அறை இருள்
ராம்ப்ரசாத்

வெளிச்சங்களை விரட்டிவிட்டு
இருள் ஆக்ரோஷமாய்
மூலை முடுக்கெல்லாம்
எதையோ தேடிக்கொண்டிருந்தது…
அது தேடிக்கொண்டிருந்தது
என் மெளனத்தைத்தானென்று
அறியாமல் இருளையே
வெறித்திருந்தேன் நான்…
– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)