஸன்ஸ்-கோட்டா ராஜ்யம் என்று அழைக்கப்பட்ட கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார அமைப்பு. சோவியத்-கம்யூனிஸ பாதிப்பினால், ரஷ்யா போலவே ஐந்தாண்டு திட்டங்களையும், எந்த தொழில்துறை எந்த அளவு வளர்க்கப்பட வேண்டும், எந்த பொருளாதார பிரிவு எந்த அளவு வளரவேண்டும் என்று திட்டங்களையும் இந்தியாவில் அமல் செய்தார். லைஸன்ஸ் முறை, யார் எந்த உற்பத்தி செய்ய வேண்டுமென்றாலும், டெல்லிக்கு வந்த அரசாங்க அலுவலகங்களில் நின்று லைஸன்ஸ் பெறவேண்டும் என்ற முறை. இதனால், ஊழல் பெருக்கெடுத்து ஓடியது என்பதும், உண்மையான தொழில் முனைவர்கள் நசுக்கப்பட்டார்கள் என்பதும் நமக்குத் தெரிந்த வரலாறு. இதனால், ஜிடி நாயுடு கேட்ட சிமிண்டு ஆலை வேறொருவருக்குத் தாரை வார்க்கப்பட்டது. கோட்டா என்பது எந்த தொழில்சாலை எவ்வளவு உற்பத்தி செய்ய வேண்டும் என்ற அனுமதி பெற்றுக்கொள்வது. உதாரணமாக, சைக்கிள் தொழிற்சாலைக்கு 10000 சைக்கிள்கள் உற்பத்தி செய்யும் திறன் இருந்தாலும், அது 5000 சைக்கிள்களையே உற்பத்தி செய்யுமாறு அனுமதி வழங்கப்பட்டிருக்கும். இதனாலும் உற்பத்தி திறன் வெகுவாகப் பாதித்தது. இதுவும் ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக இருந்தது.

ராஜாஜி இவைகளை வெறுத்து, காங்கிரஸிலிருந்து வெளியேறி சுவதந்திரா கட்சியை ஆரம்பித்தார். ஆச்சரியத்துக்கு இடமின்றி, ஆர்வமான தொழில்முனைவர்களான குஜராத்திகள் இருந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில் சுவதந்திரா கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வரை வந்தது. ராஜாஜிக்குப் பின்னர் சுவதந்திரா கட்சியில் பெரிய ஆட்கள் இல்லாததால் அது நசிந்தது. அதில் இருந்த பலர் ஜனசங்கத்துக்குத் தாவினார்கள். வியாபாரிகளின் ஆதரவு நிறைந்த கட்சியாக ஆரம்பித்த ஜனசங்கம், ராஜாஜியின் கொள்கைகளையும் தத்தெடுத்துக்கொண்டது. அது பாரதீய ஜனதா கட்சியாக உருமாறினாலும், ராஜாஜியின் கொள்கைகளை தொடர்ந்து பேசி வந்தாலும், ராஜாஜியின் கொள்கையான கட்டுப்பாடற்ற பொருளாதார அமைப்பை அது ஏற்றுக்கொள்ளவில்லை. பாரதீய ஜனதா கட்சியில் இருந்த காந்தியவாதிகளும், சுதேசி தொழில் ஆதரவாளர்களும், வெளிநாட்டு மூலதனம் பல துறைகளில் கூடாது என்று வறுபுறுத்தி வந்தார்கள். இன்னும் வற்புறுத்தி வருகிறார்கள்.

ராஜீவ் காந்தி காலத்தில் அளவுகடந்த இறக்குமதியின் காரணமாக இந்தியா மஞ்சள் கடுதாசி நீட்டும் நிலைமை வந்தது அனைவருக்கும் தெரியும். சந்திரசேகர் பிரதமராக இருந்தபோது, இந்தியாவின் தங்கம் விமானத்தில் லண்டனுக்கு எடுத்துச்செல்லப்பட்டு கடன் வாங்கி அரசாங்கத்தின் செலவுகளுக்கு உபயோகம் செய்தது. அவர் பின்னே வந்த நரசிம்மராவ் அவர்களும், அவரது நிதி மந்திரியான மன்மோகன்சிங் அவர்களும் இதுவரை பேசிவந்த சோசலிஸக் கொள்கைகளையும், லைஸன்ஸ் கோட்டா ராஜ்யத்தையும் கைகழுவிவிட்டு, யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் உற்பத்தி செய்து கொள்ளலாம் என்று அறிவித்தார்கள். இதனை ஒரேயடியாக அறிவிக்காமல், படிப்படியாக தொழில்துறைகளை வரிசைப்படுத்தி அறிவித்தார்கள். இதனால் இந்தியாவின் வளர்ச்சி விகிதம், 2 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்ந்தது. உபரி உற்பத்திப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட ஆரம்பித்தன. ஏற்றுமதியினால், இந்தியாவின் வங்கி கணக்கில் பணம் அதிகரித்து, கடனுக்கு வைக்கப்பட்ட தங்கம் மீட்கப்பட்டது.

தொடர்ந்து சீர்திருத்தங்கள் நடந்திருக்க வேண்டும். அதாவது நஷ்டம் ஈட்டும் அரசு ஆலைகள் மூடப்பட்டிருக்கவேண்டும். லாபம் ஈட்டும் அரசு ஆலைகள் சீர்திருத்தம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், பலகட்சிக் கூட்டணியில் இருக்கும் இந்த தேசிய முன்னணி அரசு பல விஷயங்களை தூக்கிப்போட்டுப் பிடித்துக்கொண்டிருப்பதால், விஷயங்கள் மெதுவாகவே நடந்து கொண்டிருக்கின்றன. இதனால், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 5.8ஆக குறைந்துவிட்டிருக்கிறது. மேலும் மன்மோகன்சிங் சமீபத்தில் ஒரு பேட்டியில் சொன்னது போல, அனைவருக்கும் சமூகப்பாதுகாப்பு கொடுக்காமல் பல விஷயங்களைச் செய்யமுடியாது. செய்யவும் கூடாது. ஒருவர் வேலை இழந்தால் அவருக்கு ஒரு குறிப்பிட்ட ஊதியம் வழங்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும், மறு வேலைக்கான பயிற்சி போன்றவைகள் வழங்கப்பட வேண்டும். முதியோர் பாதுகாப்பு மான்யம் வழங்கப்பட வேண்டும். இவை அனைத்தையும் செய்துவிட்டுத்தான் ஆலைகளை மூடுவது போன்ற வேலைகளில் இறங்க வேண்டும்.

2012இல் இந்தியாவில் வறுமையில் இருப்பவர்களின் எண்ணிக்கை சைபராகாமல் இருக்கலாம். ஆனால், இந்த தாராளமயக் கொள்கைகள் தொடர்ந்தால், அது நிச்சயம் இன்றையைவிட மிக மிகக்குறைந்துதான் இருக்கும் என நம்பிக்கை கொள்ளலாம்.

**

நேற்றைக்கு வந்த உலக வங்கி அறிக்கை ஒன்று இந்தியாவின் பொருளாதாரம் இந்த வருடம் சுமார் 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் விரிவடைந்து, உலகத்தின் நான்காவது மிகப்பெரிய பொருளாதாரமாக ஆகி இருப்பதை தெரிவிக்கிறது. அமெரிக்கா, சீனா, ஜப்பானுக்கு அடுத்த பெரிய பொருளாதாரமாக இந்தியா இடம் வகிக்கிறது. ஒரு இந்தியனின் சராசரி வருட வருமானம் சுமார் 2350 அமெரிக்க டாலரை எட்டி இருக்கிறது.

***

Series Navigation