அன்னையின் நினைவுகள்!

This entry is part [part not set] of 29 in the series 20020324_Issue

ஆனந்தன்


இரவுக்கே குளிரெடுக்கும் அமொிக்காவில்
உஷ்ணக் காற்றை சுவாசித்து என் அறையில்
முழு உடலும் பாதி உயிருமாய்
உன் நினைவில் வதைகிறேன்

ஊர் சுற்றி களைத்து
பசியோடு பரபரத்து
உண்ண வந்த போது
என்னைத்தான் சுட்டதந்த – அன்னம்
அதை நான் உணரும் முன்னே
மனம் கலங்கினாய் – அன்று
கைசுட்டு கண் கலங்கிய போதுதான்
உன்னையும் சுட்டிருக்கும் என்று
அந்த தீயத் தீயை
ஊதி அணைத்தேன் – இன்று!

மாதம்தோறும் வரவு செலவு பார்த்தபோது
நடுத்தர வர்க்கத்தின்
நிரந்தர பொழுதுபோக்கு
என்றெண்ணியிருந்தேன் – நான்
மாத இறுதியில்
வங்கி வைப்பைப்
பார்க்கும் போதுதான்
நிரந்தர உயிர் நாடி
என்று புாிந்தேன்!

ஏளனமாய் எண்ணி – அன்று
முழுமையாய் எற்காத அன்பை
மூலை முடுக்கிலும் தேடிப்பார்க்கிறேன் – இன்று!

Series Navigation

ஆனந்தன்

ஆனந்தன்