அன்புள்ள செயலலிதா (தொடர்ச்சி)

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

பொறையாறு நந்தன்


இந்தியாவின் எதிர்கால பிரதமரே!

நவீன இந்தியாவின் இரும்பு மனிதன் என்று ஒரு சில ‘தகரடப்பா ‘ தலைவர்களாலும், நேற்று முளைத்த ‘அயோத்தி/பாப்ரி மஸ்ஜித் ‘ பிரச்சினயால் இன்று அரசியல்வாதியாகிவிட்ட இந்துத்வ (எந்தத்துவ ?) தலைவர்களாலும் அழைக்கப்பட்ட L.K.அத்வானிக்கு ‘Selective Amenesia ‘ நோய் என்று அறிக்கை விட்டு இரும்பு மனிதரையே நடுங்கி வியர்க்கவைத்து ‘துருப்பிடிக்க ‘ வைத்த துனிவு உங்களைத்தவிர யாருக்கு வரும். ?

இந்திய அரசியல்வாதிகளுக்கே சிம்மசொப்பனமாக விளங்கிய ‘T.N.சேஷன் ‘ னையே குதிகாலில் இடிபட ஓட ஓட விரட்டியது, விமான நிலையத்தில் பினைக்கைதியாக பிடித்து வைத்தது.. தெலுங்கு டப்பா சினிமாவில் வரும் விஜய சாந்தியின் சாகசத்தையெல்லாம் தோற்கடித்து விட்டார்கள்..போங்கள்!

சந்திரலேகா என்ற IAS அதிகாரி மீது பிற்படுத்தப்பட்ட இரத்தத்தின் இரத்தங்களை விட்டு அமில அபிஷேகம் செய்ய வைத்த துனிவு கலைஞருக்கு வருமா ? சந்திரலேகாவுக்கு சப்போர்டாக வந்த வாழும் பச்சோந்தி ‘சுப்பிரமனிசாமி ‘யை திட்டியதை மிரட்டியதை மறக்கமுடியுமா ?

தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு (அதாவது தங்களின் கோரிக்கைகளுக்கு) அடிபணிய மறுத்த (ஆனால் அடிபணிவதாக தங்களின் காலைப்பிடித்து உறுதி அளித்த) பா.ஜ.க ஆட்சியை கவிழ்க்க எடுத்த தங்களின் முயற்சியை யார்தான் மறக்கமுடியும்.. ?

முஸ்லிம் அமைப்பான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்திய ‘வாழ்வுரிமை மாநாட்டில் ‘ வாழும் பெரியார் ‘கி. வீரமனி ‘ அருகிலிருக்க அங்கே கூடியிருந்த ஆயிரக்கனக்கான முஸ்லிம்கள் மத்தியில் மிகவும் தைரியமாக ‘தமிழகத்தில் பா.ஜ.க என்னும் விஷ விருட்சத்தை ‘ வளர விட்டதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ‘ என்று கரகோஷ ஆராவரங்களிக்கிடையே சொன்னதையும் ‘வேரோடு பிடுங்கி ‘ வெளியே எறிவேன் என்றதையும் யார்தான் மறக்க இயலும் ?

நீதிமன்றத்தில் தன்னுடைய சொந்த கையெழுத்தையே இல்லையென்று மறுத்து நடித்து பொய்யுக்கு புதுவுரையெழுதிய முற்படுத்தபட்ட வீராங்கணையே! கருனாநிதிக்கு இத்தனை அழுத்தம் திருத்தமாக பொய்சொல்லும் திராணியிருக்குமோ ? ஊழலின் ஊற்றுகண்களையே வாயடைக்கும்படி செய்த பொய்யின் தாயே ?

ஊழலின் ‘கோனார் ‘ விளக்க உரையே!

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின். இறுதி ஊர்வலத்தில் பிரேதத்திற்கு அருகே நிற்கவேண்டுமென்று அடம்பிடித்ததையும் அதைதொடர்ந்த அடிதடிபிடிகளையும்; மறைந்த ஜானகி அம்மையார் தங்களையும் தங்களின் தனிப்பட்ட பண்புகளையும், பேசிய பேச்சுக்களையும் மறக்க முடியுமா ?

