அவதார புருசன்!!!

This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue

வ,ந,கிரிதரன் –


நடைபாதை வியாபாரி.
உணவு விநியோகிக்கும்
தொழிலாளி.
ஆடை ஏற்றுமதி/இறக்குமதி
நிறுவனத்தில் உதவியாள்.
விளம்பர விநியோகிப்பாளர்.
கோப்பை கழுவும் பணியாள்
உணவகங்களில்.
பலசரக்குக் கடைச்
சிப்பந்தி.
பாதுகாவலர்.
நிலப் பரிசோதகர்.
வீடு விற்பனை முகவர்.
டாக்ஸி ஓட்டுநர்.
கடிதங்கள், சிறு
பொதிகள் விநியோகிக்கும்
சாரதி.
வங்கிக் குமாஸ்தா.
உற்பத்தி உதவியாளர்
(தொழிலாளிக்கு இன்னுமொரு
பெயர்)
தொழிற்சாலைகளில்.
கணினி உதவியுடன்
பட வரைஞர்.
தகவல் தொழில் நுட்ப
நிபுணர்….
இவையெல்லாம்
பல்வேறு பத்திரிகைகளில்
வெளிவரும்
வேலை வெற்றிட
விளம்பரஙகளல்ல.
நாட்டின் பொருளாதார
வளத்தினை அறிவிக்கும்
சாட்சிகளல்ல.
பின்
என்னவென்று
முழிக்கின்றீர்களா ?
வேறு ஒன்றுமில்லை.
கீழ்க்கோடியொன்றிலிருந்து
மேற்கோடியொன்றிற்கு
அகதியாகப்
புலம் பெயர்ந்த அடியேனின்
பல்
அவதாரங்கள் தான்.
பூர்வீகத்தில்
பட்டமொன்றினையீட்டி
பணிபுரிந்து கொண்டிருந்த
அடியேன்
படிப்படியாக எடுத்த
அவதாரங்கள் தான்.
பல்லவதாரங்கள் தான்.

ngiri2704@rogers.com

Series Navigation