அவரவர் உடை அவரவர் விருப்பமே!

This entry is part [part not set] of 47 in the series 20050120_Issue

ஜோதிர்லதா கிரிஜா


“ஆண்களைப் பற்றிய அச்சத்துடன் தங்கள் உடைகளைத் தேர்வு செய்யவேண்டும் என்கிறாரா ?” என்று திரு சோதிப்பிரகாசம் வினவுகிறார்.

அச்சம் என்னும் உணர்வு இல்லாத பெண்களுக்கும் கூட ஓர் ஆணின் விகாரமான பார்வை தன் மீது படர்ந்து ஊர்கையில் குறைந்த பட்சம் அருவருப்பேனும் ஏற்படுகிறதல்லவா ? வேண்டாத வம்பை விலைக்கு வாங்குவது பெண்ணுக்கு நல்லதன்று என்னும் கருத்துடனேயே அக் கட்டுரை எழுதப் பட்டது. ‘என் உடை என்பது என் விருப்பம். அதை எப்படியும் அணிவேன்’ என்று கூறி அதன் விளைவுகளை அனுபவிக்கத் தயாராக இருக்கும் பெண்களுக்காக என் கட்டுரை ஒருபோதும் எழுதப் படவில்லை! அவற்றைத் தவிர்க்க விரும்பும் பெண்களுக்காக – தேவையற்ற அக்கப் போர்களில் சிக்க விரும்பாத பெண்களுக்காக – அது எழுதப் பட்டது.

‘சட்டம் எதுவும் மீறப்படாதவரை எந்த ஆடையையும் யாரும் அணிந்து கொள்ளுவதில் என்ன தவறு ?’ என்பது அடுத்த கேள்வி. தவறு ஏதுமில்லை! னால், அப்படி உடை அணியும் பெண்களை இன்னும் அதிகமாகவே சீண்டலாம் என்று நினைக்கவைப்பதன் மூலம் தங்களுக்குத் தாங்களே பெண்கள் அருவருப்பையும், வேண்டாத ஆபத்தையும் தேடிக்கொள்ளவேண்டாமே என்கிற நல்லெண்ணத்துடன்தான் அக் கட்டுரை எழுதப்பட்டது.

அரை, முக்கால் நிர்வாணங்களுடன் சாலைகளெங்கணும் தென்படும் திரைப்படப் படல்கள் (posters) , சுவரொட்டிகள், ஆபாசப் படங்கள், அடங்கிய ஏடுகள் போன்றவை சட்டவிரோதமானவையே! ஆனால் யார் நடவடிக்கை எடுக்கிறார்கள் ? எனவே, அதே பாணியில் உடை யணியும் பெண்களையும் சட்டம் எதுவும் செய்யப் போவதில்லை என்பதே உண்மை. பிரச்சினை அதுவன்று.

கால், அரை நிர்வாணம் காட்டும் உடைகள் –

எந்த உடையையும் கண்ணியமற்ற முறையில் அணிதல் போன்றவை – வெளிப்பாடான (revealing) உடைகள் –

பெண்களுக்கு ஆபத்தைத் தரும் என்பதால் அவற்றைத் தவிர்க்க யோசனை அக்கட்டுரையில் சொல்லப்பட்டது.

தவிர்க்க விரும்பாதவர்களைப் பற்றி யாருக்கு என்ன கவலை ? அவரவர் உடை அவரவர் விருப்பம் என்றால், இதுவும் அவரவர் விருப்பமே. இந்த பத்தைப் பற்றிக் கவலைப் படாதவர்களுக்காகவோ, அதை எதிர்கொள்ளும் துணிவும் உடல் வலிமையும் உள்ளவர்களுக்காகவோ கட்டுரை எழுதப்படவில்லை. (எனினும் ண்களால் ஏற்படும் தொல்லைகளைத் தவிர்க்கப் பெண்கள் கராத்தே கற்கவேண்டும் என்பதைச் சில கட்டுரைகளிலும், கதைகளிலும் நாம் எழுதி யுள்ளோம்.)

ஆண்களில் சிலரின் பொறுக்கித்தனத்துக்கு ஆளாகும் அருவருப்பிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளுவதன் பொருட்டு ஒரு பெண் கண்ணியமாக உடை யணிவதை ண்களுக்கு அடங்கி நடத்தல் என்று பொருள் கொள்ளுபபவர்ளுக்குப் புரியும் அளவுக்கு விளக்கம் அளிக்கும் ஆற்றல் நமக்கு இல்லை.

