இருளும் மருளும் இஸ்லாமும் – பாபுஜி அவர்களுக்கு சில வரிகள்

This entry is part [part not set] of 43 in the series 20061019_Issue

நேச குமார்


பாபுஜி அவர்களின் கடிதம் கண்டேன்(http://www.thinnai.com/?module=displaystory&story_id=80610126&format=html ). அவர் என் மீது தனிப்பட்ட முறையில் செய்திருக்கும் விமர்சனங்களை நான் பொருட்படுத்த விரும்பவில்லை. ஏனெனில், இஸ்லாம் பற்றிய விவாதங்களுக்குள் நுழைந்ததிலிருந்தே இது போன்ற ஏராளமான இஸ்லாமிஸ்டுகளின் ‘அன்பு’ மழையில் நனைந்து வருகிறேன். என் கருத்துக்களை எதிர்கொள்ள முடியாத இவர்களின் இயலாமையே இப்படி தனிப்பட்ட முறையில் என்னை குறிவைத்து குற்றச் சாட்டுகளை அள்ளி வீசச் செய்கிறது என்பதை நான் அறிவேன் .

பல விதங்களில் இந்த காழ்ப்பு வெளிப்படுவதைக் கண்டிருக்கின்றேன் .என்னைப் புகழ்வது போன்று புகழ்ந்து இஸ்லாம் தவிர மற்றதெல்லா விஷயங்களைப் பற்றியும் இவர் எழுதுவது சரியாக இருக்கிறது என்று தாக்குவது , நேற்று வரை நன்றாக எழுதினார் இன்று பிசகுகிறார் என்று புத்திசாலித்தனமாக காலை வாருவது, இவை போன்றில்லாமல் நேராகவே தாக்குதவது – காசுக்காக எழுதுகிறார், தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டதால் எழுதுகிறார், இஸ்லாமோபோபிக் , அவதூறு, ஷைத்தானின் கையாள் என்பதில் இருந்து, கண்டபடி திட்டி மடல்கள் , வலைப்பதிவுகளில் ஏக வசனத்துவாக்கள், நீ எழுதுவதை நிறுத்து இல்லையேல் .. என்ற ரீதியில் வரும் மடல்கள் என்று ஏராளமான இஸ்லாமிய வாயடைப்பு யுக்திகளைச் சந்தித்து விட்டேன். நிதானமாக எழுதுவது போன்று காட்டிக் கொண்டு சாதுர்யமாக தாக்கும் நாகூர் ரூமியில் இருந்து வெளிப்படையாகவே ஜிகாதை ஆதரித்து எழுதும் இஸ்லாமிஸ்டுகள் வரை இந்த இரண்டரை வருடங்களில் நிறையவே சந்தித்து விட்டேன். இந்த ‘ அன்பில்’ நனைந்து நானும் மழையாகிவிடக்கூடாது என்று எனது மனிதத்தை,சேனிட்டியைக் காப்பாற்றிக் கொள்ள நீண்ட மவுனத்தைக் கடைப்பிடித்து இணையத்திலிருந்து ஒதுங்கி இருந்த நாட்களும் உண்டு. இதைக் குறித்து நான் திண்ணையிலும் ஏற்கெனவே எழுதியுள்ளேன் .
எனவே, இதில் புதிதாக இந்த பாபுஜி என்கிற பெயரில் எழுதுகிற நபரின் இடிப்பு என்னை ஒன்றும் செய்துவிடப் போவதில்லை. மாறாக ஒவ்வொரு தாக்குதலுக்குப் பின்னும் , ஒவ்வொரு திட்டுக்கு, மிரட்டலுக்குப் பின்னும் , இந்த விஷயம் குறித்து எழுதுவதை விடக்கூடது என்ற உறுதியே வலுக்கிறது . சமீபத்தில் பாபுஜி எழுதியிருக்கும் மடலும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். நான் எதோ எதிர்கொள்ள வழியில்லாது ஏராளமான ஆதாரங்களை இஸ்லாமிஸ்டுகள் முன்வைத்தவுடன் பின்வாங்கி மவுனம் காத்ததுபோன்ற பிம்பத்தை உருவாக்க முயன்றிருக்கின்றார் . அதற்கு இரு பெயர்களை உதாரணமாகவும் குறிப்பிட்டுள்ளார். எப்படி இவர்களின் எதிர்வினை அமைந்திருக்கிறது, அதை எதிர்கொள்வதற்கான தகுதிகள் என்னிடம் ஏன் இல்லை, என்பதை திண்ணை வாசகர்கள் முன்வைக்கவே இந்த பதில். முதலாவதாக எழுதியிருக்கும் அப்துல்லாஹ்வின் பதிவைக் குறித்து( http://islamicreply.blogspot.com/2005/06/3.html) இக்கடிதத்தில் பார்ப்போம்.
***

