ஆன்மிகத் தேடலும் மந்திர நிகழ்வுகளும் – சில கவிதைகள்

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

சித்தகவி


(Jun 08, July 22, July 29, Apr 14, Dec 09, Dec 11, Apr 14, Jun 11 ஆகிய நாட்களை நினைவில் வைத்திருக்கும் ஒரு அழகிய பாரதி-புதுமை பெண் தேவதைக்கு இந்த கவிதைகள்)

அற்புதக் கனவு

ஒரு மலைச் சரிவு பள்ளத்தாக்கில்

குளிர்ந்த மாலைப் பொழுதினில்

அகல கைவிரித்து தென்றலைக் கோதி

முன்னோக்கி ஓடும் என்னை துரத்தி துரத்தி

என் கைவிரல்களுக்குள் தன்னை இணைத்துக் கொள்ளும்

மயில் வண்ண தேன் சிட்டு குருவிதனை

வாரிப்பிடித்து முத்தமிட எத்தனித்த போது

நழுவிச் செல்லும் கணம் தனில் என் எதிர் திசையில்

முகம் நோக்கி பறந்து வந்து முத்தங்களை வழங்கியது

மற்றொரு செந்நிற வால் சிட்டுக் குருவி.

Mystical Poems (ஒரு கொல்லி பாவைக்காக)

ஒரு பறவையின் குரலோசையில் உன் வரவை எதிர்பார்த்து
ஏமாந்திருந்தெனக்கு வரம் தந்தது ஒரு மாலைக் கதிரவன்
மழைச் சாரலுடன் ஒரு வானவில்!

ஒரு பருந்தின் வெட்டுப் பார்வையில் உன் அழகைக் காண காத்திருந்து
ஏமாந்திருந்தெனக்கு வந்தது கொட்டும் இடி மழையுடன் ஒரு சூறைக்காற்று!

இரு புறமும் மரங்கள் சூழ்ந்த ஒரு கானகப் பாதையில் உன் நினைவில் உன்னை ஊடுருவும் பயணமாக நான் நடக்கையில், அங்கும் இங்கும் கிளைக்கு கிளை தாவி கோபத்துடன் என்னை வழிதடுத்து குரைக்கும் ஒரு அணில்; இது போல் ஆக்ரோஷமாகக் குரைக்கும் அணில் நான் பார்ததேயில்லை; அது என்னிடம் ஏதோ சொல்ல விழைகிறது என்பது மட்டும் நிச்சயம்!

கள்வன்?

நான் உன்னிடம் எதை எடுத்தேன், என்னை கள்வன் என சொல்ல?

உன் பொருளா? இல்லையே; உடலா? இல்லவேஇல்லைலையே; உன் வார்தைகள்? இல்லையடி? இதயத்தையா? உனக்குதான் தெரியும்? மனத்தையா? அதை நான் எடுத்து செல்லாமல் ஓரிடத்தில் நிறுத்து எனதான் சொன்னேன்! உன் சிந்தையை தீப்பொறி பறக்க உராய்ந்து சென்றேன், அதில் ‘நான்’ என்ற ‘நீ’ யும், ‘நீ’ என்ற ‘நானும்’ மந்திரமாய் மாயக் குழந்தைகளானோம்!!

மழை பயணம்

காத்திருக்கும் ஒரு முடிவை நோக்கிய நிகழும் பயணத்தின் போது

என் மீது தூவும் இந்த மழைத்துளி ஒவ்வொன்றும் உன் விழிகள்

பொழியும் அமுத வெள்ளமெனில், உண்மையில் நான் விழைவது

முடிவற்ற ஒரு பயணத்திற்காக!!

Series Navigation

சித்தகவி

சித்தகவி