அன்பில் சிக்கும் கண்ணன்

This entry is part [part not set] of 25 in the series 20020902_Issue

கவியோகி வேதம்


வாசலில் கோலம் போட்டு,
..வரிசையாய்ப் ‘பாதம் ‘ வைத்து,
ஆசையாய்த் தவழ்ந்த கண்ணன்
..அற்புதப் பொம்மை மேலே
நேசமாய் அணிகள் சூடி,
..நிறையவே அப்பம்,சீடை,
வாசனை தூக்கு கின்ற
..மாலைகள்,வெண்ணெய்,பாலும்
சன்னதி முன்னே வைப்போம்;
..சந்தமாய்ப் பாடல் நெய்தே
அன்புடன் கொஞ்சி நிற்போம்.
..அழகுறப் பூசை செய்வோம்.
இன்பமாய்ப் ‘பாரதி ‘ பாட்டும்
.இசைத்துநாம் மகிழ்த்து வோமே!
அன்பில்தான் சிக்கும் ‘கண்ணன் ‘
..அருளுவான் ‘பாரும் ‘ நீரே!

^^^^^
sakthia@eth.net

Series Navigation