This entry is in the series 20100206_Issue

செ. பாலச்சந்தர்..


….
ஒவ்வொரு முறையும்,

உன்னிடம் வாதிட்டு,

தோற்றதின் படிமங்கள்,

ஆயத்தப்படுத்துகின்றன,

அடுத்தமுறை உன்னை வீழ்த்த,

இம்முறை வார்த்தையையும்,

வாதத்திற்கான காரணியையும்,

ஒன்று சேர்த்து கூர்தீட்டி,

ஆயுதமாய் திரித்து,

மறைத்தவாறு,

தோன்றுகிறேன் உன் முன்னே…

துவங்குகிறது வாதம்,

நீண்ட அவ்வார்த்தை யுத்தத்தில்,

ஆயுத பிரயோகத்திற்கான,

என் முறையில்,

சிரித்து வைகிறாய்,

சாதுர்யமாக…

மழுங்கி இருக்ககூடும்,

ஆயுதத்தின் கூர்முனை….

Series Navigation