ஆபரணம்

This entry is part [part not set] of 29 in the series 20080619_Issue

நிஷாந்தன்


வெறுங்கண்ணால் எதையும்
காணவியலா கும்மிருட்டு.
கைக்கெட்டிய தூரத்தில்
அகப்படவேயில்லை
கைக்கடிகாரமோ அல்லது கைபேசியோ.
பிறகு
சன்னலோரப் புறாவின்
சிறகடிப்பு வெளிச்சத்தில்
தேடி அணிந்து கொண்டேன்
எனது தினத்துக்கான
முதல் புன்னகையை.


poet.nishanthan@gmail.com

Series Navigation