‘ ஒரு தேவதை பூதமாகிறாள்……’

This entry is part [part not set] of 27 in the series 20070712_Issue

வைகைச் செல்விநீராய்….. நிலமாய்…..
காற்றாய்…..நெருப்பாய்….
வானம் தொட்டும்
இயற்கை தேவதையின்
சித்திரத் துகில்
பறக்கும்.

காட்டுக்குள்…..கடலுக்குள்
பூ விரிக்கும் வாசத்தில்
கண்ணின் ஈரத்தில்
சூடான மூச்சுக்குள்
உயிருக்குள் உயிராய்க்
கலந்து உறவாடி
மண்ணைத் துளைத்து

மறுபடியும் கிளைவிட்டுச்
சுற்றிச் சுற்றி அவள்
சுழன்று சதிர் ஆடுகையில்…..

சுயநலமாய்ச் சுரண்டும்
அற்பக் கயவர்கள்
துகிலுரியக் கரமெடுத்தால்….

ஆம்….
மனிதக் கையைத் தடுப்பதற்குப்
பஞ்ச பூதங்கள்
பூதங்களாகவே இருக்கட்டும் !

++++++++++++

அனுப்பியவர் : சி. ஜெயபாரதன், கனடா

Series Navigation

வைகைச் செல்வி

வைகைச் செல்வி