அறிவெனும் சக்தி

This entry is part [part not set] of 18 in the series 20011007_Issue

ஸ்ரீனி.


கண்முன்னே தோன்றும்
காட்சிகளில் பலவற்றை
கண் இமைக்கும் நேரத்தில்
திருத்தியமைக்க முடிந்தால் ?
அறியா முடிவினை
கற்பனையில் அழகாக்கி,
அறிவிழந்து செய்யும் செயல்களை
அழித்தபின் உணர்வதைவிட்டு
அழிக்காமல் தடுக்க முடிந்தால் ?

நீாின்மேல் தோன்றும் பிம்பங்களாய்
கனவுகள் பற்பல
பிம்பத்தை தங்கவிடாமல்
கல் எறிந்து குழப்பும் மானிடா !
எறியும் முன் சற்றே
அறிவுத்திாியை எாி.
எாித்தால் நீ மட்டுமல்ல
உன் சுற்றமே வெளிச்சம் பெறும்.
சிந்தனைகள் ஒருமித்து விட்டால்
சொற்களின் தேவை தீர்ந்துபோகும்.
இல்லாததால் தான் வேறுபட்டு நிற்கிறோம்.
பேசிக்கொண்டே இருப்பதனால் யாருக்கென்ன பயன் ?

எதிர்கால முன்னேற்றம் கூறி
தவறான செயல்பாட்டினால்
நிகழ்கால நிஜங்களை
இறந்தகால இதிகாஸங்களாக்கும்
இந்த முறையற்ற சாித்திரப்படைப்பை
இனியேனும் முறைப்படுத்துவோம்.
களையெடுக்கச் சென்று
பயிர்களையும் சேர்த்தொித்து
பின்னர் அறுவடைக்கு நினைத்தால்
ஆவதென்ன தோழா ?

‘போற்றுவார் போற்றலும் .. போகட்டும் கண்ணணுக்கே.. ‘
உன் செயல்களின் பழியை
உலகின் மேல் திருப்ப
உனக்கு உன் மதமே கற்றுத்தருகிறது..
நீ என் செய்வாய் .. பாவம் !!
விதிகள், கோட்பாடுகள்
அறிவுக்குதிரைக்கு
கடிவாளம் போடக்கூடும்.
விட்டுவிடாதே !
அந்தக் குதிரையின் மீதமர்ந்து
என்றேனும் ப்ரயாணித்திருக்கிறாயா ?
செய்து பார்.. நீ அறிந்திராத பலவற்றை
அது உனக்கு உணர்த்தும்.
நீ பின்பற்றுவதாய் நினைக்கும்
உன்னைப் பிடித்துள்ள
ாமதத்தைா
உன்னிடமிருந்து விடுவிக்கும்
இந்த அபூர்வ சக்தி
உனக்குள்ளேதான் இருக்கிறது !
உணர்வாய் மானிடா !
உன்னால் நடக்கும் செயல்களுக்கு
நீ மட்டுமே காரணம்..
‘நீ வாழ்வதை விட
சுகமான வாழ்க்கை
எனக்கு உள்ளதென்று.. ‘
இறந்தவன் எவனும்
திரும்பி வந்துக் கூறியதில்லை!

இருப்பதை விட்டு
பறக்க எண்ணி
கூடி இருப்போரையும்
கூட்டிச்செல்ல உனக்கு அனுமதி இல்லை.
மண்ணின் மேல் ாநீா – ாநீா
இல்லையேல் ாநீா – ாஅதுா
சிந்தனைகளை முதலில் செதுக்கு
கல்வெட்டுக்களை பின்னர் செய் !
வரும் சமூகம் உன்னை ஒரு
மதமாக்கும். நலம் பெறும்.

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி