This entry is in the series 20040422_Issue

தீபம் கோபி – சிங்கப்பூர்.


பொருள்தேடிப் புகழ்த்தேடிப்

புதைந்திட்ட பருவங்கள்!

வாழ்க்கைத் துணைத்தேடி

அடைவதற்குள்

தொலைந்திட்ட வருடங்கள்!

படுக்கையறை விவாதத்தில்

பலியான இரவுகள்!

உயிர் சுமந்து கருவாக்க

உள்ளத்தில் உதறல்கள்!

இயந்திர வாழ்க்கையில்

சிறைப்பட்ட சிந்தனைகள்!

எண்ணங்கள் குறுகியதால்

மழலை என்ற சொல்லே

மறந்திட்ட மனங்களுக்கு

ஒரு ‘கை ‘ ஓசையாய்

அரசாங்க அறைகூவல்!!!


dewwinds@yahoo.com

Series Navigation