அப்துல் கனி கான் – அழகின் யாத்திரீகர்

This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

ஷேர் ஆலம் ஷின்வாரி

(பாகிஸ்தானிய டான் பத்திரிக்கையிலிருந்து: மொழிபெயர்ப்பு: இரா மதுவந்தி)

1921இல் பாத்ஷா கான் (கான் அப்துல் காபார் கான் என்ற எல்லைக்காந்தி) அன்சுமான்-இ-இஸ்லா-இ-ஆஃப்கானா என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தார். இது பட்டாணி மக்களின் வாழ்க்கையில் சமூக மாறுதல்களை நோக்கி அமைக்கப்பட்டது. இதன் அடிப்படை நோக்கம், பட்டாணிகளின் உள்ளே இருக்கும் ஜன்மப்பகைகளை களைந்து அவர்களை ஒன்றுபட்ட சமூகமாக்குவதாக இருந்தது. பாத்ஷா கான் பட்டாணிகளின் உள்ளே இருந்து அரித்துக்கொண்டிருக்கும் சமூக தீமைகளைக் களைந்து அவர்களின் மனதில் தாய்நாட்டுப்பற்று உருவாக்க வேண்டுமென்று விரும்பியதும் காரணம்.

அன்சுமான் பாட்ஷா கனி ன் சொந்த ஊரில் ஆரம்பிக்கப்பட்டது. அவரது புதல்வர்களான கனி கான் (1914-1996) அவர்களும், வாலி கான் அவர்களுமே இந்த ஆஸாத் பள்ளியில் முதன் முதலாகச் சேர்க்கப்பட்டவர்கள். மற்றவர்களும் இந்த உதாரணத்தால் கவரப்பட்டு தங்கள் குழந்தைகளையும் இந்தப்பள்ளிகளில் சேர்க்க முன்வந்தார்கள். இங்கு குரான், ஹடித், இஸ்லாமியச்சட்டம், இஸ்லாமிய வரலாறு, பஷ்டு மொழி, கணிதம் ஆகியவை சொல்லித்தரப்பட்டன.

மற்ற இடங்களிலும் இது போன்ற சுதந்திர இஸ்லாமியப் பள்ளிகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு கிராமத்துக்கும் ஆசிரியர்களும் மாணவர்களும் சென்று அங்கிருக்கும் மக்களை படிக்கச்சொல்லவும், பள்ளிகளுக்கு அனுப்பச்சொல்லவும் கோரினார்கள். இந்த பயிற்சிகள் கனி கான் அவர்களை அரசியலுக்குத் தேவையான குணங்களை அளித்தன. இவர் ஆசிரியர்களுடன் பல கிராமங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்றி, கவிதைகள் படித்து மக்களை ஒன்றுதிரட்ட முயன்றார்.

1929இல் கனி கான் இங்கிலாந்துக்கு மேற்படிப்பு படிக்கச் சென்றார். ஏற்கெனவே அவர் 14 வயதிலிருந்தே கவிதைகள் எழுத ஆரம்பித்திருந்தார். அவருக்கு இந்தி, கிரேக்கம் ஆகிய மொழிகளை நன்றாகபேசவும் தெரிந்திருந்தது. மேலை நாட்டு தத்துவவியலிலும் கீழை நாட்டு தத்துவவியலிலும் புலமை பெற்றிருந்தார். ஆனால் அவருக்குப் பிடித்தமானது அழகியலே (aesthetics). காவ்லான் அவர்கள் அழகியலை நிர்ணயம் செய்திருந்தாலும், அதனை தனி ஒரு தத்துவமாகப் பார்க்கவில்லை. ப்ளாட்டோ, ஒழுக்கவியலையும், அழகியலையும் ஒருங்கே இணைத்து, ஒழுக்கத்தின் ஒரு பக்கமாக அழகியலைக் கண்டார். இந்த சிந்தனைகளால் உந்தப்பட்ட கனி கான், மனித நேயத்தில் நனைந்த அன்பால் சிறந்த ஒரு அழகியல் உணர்வை வளர்த்துக்கொண்டார். ப்ளாட்டோவைப் பொறுத்த மட்டில், அழகின் ஒவ்வொரு வகையும், தூய அழகின் ஒரு பிரதி தான். கனி கான் அவர்களும் இந்த சிந்தனையை பின்பற்றினார்.