எட்டுவயதுச் சிறுமியின் தலைமுடியை ஒரு பெண் ரசிப்பது போல் ண் ரசிப்பதில் என்ன தவறு என்று ராமச்சந்திரன் உஷா கேட்கிறார். தவறு என்று யார் சொன்னது ? நம் கட்டுரை எட்டு வயதுப் பெண் பற்றியதன்று. வளர்ந்த வயதுப் பெண்களுக்கானது. இவர்களை விகாரமாய்ப் பார்ப்பதுதான் தவறானது. அருவருப்பானது. அழகை ஆராதித்து ரசிப்பதற்கும், அங்க அவயவங்களைப் பொறுக்கித்தனமாய்ப் பார்ப்பதற்கும், அவற்றின் மீது உராய்வதற்குமிடையே வித்தியாசம் உண்டுதானே ?

‘ஆணோ பெண்ணோ எதிர்பாலோரைப் பார்ப்பதை ஏன் வக்கிரமாய் நினைக்கவேண்டும் ?’ என்றும் இவர் வினவுகிறார்! வெறும் ரசித்தலை யாரும் இங்கே வக்கிரமாய்ப் பார்க்கவில்லை, நண்பரே ! விகாரமாய்ப் பார்ப்பதையே வக்கிரம் என்கிறோம்! குறிப்பிட்ட அங்கங்களில் ஒருவரின் பார்வை வெறியோடு மய்வதற்கும், சாதாரணமாய்ப் பார்வை படிந்து மீள்வதற்குமிடையே வித்தியாசம் உண்டல்லவா ? வேண்டுமென்றே மேயும் விகாரப் பார்வை, தற்செயலாய்ப் படியும் விகாரமற்ற, சாதாரண, சகோதரப் பார்வை ஆகிய இரண்டுக்குமிடையே உள்ள வேறுபாடு பெண்களுக்குப் புரியும்!

சுடிதாரோ, புடைவையோ அதை எப்படி அணிகிறோம் என்பதில்தான் இருக்கிறது என்று இவர் சொல்லுவது

ரொம்பவும் சரியே. இதையே நாமும் சொல்லி வந்துள்ளோம். பதினெட்டு முழப் புடைவையைக் கூட ஆபாசமாகவும், சுடிதாரைக் கண்ணியமாகவும் அணியமுடியும் என்பதை நாமும் கூறியுள்ளோம். நாம் சுடிதாருக்கு எதிரியல்லோம். அதன் ஆதரவாளர்களுள் ஒருத்தியே! அதுவே இந்நாளில் _ தப்பி ஓடுவதற்கு வசதியானது! இதையும் நாம் ஏற்கெனவே சொல்லியாகிவிட்டது.

‘புர்க்கா அணிந்த பெண்ணைப் பார்த்துச் சில பொறுக்கிகள், ‘நாம இவளுங்களைப் பார்க்கக்கூடாது, னா இவளுங்க நம்மைப் பார்க்கலாம்’ என்று வக்கிரமாய்க் கெமென்ட் அடிதததைப் பார்த்திருக்கிறேன்’ என்றும் இவர் கூறுகிறார்! இதன் உட்கிடையைச் சற்றே ஆழமாய்ப் பார்க்க வேண்டுகிறோம். ‘இவர்களுக்கே இப்படி ஓர் எதிரொலி என்றால், கால், அரை, நிர்வாணத்துடன் ‘வெளிப்பாடாக’ டை அணிபவர்பால் எதிர்ப்பாலரின் விமரிசனம் எப்படி இருக்கும் என்பது பற்றி என்ன சொல்ல! மறுபடியும் சொல்லுகிறோம் – இந்த விமரிசனங்களைப் பொருட்படுத்தாத (அதாவது ignore செய்யும்) – இவற்றால் அருவருப்பு அடையாத – புண்படாத மனநிலையுள்ள பெண்களுக்காக அக் கட்டுரை எழுதப்படவில்லை.

‘ஆண்கள் திருத்தப்பட வேண்டுமே தவிர, எங்களுக்கு எப்படி உடையணிய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்காதீர்கள். இதை விட, படி தாண்டாதே என்று சொல்லுவதும் ஒன்றுதான்’ என்கிறார் நண்பர்.

ஆண்கள் திருத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கே இடமில்லை. எல்லா அறிவுரைகளையும் பெண்களுக்கே – பெண்களுக்கு மட்டுமே – நம் முன்னோர்கள் சொல்லிவந்துள்ளதன் விளைவுகளே இன்றைய பல்வேறு ஆணாதிக்கக் கொடுமைகள் என்பதை நாம் நம் கட்டுரைகளில் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளோம்.

