அளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்பவனுமாகிய…..

This entry is part [part not set] of 32 in the series 20061207_Issue

சூபிமுகமது


1)மனுதர்மத்தை திருகுரானில் தேடும் சூபியின் மாறாத மடத்தனம்(திண்ணையில் மாறாத்தனம் என்றிருப்பது வாகாபி தளத்தில் இவ்வாறுள்ளது.)குறித்து வகாபி பேசுகிறார்.இந்நிலையில் எனது கட்டுரைவரிகளை சற்று ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

வகாபியின் மதிப்புக்குரிய பன்றியார் புகழ்வார்த்தை திருகுரான் பன்றியை அவமதிப்பதற்கு ஈடுசெய்வதாக குறிப்பிடுகிறார். மனுதர்மம் பிராமண சத்திரிய வைசிய சூத்திர பஞ்சமபிரிவினையையும் கொடுந்தீண்டாமையையும் பிறப்பின் அடிப்படையில் நிறுவுகிறது. திருகுரான் இந்த மனுதர்ம கொடுங்கோன்மையை வணங்கும் தெய்வத்தின் அடிப்படையில் உருவாக்குகிறது என்பதை வகாபி மறைமுகமாக நிறுவுகிறார்.

நவம்பர்16 திண்ணையில் வகாபி சுட்டிக்காட்டியிருந்த நான்கு திருக்குரான் மேற்கோள்களின் வழியாக வகாபியே இக்கருத்தாக்கத்திற்கு வந்துள்ளார். இதனை அம்பலப்படுத்தியதே எனது வரிகள்.

2)அபுலஹபை குறித்து சூபி கேட்டிருப்பதாக இரண்டுபக்க அளவில் கடன்வாங்கிய தப்சீர் விளக்கங்களை இம்பொசிசன் மாதிரி மறுபடியும் எழுதியுள்ளார். இதெல்லாம் தேவையில்லாத வேலை.
நான் எங்கே அபுலஹபை பற்றி விளக்கம் கேட்டேன்.

3)அல்லா கையாலாகாதவன் அல்ல அடக்கிஆள்பவன் என ஆளும்வர்க்க ஏகாதிபத்திய குணாம்சத்தை அல்லாவின் மீது வகாபி ஏற்றியிருக்கிறார்.

ஏற்கெனவே இஸ்லாம் அல்லாதவர்கள் காபிர்கள் நரக நெருப்பில் எரித்து கரிக்கப்படுவார்கள் என அல்லாவை பயங்கரவாதியாகவும் காட்டியுள்ளார்கள்.

எனவே இனிவகாபி குழுமம் ஒரு செயலை துவங்குமுன்னால் பிஸ்மில்லாஹிர் ரகுமானிர் ரஹீம்-அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாவின் பெயரால் என்பதற்கு பதிலாக

அளவற்று அடக்கியாள்பவனும் நிகரற்று பயங்கரம் செய்வோனுமாகிய அல்லாவின் பெயரால் என்றுதான் சொல்வார்கள் போலிருக்கிறது….

4)நாங்கள்தான் இஸ்லாத்தின் மொத்த அறிவுஜீவிகளென தலைக்கனம் பிடித்து ஆடிக்கொண்டிருக்கும் வகாபி குழுமத்திடமிருந்து ஹெச்.ஜி.ரசூலின் நியாயமான கேள்விகளுக்கு எந்த முறையான பதிலும் இல்லை. வகாபி முற்றிலும் தளர்வடைந்துவிட்டார். வகாபிக்கு உதவி செய்ய யாரேனும் முன் வருவார்களா…திருகுரான் வசனங்கள் குறித்து முன்பே கேட்ட கேள்விகள்…

1) வெட்டிப் போடப்பட்ட பறவையின் உடல் துண்டுகள் எப்படி ஒன்று சேர்ந்தன..

2)ஆண்துணையின்றி அன்னைமர்யத்தின் கர்ப்பம் எப்படி நிகழ்ந்தது…

3)மனிதர்களை குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கப்பட்ட மந்திரவாதம் எது…

4)அபுலஹபின் இரண்டு கரங்கள் அழித்துவிட சாபமிட்டதும் விறகு சுமக்கும் அவரின் மனைவி கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிற்றால் முறுக்கி கொலைக்கு வழிவகுத்ததும் எந்தவகை நியாயாம்..

அல்லாவின் கதையாடல் 5 அத்தியாயம் 105 அல்பீல் வசனங்கள்1முதல் 5

(நபியே அப்ரஹாவின்)யானைப்படையினரை உமதிறைவன் எவ்வாறு (அழிய)செய்தான் என்பதை நீர் (நினைத்துப்) பார்க்கவில்லையா….அவர்களுடைய சூழ்ச்சியை அவன் வீணாக்கிவிடவில்லையா…
அவர்கள் மீது பட்சிகளை கூட்டங்கூட்டமாக அவன் அனுப்பி வைத்தான். (கெட்டியான)சுடப்பட்ட சிறிய கற்களை அவை அவர்களின் மீது எறிந்தன. அதனால்(பட்சிகளால்) கொத்தி தின்னப்பட்ட கதிர்களைபோல் அவர்களை அவன் ஆக்கி (அழித்து)விட்டான்.

அ)அப்ரஹா மன்னனின் பெரும்படையை எப்படி பட்சிகள் கூட்டம் அழித்தொழித்தன….

ஆ)(அபாபீல்)பறவைகள் கூட்டம் அலகில் சுமந்து எறிந்த சுடப்பட்ட சிறியகற்களுக்கு மந்திரத்தண்மை எப்படி வந்தது…

அறிவுபூர்வமான பதில்களை எதிர் நோக்கி காத்திருக்கும் சூபிமுகமதும் எண்ணற்ற தமிழ்வாசகர்களும்….


tamilsufi@yahoo.com

Series Navigation