ஆழ்ந்த ஆசை

This entry is part [part not set] of 22 in the series 20020714_Issue

ராஜி


இது செய்தி அல்ல! ஓ அன்புள்ள மன்மதா!
என் மனத்தில் இஇருப்பது வேதனையா ? விதியா ? ?
சொல்லத் தயங்கும் கூச்சமான ஒசை
எனக்கு உன்மேல் ஆழமான ஆசை!

சலிப்பு, அலட்சியம் ஏற்படக் கொண்டு
நெஞ்சில் அன்பு தீயாய் எரிவதும் உண்டு!
எல்லாம் உன்னிடம் சொல்லவேண்டும், ஆனால் சொல்லமுடியவில்லை
சொல்லாமலும் என்னால் இஇருக்கமுடியவில்லை
எனக்கு உன்மேலுள்ள ஆழ்ந்த ஆசை!

ஒரு பயம் நிஜமாகவே இருக்கிறது இன்று
இஇந்தப் பாசம் நாசமாய்ப் போகுமோ என்று!
பூப் போலே வளரும் என் காதல் ஆர்வமே
ஏற்காமல் போன துயரமாய் மாறுமோ ?
மன்மதா! உன்மேல் ஆழமான ஆசை!

(ஒரு உருதுப் பாடலைத் தழுவியது)

Series Navigation

ராஜி

ராஜி