இது போன்ற…

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

கற்பகம்


————–
தனிமையுடன் தனித்துக்கிடந்து
தழுதழுப்பும் தென்படவிடாது
விக்கல் வெளிவரக் கூடாது
விம்மல் விழுந்துவிடக் கூடாது
என்று,
மரணத்தை மோனத்தில் மறைத்து
வாய்கிழித்து
இதயம் பிளந்து
கதறவிடா இது போன்ற
துயரம் மட்டும் துடைத்துவிடு…

————-

karpagam610@yahoo.com

Series Navigation