எனது கட்டுரைகளில் ஒன்றில் அபூ ஸுஃப்யான் என்ற மனிதர் தம் தலையைக் காத்துக்கொள்ள முகமது முன்னால் இஸ்லாத்தில் இணைந்தார் என்ற தகவலை அப்துல்லாஹ் எதிர்கொள்கிறார் . எவ்வாறு எதிர்கொள்கிறார் என்பதைப் பார்க்குமுன் நான் எழுதியுள்ளதைப் பார்க்கலாம்:
//”நான் அவரை( அபூஸுஃப்யான்) அழைத்துக் கொண்டு நபி(ஸல் ) அவர்களிடம் சென்றேன். அவரைப் பார்த்த நபி (ஸல்) அவர்கள் ” அபூஸுஃப்யானே உனக்கு என்ன கேடு நேர்ந்தது. அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று நீ இன்னமும் தெரிந்து கொள்ளவில்லையா ?” எனக் கேட்டார்கள் . “எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் . நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலி; நீங்கள் மிக கண்ணியமிக்கவர்கள் ; உறவுகளை அதிகம் பேணுகிறீர்கள்; அல்லாஹ்வுடன் வேறொரு இறைவன் இருந்திருந்தால் அவர் இன்று எனக்கு எதாவது நிச்சயம் பயனளித்திருப்பார்” என அபூஸுஃப்யான் கூறினார்.
அதற்கு

நபியவர்கள் “அபூஸுஃப்யானே ! உமக்கு என்ன கேடு நேர்ந்தது. நான் அல்லாஹ்வின் தூதர் என்று நீ தெரிந்து கொள்வதற்கு இன்னுமா உனக்கு நேரம் வரவில்லை ?” என்றார்கள். “எனது தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் . நீங்கள் எவ்வளவு பெரிய பொறுமைசாலி. நீங்கள் மிக கண்ணியமிக்கவர்கள்; உறவுகளை அதிகம் பேணுகிறீர்கள்; ஆனால் இந்த விஷயத்தில் எனக்கு சற்று சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது ” என்று அபூஸுஃப்யான் கூறினார் . இதைக் கேட்ட அப்பாஸ் (ரழி) “உனக்கென்ன கேடு ! நீ கொல்லப்படுவதற்கு முன் இஸ்லாமை ஏற்றுக்கொள். லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் என்று சாட்சி சொல்லிவிடு!” என்று கூறினார். அவரும் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு ஏகத்துவ சாட்சியும் மொழிந்தார் . ”
[பக்கங்கள் 490 – 91. “ரஹீக் ” ஆசிரியர்: இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் . தாருல் ஹுதா பதிப்பகம், மண்ணடி, சென்னை .]//
***

இது குறித்து அப்துல்லாஹ் இவ்வாறு எழுதுகிறார் :

” அப்பாஸ் அவர்களைப் பார்த்து அபூஸுஃப்யான் இந்நேரத்தில் இங்கு வந்திருக்கிறீர் எனும் பொருளில் “உங்களுக்கு என்னவாயிற்று. எனது தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும்” என்று கூறினார். அதற்கு அப்பாஸ்(ரலி) அவர்கள், “இதோ அல்லாஹ்வின் தூதர் மக்களுடன் வந்திருக்கிறார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! குறைஷிகள் அழிந்தே விட்டனர் ” என்று கூறுகிறார்.

தப்பிப்பதற்கு வழி என்னவென்று அபூஸுஃப்யான் கேட்க , அதற்கு அப்பாஸ் உன்னை நபியவர்களிடம் அழைத்துச்சென்று உனக்கு பாதுகாப்பு தேடுகிறேன் என்று அபூஸுஃப்யானை அழைத்துச் செல்கிறார் . அபூஸுஃப்யானின் மற்ற இருதோழர்கள் திரும்பிச் சென்றுவிடுகின்றனர்.

பாதுகாப்பு வழங்குவதற்காக அப்படையின் தளபதியிடமே செல்கிறார். இப்பொழுதுதான் நேசகுமார் குறிப்பிட்ட அந்த உரையாடல் நடக்கிறது .”

அப்துல்லாஹ் சொல்லியிருப்பதே அபூ சுப்யான் நிர்ப்பந்தத்தால் மதம் மாறினார் என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது . மதம் மாறாத குரைஷிகளை அழிக்க முகம்மது வந்திருக்கிறார் என்று அப்பாஸ் மிரட்ட, தாம் கொல்லப்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்று கேட்கிறார் அபூ ஸுஃப்யான். முகம்மதிடம் அழைத்துச் செல்கிறேன். அவரிடம் மன்னிப்பு கேட்டு சரணடைந்துவிடு என்று ஆலோசனை சொல்கிறார். பிறகு மேலே கண்ட உரையாடல் நிகழ்கிறது. இந்நிலையில், வேறு வழியில்லாமல் சட்டென்று ‘ஈமான் ‘ அபூ சுப்யான் மீது வந்திறங்குகிறது.
இப்படித்தான் வாள் முனையில் இன்றைய உலகில் இருக்கும் இஸ்லாமியர்களின் மூதாதையர்களில் பெரும்பான்மையானோர் மீது வந்திறங்கியது ஈமான் ! இப்படி வேறு வழியில்லாமல் மதம் மாறியவர்களுக்கு தொடர்ந்து கொள்ளையடித்த பணத்திலிருந்து வரும்படி வர வர, பதவிகள் வர வர , ஜக்காத்திலிருந்து ஒரு பகுதி மதம் மாறியதற்காக வர வர , ஈமான் நிரந்தரமாக வந்து தங்கிக் கொண்டது இப்படி வேறு வழியில்லாமல் முகம்மதியர்களானவர்களிடம் .