கருனாநிதி ஆட்சிக்காலத்தில் அவரை பட்ஜெட் படிக்க விடாமல் வேண்டுமென்றே அவரை தடுத்து பட்ஜெட் உரையைப்பிடுங்கி கிழித்தெறிந்து ‘தி.மு.க ‘ M.L.A. க்களை தூண்டிவிட்டு, அவர்கள் உங்களை அடித்ததை அறைந்ததை ‘மானப்பங்கம் ‘ என்றும் திரித்து தி.மு.க ஆட்சிக்கு தர்ம சங்கடத்தை தந்து தாங்கள் ஒர் தேர்ந்த நடிகை மட்டுமல்ல சிறந்த கதை வசனகர்த்தா (கலைஞரை விட சிறந்த), இயக்குனர் என்பதை உலகறிய வைத்ததை உலகம் மறக்காது ?

சாதீயபாகுபாடு எதுவுமில்லாமல் தங்களின் எதிரி எந்த சாதியை சார்ந்தவராக இருந்தாலும் சரி மொத்து மொத்தென்று மொத்துவதில் நேர்த்தியானவர் யாருமில்லை ? பிரபல அடிவாங்கிகளில் பெரும்பான்ைடுமயானவர்கள் பாவம் சிறுபான்மையினர்தான் (சாதி அடிப்படையில்) சுப்பிரமனிசுவாமி, டி.என்.சேஷன், மனி சங்கர் அய்யர், என்று பட்டியல் நீண்டுக்கொடிருக்கிறது..

தனிப்பட்ட முறையில் லதாவுக்கு எம்.ஜி.ஆரிடமிருந்த மவுசையும் செல்வாக்கையும் அல்லவா பிடித்தீர்கள்.

எம்.ஜி.ஆரின் ஒரே அரசியல் வாரிசாகி.. எம்.ஜி.ஆரின் சொந்த மனைவியையே செல்வாக்கு இல்லாமல் ஆக்கி..மூலையில் முடங்க வைத்த நவீன ஜான்சி ரானியான .தங்களுக்கு..லதா.காய்ந்துபோன .சுண்டைக்காய்..ஆனால் அந்த ‘சுண்டைக்காய் பென் ‘ பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சார்ந்த திருநாவுக்கரசர் மூலமாக பா.ஜா.க. வில் நுழைந்திருக்கிறாரே..அவருடைய வளர்ச்சியை எப்படி கட்டுப்படுத்தபோகிறீர்கள் அதாவது அழிக்க போகிறீர்கள்.உங்கள் ஒருவரால்தான் ஒரே கல்லில் மூன்று மாங்காய் (லதா, திரு நாவுக்கரசர் மற்றும் பா.ஜ.க) அடிக்கமுடியும்..வாய்ப்பை நழுவ விடாதீர்கள்..

கடந்த சட்ட மன்ற தேர்தலின் போது தங்கள் அனி வெற்றி பெறுவது பற்றி ‘கேலி ‘ பேசிய பா.ஜ.க வுக்கு பதில் சொல்லும் காலம் வந்துவிட்டது! தாங்கள் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அது ‘constitutional and ethical impropriety ‘ என்று சட்டம் பேசிய வெங்கையா நாயுடுவுக்கு இன்னும் ‘கட்டம் ‘ கட்டாமல் இருப்பது எத்தனையோ இரத்தத்தின் இரத்தங்களுக்கு வருத்தத்தை அளித்துக்கொண்டிருக்கிறது (ஆனால் இன்னும் எங்களுக்கு ஒரு நம்பிக்கை என்றைக்கோ தங்களை பற்றி சொன்ன மனி சங்கர் அய்யருக்கு சமீபத்தில் கொடுத்ததுபோல் வெங்கையா நாயுடுவுக்கும் ஒரு நாளைக்கு கொடுப்பீர்கள்..அதற்கு வக்காலத்து வாங்கிய ஜனா.கிருஷ்னமூர்த்தியை விட்டுவிடுங்கள் பாவம்.. பிழைத்து போகட்டும்).

தற்போது தங்களைவிட்டால் வேறு வழியில்லாத தமிழக பா.ஜ.க. தங்களை நோக்கி ‘வாழும் சரசுவதியே! இக்கால இலட்சுமியே எங்களை காப்பாற்று என்று தங்களின் கடைக்கண் பார்வைக்கு ஒற்றைக்காலில் தவம் செய்து, தோட்ட வாசலில் காத்து நிற்பதை கண்டுகொள்ளாமல் ‘வட நாட்டு பார்ப்பனர்களை ‘ எங்கே எப்படி வைக்கவேண்டும் என்றறிந்த தென்னாட்டின் தெனாவட்டு மிக்க ஒரே பாப்பாத்தியே..உங்களை எண்ணி எங்களின் இரத்தம் பூரிப்படைகிறது..

பா.ஜ.க. வை ஆதரிக்கும்படி எந்த சதிகாரர்கள் ஆலோசனை தந்தாலும் தயவு செய்து ஏற்றுக்கொள்ளாதீர்கள்..வாஜ்பாயையும், அத்வானியையும், பா.ஜ.க. வையும்..பா.ஜ.க.தொண்டனைவிட..அவனே கூசுமளவுக்கு வாய் கிழிய வானளாவ புகழ்ந்த ‘வை.கோ ‘ நிலையை பாருங்கள்..இடுக்கன் களைவதாம் நட்பு..என்ற கலைஞரின் குறளுக்கு (!) மாற்றமாக..வை.கோ.வை.கண்டுக்கொள்ளாமல். அவரை .சைக்கோ மாதிரி புலம்ப விட்ட பா.ஜ.க. வை நம்பவே நம்பாதீர்கள்..

இதை நான் ஏன் சொல்கிறேன் தெரியுமா ?

ஒருவேளை துரதிஷ்டவசமாக தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டால்..தங்களின் நிலைமையை நிணைத்து பாருங்கள்.நிச்சயமாக .தி.மு.க ஆட்சியின் உத்தரவின் பேரில் அதே ‘முகமது அலி ‘ ..பென் என்றும் அதுவும் செல்வி என்றும் பாராமல் இரவில் தங்களின்அறைக்குள் நுழைவார்…தாங்கள் கண்ணீரும் கம்பலையுமாக ஒப்பாரியிட்டு கத்திகதறப்போவதை ‘ஜெ ‘ டி,வி. மட்டும் திருப்பி திருப்பி காட்டினாலும் தூரதர்ஷன் நிச்சயமாக ஒளிபரப்பாது..

உலகம் முழுதும் காண்பிக்கப்படும் ‘சன். டி.வி யோ ‘முன்னாள் நடிகையின் ‘ திறமையான நடிப்பு என்று தங்களின் ‘க்ளீசரினற்ற ‘ கண்ணீரை கிண்டலும் கேலியும் செய்யும்..

ஆனால் பா.ஜ.க.வோ மாநிலத்தின் உரிமைப்பிரச்சினைகளில் மத்திய அரசு தலையிடுவது அரசியல் சட்டத்திற்கு புறம்பானது என்று கைக்கட்டி..(சத்தம்போடாமல் வாய்மூடி சிரிக்கும்) பார்க்கும்..

காலில் விழுகிற பா.ஜ.க. வை நம்பாதீர்கள்..காலைப்பிடிப்பது தங்களின் காலை வாரத்தான்..தேர்தல் வெற்றிக்கு பிறகு ‘அடல்ஜீ ‘ ‘அத்வானிஜீ ‘ க்களின் காரனமாகத்தான் அ.தி.மு.க வெற்றி பெற்றது என்பார்கள்.. (ஜீ – க்கள் எல்லாம் ஜீரோக்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்காது)

தங்களின் ஆதரவோடு பா.ஜ.க ‘விஷ விருட்சம் ‘ வேரூன்றிய பிறகு உங்களையும், தங்களின் பரம விரோதி தி.மு.க. வையும் சமதூரத்தில் இருப்பதாக ஒரு Lowக்கல் பா.ஜ.க தலைவர் அறிக்கை விடுவார் வரும், உங்களோடு வைத்திருப்பது ‘உறவு ‘ என்றும் தி.மு.க வோடு வைத்திருக்கும் கள்ளதொடர்புக்கு ‘நட்பு ‘ என்றும் ..நவீன சானக்கியர் ‘இல.கனேசன் ‘ வியாக்கியானம் கொடுப்பார்.

அதனால்தான் நான் சொல்கிறேன்..தங்களுக்கு ஒரு புது பழமொழி ‘பாம்பையும் வடநாட்டு பா ஜ கவையும் கண்டால் பாம்பை அடிக்காதே ‘ (யாரை அடிக்க வேண்டுமென்று நான் சொல்லமாட்டேன்)

—————————————————

(நீக்கங்கள் உண்டு. திண்ணை குழு)

ananthakumaran@hotmail.com

Series Navigation

பொறையாறு நந்தன்

பொறையாறு நந்தன்