அஞ்சாதே! கெஞ்சாதே!

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

கரு.திருவரசு


நாளை என்பது வரட்டும் வரட்டும்
நீஅதற் கஞ்சாதே!
நாளை என்பது வாராதிருப்பினும்
நீஅதைக் கெஞ்சாதே!

நேற்று நடந்தது உனக்குத் தெரியும்
நிறைகுறை நிலைபுரியும்!
ஏற்று நடந்திட எதுதுணை எதுமுறை
எனவொரு வழிதெரியும்!

இன்று நடப்பது எனது எனதென
எழுந்திடு எழுந்திடுநீ!
நன்று துணிவுடன் நின்று தெளிவுடன்
நடந்நிடு நடந்திடுநீ!

கோரையை நட்டுக் கீரையைப் பறித்த
கொம்பன் எவனுமில்லை!
காரியம் செய்வதில் வீரனை எந்தக்
காலமும் தடுப்பதில்லை!

நாளை என்பது வரட்டும் வரட்டும்
நீஅதற் கஞ்சாதே!
நாளை என்பது வாராதிருப்பினும்
நீஅதைக் கெஞ்சாதே!

thiruv@streamyx.com

Series Navigation

author

கரு.திருவரசு

கரு.திருவரசு

Similar Posts