கனி கான் வேதியியல் -பொறியியல் பட்டப்படிப்பு அமெரிக்காவில் 1935இல் முடித்தார். பாத்ஷா கான், நேருவுக்கு எழுதிய கடிதத்தில், ‘ கனி கானுக்கு நமது கலாச்சாரத்தைக் கற்றுத்தாருங்கள். இவன் அமெரிக்காவில் இருந்த காலத்தால், அமெரிக்கமயமாகிவிட்டான் ‘ என்று எழுதினார்.

இதனால், கனி கான் அவர்கள், ரபீந்திர நாத் டாகூர் நடத்திவந்த சாந்தி நிகேதன் கலைப் பள்ளியில், இந்திரா காந்தி இந்தப்பள்ளியில் சேர்ந்த அதே நேரத்தில் சேர்ந்தார். சுதந்திரத்துக்கு சில மாதங்களுக்கு முன்னர் ஏப்ரல் 1947இல் ஜால்மாய் பக்தூன் என்ற அமைப்பை கனி கான் உருவாக்கினார். ஆனால், அரசியல் அவரது உள்ளத்தில் இல்லை. அவர் மத்திய சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு சூன் 1947இல் பிரிவினை அறிவிக்கப்படும்போது, மிகுந்த மனத்துயரத்துக்குள்ளாகி அரசியலை விட்டு விலக முடிவு செய்தார். 1947, சூலை 4இல், இந்திய தேசீய வாத சிந்தனைக்காக சிறைப்படுத்தப்பட்டார். பாகிஸ்தானின் சிறைகளில் ஆறு வருடம் இருந்து, 1954இல் விடுவிக்கப்பட்டார். பின்னர் தன் வாழ்நாள் முழுவதையும், தன்னுடைய தாய்மொழியின் வளர்ச்சிக்காக செலவிட்டார்.

கனி கான் எந்த தத்துவத்தையும் முன்னிறுத்தவில்லை என்றாலும், தத்துவம் செறிந்த கவிதைகள் அவருடையவை.

நான் உண்மையில் ஒரு பைத்தியக்காரன்

நான் வாழ்க்கையை இறப்பின் கண்கள் மூலம் பார்க்கிறேன்

இன்னொரு கவிதையில்

இறப்பு வாழ்க்கையின் முடிவென்று நான் நம்பவில்லை

ஏனெனில் கோப்பையில் மது தீர்ந்ததும், களிப்பு முடிந்துவிடுவதில்லை.

கனி கான் அவர்கள் தன்னுடைய உணர்ச்சிகளை பகுத்தறிவின் மூலம் பார்ப்பதில் தனி பாணியைக் கொண்டிருந்தார். அவர் சமாதானம், மனித நேயம், அழகின் பிம்பங்கள் ஆகியவற்றை விரும்பினார். அவரை expressionist என்பதா impressionist என்பதா என்று பலர் விமர்சனம் செய்தபோது அவர் சொன்னார், ‘ உன் கண்களை திற. ஒரு பொருளை ஆழ்ந்து பார். பிறகு உன் கண்களை மூடு. அந்த பொருளைப் பற்றி சிந்தி. உன் மனதில் ஒரு பிம்பம் இருக்கும். இதுவே இம்ப்ரஷனிஸம். அந்த மனத்தில் படிந்த படிமத்தை உன் தூரிகை கொண்டு வரை. அதுவே எக்ஸ்பிரஷனிஸம் ‘

அவர் எப்போதும் சாந்திநிகேதன் தனக்கு ஒரு தேசிய பெருமை உணர்வைக் கொடுத்ததற்காக மிகுந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டே இருந்தார்.

களிமண்ணால் உருவான என் வீடுகளைப் பார்க்கும்போது,

உலகத்தின் நகரங்களை மறந்துபோகிறேன்

நீ ஒரு எளிய பட்டாணி சகோதரனை தழுவும்போது

நீ உலகத்தின் நிலங்களையும் கடல்களையும் மறந்து போகலாம்

பட்டாணிகளின் நாட்டில் என்னைப்படைத்த அல்லாவுக்கு என் நன்றி.

