இது பொய்யா ?
பிச்சினிக்காடு இளங்கோ

(சிங்கப்பூர்)
ஏதோ ஒன்றுக்காக
உண்மையைத் தொலைத்துவிடுகிறோம்
யாரோ ஒருவருக்காக
சுயத்தை
இழந்துவிடுகிறோம்
எதனாலோ பலநேரம்
முதுகெலும்பை மறந்துவிடிகிறோம்
எதற்காகவோ சிலநேரம்
மயங்கிவிடுகிறோம்
இருக்கும் மீதியோடு
சுவாசிப்பதை
வாழ்க்கை என்கிறோம்
—-
pichinikkaduelango@yahoo.com