இதம்

This entry is part [part not set] of 24 in the series 20011215_Issue

ஸ்ரீனி.


விழிகளின் விளிம்புகளில் ததும்பும் நீர்த்துளிகள்,
வெட்டவெளியை வெறிக்கும் பார்வை,
அடிக்கும் காற்றில் ஆட்டம் போட்டு
களைத்துப் போகும் ஒற்றை முடி,
நீர்த்துளிகளை நிறுத்த முகத்தில் விசை –
அழுந்தக்கடிப்பதால் சிவக்கும் இதழ்கள்,
முகத்தைத் தாங்கும் முழங்கால்கள்,
சிாிக்கும் போது துடிக்கும் இமைகள்,
இன்று
குளிக்கும் விழிகளின் கொந்தளிப்பைக் கண்டு
சிறகடிக்க பயந்து சிமிட்டாத இமைகள்,
நிலவின் தயவில் தொியும் காட்சிகள்.
அட!
இப்போழுது தானே
வார்த்தகளை வாளாய் கொண்டு
ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டோம் !
காயங்கள் இன்னும் ஆறாத போதும்
வலியினை மறக்கச் செய்யும் காட்சிகளின் இதம்
மருத்துவனுக்கு புாியாது இந்த மாய ஜாலம்,
விழிகளுக்கு இத்தனை வலுவா !
மீண்டும் ஒருமுரை
என் நெஞ்சில் உன் முகம் வைத்து
முதலிருந்து துவங்குவோமா ?
என்னவளே !
உறக்கம் நம்மை தழுவும் முன்
ஒரேயொரு முரை
அணைத்துக் கொள்கிறேன்,
நம் நெருக்கத்தின் உஷ்ணத்தை
உன் கண்ணீரை கொண்டு அணைத்துவிடாதே.

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி