அன்புள்ள மகனுக்கு ….. அம்மா

This entry is part [part not set] of 45 in the series 20030703_Issue

வசீகர் நாகராஜன் – ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)


அன்பு மகனே ….

வாழ்க்கை வழியெல்லாம் பொன் படிக்கட்டுகளாக
வாய்த்திருக்க வில்லை எனக்கு

வழியெங்கும் ஆணிகள் பூத்திருந்தன
மரச்சிராய்ப்புகள் சிதறிக் கிடந்தன
பலகைகள் விரிசலுற்று வீழ்ந்திருந்தன
கம்பளங்களின்றி தரைகள் சில்லிட்டிருந்தன

சமவெளிகளை கடந்து, முனைகளில் திரும்பி
வெளிச்சம் அணைந்து, இருளில் அலைந்து
அனைத்து நேரமும் எங்கும் நில்லாமல்
மேலே மேலே பயணித்துக் கொண்டு இருக்கிறேன்

பயணம் எங்கும் திரும்பிப் பார்க்காமல்
படிகளில் அமர்ந்து ஓய்வு எடுக்காமல்
மலைப்பின் அசதியால் களைத்து வீழாமல்
மனதைக் கடிவாளமிடுதல் கடினமானது

ஆயினும் உன்னுடன் நானிருக்கிறேன் செல்லமே
உடன் இன்னும் ஏறிக்கொண்டு இருக்கிறேன்
வாழ்க்கை வழியெல்லாம் பொன் படிக்கட்டுகளாக
வாய்த்திருக்க வில்லை என்றாலும் ….

VNagarajan@us.imshealth.com

Series Navigation

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)