ஆனால், மகாபாரத காலத்தில், திரெளபதியின் ஓர் அற்பச் சிரிப்புக்காக – அதிலும் சத்தமே எழாமல் வாய்க்குள் அவள் சிரித்த சிரிப்புக்காக – அவளைத் துகிலுரித்து அவமானப் படுத்த முற்பட்ட துரியோதனத்

துர்ப்புத்தி இன்றளவும் நம் ஆண்களை விட்டுப் போகவே இல்லை! யார் கீழே விழுந்தாலும் பார்ப்பவர்க்கு உடனே வருவது சிரிப்புத்தான். இது சரியென்று நாம் சொல்லவே இல்லை. சிரிக்காதிருப்பதற்கு ஒரு பக்குவம் வேண்டும். அன்று திரெளபதி வாய்க்குள் நகைத்தது தவறேயானாலும், அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா என்று நினைக்கத் தோன்றுகிறதல்லவா ? அதுதான் ஆண் என்பதன் சுருக்கமான விளக்கம்! தோற்றுப்போன நாட்டின் அப்பாவிப் பெண்களைத் துரத்தித் துரத்திக் கற்பழிக்கிற ராணுவத்தினரிடையே இன்றளவும் காணப்படும் கொடூரமனப்போக்கு ண்களது பிறவிக்குணம். ண் இன்றளவும் திருந்தவில்லை! (அவன் திருத்தப்படவில்ைலை என்பதும் உண்மைதான். அதுதான் நமது மனக்குமுறலே. எனவே இதில் ராமச்சந்திரன் உஷா அவர்களுடன் நமக்குக் கருத்து வேறு பாடு இல்லை. ) னால், ஆண் திருந்துகிற வரையில் பெண்கள் தங்களை அவர்களின் சீண்டல்கள், தகாத நடவடிக்கைகள் கியவற்றிலிருந்து காத்துக்கொள்ள வேண்டாமா ? அதன் பொருட்டே பெண்களுக்குச் சில யோசனைகள் சொல்லப்பட்டன. அவற்றை ஏற்பதோ அல்லது நிராகரிப்பதோ அவரவர் சவுகரியம் தான்! யார் இல்லை என்றது ? மற்ற பெண்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க நாம் யார் ? கட்டுப்பாட்டோடு கூடிய விடுதலை உணர்வு என்பது அவரவர் உள்ளத்தில் ஏற்பட வேண்டுமே தவிர, மற்றவரால் அதைத் திணிக்க முடியாது. கட்டுப்பாடற்ற தற்போக்கு ஆபத்தை விலை கொடுத்து வாங்குவதாகும்.

படி தாண்டாதே என்று சொல்லுவதும் இதுவும் ஒன்றுதான் என்று நினைப்பவர்களை நம்மால் நாம் சொல்லுவதைப் புரிந்துகொள்ளச் செய்யவே முடியாது. படி தாண்டிச் செல்லும் சூழலிலும், கட்டாயத்திலும், சாதனை ஆர்வத்திலும் வேளியே செல்லும் பெண்கள் தங்களை ஓரளவுக்கேனும் காத்துக்கொள்ள ஒரு யோசனை சொன்னோம். (நாமே ஒரு மைய அரசு அலுவலகத்தில் பணி புரிந்துள்ளோம்!)

படி தாண்டும் அதே நேரத்தில் நாமும் நமக்கென்று சில கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு எல்லை தாண்டாதிருந்தால், ஆண்களையும் ஓர் எல்லையைத் தாண்டாது சிறிதேனும் விலக்கிவைக்க அது உதவும், அது நமக்கு நல்லது என்று நினைத்தோம்; எழுதினோம். அவ்வளவுதான்!

ஏற்பதும் தள்ளுவதும் அவரவர் உரிமை. வசதி.

பெரியவர்கள்க்காக (for adults) எழுதத்தொடங்கிய நாளிலிருந்து பெரும்பாலான கதைகளிலும் கட்டுரைகளிலும் ணாதிக்கத்துக்கு எதிராகவும், பெண்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்துள்ள “குற்ற”த்துக்காக ண் எழுத்தாளர்களிடமிருந்தும், ஆண் வாசகர்களிடமிருந்தும், ஆண் விமரிசகர்களிடமிருந்தும் சொல்லடிபட்டு வந்துள்ள நம் மீது, ‘. . . ஆண்களுக்கு அடங்கியவர்களாகத் தங்கள் வாழ்க்கையைப் பெண்கள் அமைத்துக்கொள்ளவேண்டும் என்று இவர் கருதுகிறாரா ?’ என்று தொடுக்கப்படும் கணை விந்தையிலும் விந்தையே!.

jothigirija@hotmail.com

Series Navigation