அவசரப்படும் வேசி

This entry is part [part not set] of 45 in the series 20081023_Issue

கே. ஆர். மணி


அவன் எழுதிவிட்டான்
அவள் எழுதிவிட்டாள்.
நானும் எழுதிவிடவேண்டும் அதை.

பயணம் பயமுறுத்துகிறது.

வேண்டும் நிழற்குடைகள்.
நெடுஞ்சாலையில் தனியாய் நிற்க பயம்
வெயிலுக்கும், மழைக்கும்.
குளிருக்கும் கூடவே வருகிறமாதிரி
வேண்டும் நிழற்குடைகள்.
அகங்கார ஓற்றையடிப்பாதைகள் தவிர்த்த
ஹைவேக்கள் உசிதம்.

எதை எழுத,
ரயிலை, கழிப்பறையை, வேசியை,
மழையை, அலுவலகத்தை, பயணத்தை
எதை எழுத

கவிழ்ந்த மணற்குடுவை
தன் கடைசித்துகள்களை
துளையில் துப்புகிறது.
பாதரசம் போல வெள்ளையாய்.
தொட்டால் ஓட்டாது
குவிந்து பெருகும் கீழ்ப்பகுதி.

காலம் தன் கையில் கடிகாரத்தோடு
காத்திருக்கிறது.
அவசரப்படுத்துகிறாள் வேசி.

முடிந்தபின் அயர்ச்சியும், தளர்ச்சியும்
வெறுப்பும் மண்டும்தானென்றாலும்
அவனும் அவளும் எழுதிவிட்டார்கள்.
நான் எழுதித்தானாக வேண்டும்
என்னையறியாமல் விழுந்துவிடுகின்ற
சில துளிகளுக்காக.

எழுதித்தானாக வேண்டும்.

mani@techopt.com

Series Navigation

author

கே ஆர் மணி

கே ஆர் மணி

Similar Posts