பொதுமக்கள் மத்தியில் அவரது கவிதைகளுக்கான அறிமுகமும், பாராட்டும், அவரது கவிதைகளை சர்தார் அலி தக்கார் பாடியபோதுதான் கிடைத்தது. சில வேளைகளில் அவரது கவிதைகள் அவர் எழுதி உருவானவை அல்லவென்றும், அவர் உயிரே மூச்சுக்காற்றாக மலரின் மணத்தோடு பரவியது என்றும் ஒருவர் உணர்ந்தால் ஆச்சரியமில்லை. ஒரு அழகான காட்சியை வர்ணிப்பதோடு, அந்த காட்சியில் இருக்கும் மலர்களோடும், பறவைகளோடும் அவர்தம் மொழியிலே பேசுவது போலவும் உருவானவை அவர் கவிதைகள்.

கனி கான் அவர்களது கவிதைகள் தொகுப்புகள் பல அவர் வாழ்நாளிலேயே வெளியானவை. பல்வாஷய், டே பெஞ்சாரே சாகார், பனூஸ், பட்டாணிகள்- ஒரு அவசர ஓவியம் ஆகியவை. இவைகள் பல குல்ஜார் யூசுப்ஜாய் அவர்களால் உருது மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

மார்ச் 16 அன்று இவரது இறந்த நாளின் ஏழாம் ஆண்டு. முன்னைப்போலவே யாரும் பேசாமல் கடந்து போகலாம் இந்த நாளும். கனி கான் அவர்களது கவித்துவமே பேசப்படாமல் போகுமாயின் மற்ற கவிஞர்களின், எழுத்தாளர்களின் கதி என்ன ? நமது இலக்கிய வளமை மரியாதை கொடுக்கப்படாமல் போகக்கூடாது.

துறவியின் முகத்தில் இருந்த சிறுகுழந்தை புன்னகையோடு வாழ்ந்த கனி கான், சமாதானத்துக்கும், மனித நேயத்துக்கும் மிகுந்த நண்பர். அழகின் யாத்தீரீகர். அவரது மகத்தான படைப்புகளில் அமரத்துவம் எய்தியவர்.

என் நாடே

என் நாடே, முத்துக்களின் புதையலே

உன்னுடைய ஒவ்வொரு பள்ளத்தாக்குகளிலும்

எங்கள் வாட்களின் கீறல்கள்

என்னுடைய கண்கள்

உன்னுடைய களிமண் வீடுகளில் பலியிடப்படட்டும்

என்னுடைய மூளை சாம்பலாகப் போகட்டும்

உன் பெருமையை சிந்தித்து

நான் உன் மலைகளையும் ஆறுகளையும்

ஆராதித்து போற்றுகிறேன்

உன் வழிகளெங்கும்

எங்கள் வாட்களின் கீறல்கள்

என் நாடே, முத்துக்களின் புதையலே

உன் மண்ணிலிருந்து நான் பிறந்தேன்

நீ என் அன்பிலிருந்து பிறந்தாய்

நீ என் பெருமையிலிருந்து உருவானாய்

பட்டாணிகளின் வாழ்நெறியிலிருந்தும் உருவானாய்

நீயே என் தந்தையின் குருதி

என் பாட்டனின் குருதி

உன்னுடைய இதயத்தில்

எங்கள் வீரக்கதைகள் உறங்குகின்றன

என் நாடே, முத்துக்களின் புதையலே

புகழும் மரியாதையும் எனக்கெதற்கு

நீ ஏழ்மையாய் வருந்தும் போது

பெருமையும் கெளரவமும் எனக்கெதற்கு

உன் தலை அவமானத்தால் தாழ்ந்திருக்கும்போது

உன் தூசியையும் பெருமைப்படுத்த

என் இளம் ரத்தத்தை கொடுப்பேன்

என் நாடே, முத்துக்களின் புதையலே

உலகின் எல்லோருக்கும் உன்னை

சமானமாக்குவேன்

இல்லையேல் கறுப்பு தூசியாய்

பல துகள்களாய் உடைந்து

உன் காலடியில் பணி செய்வேன்

ஆனால் உன்னை வளமையாய் சிறப்பாய் ஆக்குவேன்

நான் மனிதன். நான் ஒரு பட்டாணி.

என்னுடைய காரியங்கள் உனக்கு ஞாபகமில்லையா ?

என் நாடே, முத்துக்களின் புதையலே

***

Series Navigation