ஜெயகாந்தன் பதிலளிக்கிறார் – எனிஇந்தியன்.காம் வெளியிடும் மாத இதழில்!

This entry is part [part not set] of 39 in the series 20080306_Issue

பி.கே.சிவகுமார்


எனிஇந்தியன் குழுமம் சார்பாக ஏப்ரல் 2008-லிருந்து புதிய தமிழ்மாத இதழ் “வார்த்தை” வெளிவரவிருக்கிறது. உங்கள் அபிமான எழுத்தாளர்கள் பலரும் முதல் இதழிலும், தொடர்ந்தும் எழுதவிருக்கிறார்கள். “தெளிவுற அறிந்திட… தெளிவுபெற மொழிந்திட…” என்ற உத்வேகத்துடன் “வார்த்தை” மாதஇதழ் தன்னுடைய பயணத்தைத் தொடங்கவிருக்கிறது.

இதழுக்கு மேலும் சிறப்புச் சேர்க்க, முதல் இதழிலிருந்து வாசகர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்விகளுக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் பதிலளிக்கவிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். ஒவ்வொரு இதழிலும் வெளியாகும் கேள்வி-பதில்களில், சிறப்பான கேள்விக்குப் புத்தகப் பரிசும் உண்டு.

மின்னஞ்சலில் கேள்விகளை அனுப்பி வைக்க விரும்புகிறவர்கள், பெயர் மற்றும் முழு முகவரியுடன் vaarththai [at] gmail [dot] com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். மின்னஞ்சலின் பொருளில்: வார்த்தை கேள்வி-பதில் என்று மறவாமல் குறிப்பிடவும். கேள்விகளைத் தமிழில் தகுதரம் (TSCII) அல்லது ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் அனுப்பலாம். ஆங்கிலத்திலும் தமிங்கலத்திலும் கேள்விகளை அனுப்புவதைத் தயவுசெய்து தவிர்க்கவும்.

தபாலில் கேள்விகளை அனுப்பி வைக்க விரும்புவோர்: வார்த்தை கேள்வி-பதில் பகுதிக்கு என்று குறிப்பிட்டு, பெயர் மற்றும் முழுமுகவரியுடன் கேள்விகளை, Vaarththai Magazine, C/O AnyIndian.com, # 102, No. 57, PMG Complex, South Usman Road, T. Nagar, Chennai – 600 017, India என்னும் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

சிறந்த கேள்விக்கான பரிசு பெற்றால் பதிவுத் தபாலில், புத்தகப் பரிசை அனுப்பி வைக்க, கேள்வி கேட்பவரின் பெயரும் முகவரியும் கண்டிப்பாகத் தேவைப்படுகிறது.

“வார்த்தை” மாத இதழுக்கான சந்தா செலுத்திவிட்டீர்களா?

தனியிதழ் விலை இந்திய ரூபாய் இருபது. AnyIndian.com இணையதளம் வழியாகக் கடனட்டை (கிரிடிட் கார்டு), வங்கி வழியாகப் பணம் செலுத்துதல் (பாங்க் ட்ரான்ஸ்பர்) உள்ளிட்ட பல வழிகளில் சந்தா செலுத்த இயலும். விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வார்த்தை (ஓராண்டு இந்தியச் சந்தா) – இந்திய ரூபாய் 200. இச்சந்தாவைச் செலுத்தப் பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.
ஓராண்டு இந்தியச் சந்தா.

வார்த்தை (இரு ஆண்டுகள் இந்தியச் சந்தா) – இந்திய ரூபாய் 375. இச்சந்தாவைச் செலுத்தப் பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.
இரு ஆண்டுகள் இந்தியச் சந்தா

வார்த்தை (ஓராண்டு வெளிநாட்டுச் சந்தா) – இந்திய ரூபாய் 1000. இச்சந்தாவைச் செலுத்தப் பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.
ஓராண்டு வெளிநாட்டு சந்தா

வார்த்தை (இரு ஆண்டுகள் வெளிநாட்டுச் சந்தா) – இந்திய ரூபாய் 1900. இச்சந்தாவைச் செலுத்தப் பின்வரும் சுட்டியைச் சொடுக்கவும்.
இரு ஆண்டுகள் வெளிநாட்டுச் சந்தா

தொடர்பு மின்னஞ்சல்: vaarththai [at] gmail [dot] com

Series Navigation

பி.கே. சிவகுமார்

பி.கே. சிவகுமார்