இதற்கும் அபூ ஸுஃப்யானே சிறந்த உதாரணம். கனீமாவிலிருந்து அபூ ஸுஃப்யானுக்கு அதிகம் பணம் கிடைத்தது(கனீமா – மாற்று மதத்தவர்களிடமிருந்து கொள்ளையடித்த பணம்) இது குறித்து முகம்மதின் ஏனைய அடியார்கள் ஏராளமான மன உளைச்சலுக்குள்ளானார்கள் . நஜ்ரன் நகரின் ஆளுநர் பதவியும் அபூ ஸுஃப்யானுக்குக் கிடைத்தது. இப்படி ஈமான் வேறு வழியில்லாமல் வந்திறங்கியவர்களுக்குக் கூட பணம், பதவி, அந்தஸ்து எல்லாவற்றையும் அல்லாஹ் வழங்குவார் என்றால் ஏன் இஸ்லாத்தின் எண்ணிக்கை பெருகாது? மனித மனங்களின் அத்தனை கரும் துவாரங்களையும் சரியாகப் புரிந்து வைத்திருந்தார் முகம்மது.
***

மேலும், அப்துல்லாஹ் இதை கீழ்க்கண்ட தர்க்கங்களை முன்வைத்து எதிர்கொள்கிறார் :
*

போரில் வீரமாக போரிட்டு எதிராளியை வீழ்த்திய எவனாவது பிறகு பயந்துபோவானா?
*

முகமது மிரட்டவில்லை, அவரது தோழர்தான்( சஹாபா) மிரட்டினார்.
*( முஸ்லிமாக மாறிய பிறகு) அபூ ஸுஃப்யான் முகமதுவைப் புகழ்ந்து கவிதைகள் எழுதியிருக்கின்றார்.
*( முஸ்லிமாக மாறிய பிறகு) முகம்மதுவைப் பற்றி மாற்று நாட்டு மன்னர் கேட்ட போது புகழ்ந்து சொன்னாதாக கூறியுள்ளார்.
இப்படி எழுதும் இஸ்லாமிஸ்டிடம் நான் என்ன சொல்ல முடியும்? என்ன விவாதிக்க முடியும்? ஏனைய்யா சண்டைக்கு முஷ்டிதட்டுபவன பெரும் படையுடன் வந்திறங்கியிருக்கும் எதிராளியின் ஆட்களிடம் பின்னாளில் அகப்பட்டுக் கொண்டால் அன்று அழித்துவிடப்போவதாக சபதமிட்ட அந்த எதிராளியைப் பார்த்து பயப்பட மாட்டானா? முகமதுவின் தோழர் மிரட்டினால் (அவரது முன்னிலையில் மிரட்டினார் என்பது கவனிக்கத்தக்கது ) முகம்மது உடனே அந்த தோழரை கல்லால் அடித்து(கருணையுள்ள அல்லாஹ்வின் தண்டனை) கொலை செய்யச் சொல்லி உத்தரவு போட வேண்டியதுதானே? நிர்ப்பந்தத்தினால் மதம் மாற்றுபவர்களை கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும் என்று எங்காவது உங்களது அல்லாஹ்வோ , அல்லாஹ் தமது வானவர் கிப்ரீல் மூலம் தகவல்களை பத்து வருடங்களாக தொடர்ந்து அனுப்பிக்கொண்டிருந்தாரே அந்த தூதராவது சொல்லியுள்ளாரா? செயல்படுத்திக் காட்டியுள்ளாரா ? – மாறாக வாள்முனையில் மதம் மாற்றுவது தமக்கு ஆகுமானது என்று சொல்லியிருப்பது முகம்மதுவேதான் . இதெல்லாம் உங்களது ஹதீதுகளிலேயே காணக்கிடக்கிறதே ! . இந்த கேள்விகளெல்லாம் கேட்கலாம்தான் – இயல்பான மனோ நிலையில் இருப்பவர்களிடம். ஆனால் ….
***

வாள்முனையில் மதம் மாற்றுவது சரியே என்று சொன்னது முஹம்மதுதான். நானல்ல. முஹம்மது , கடவுள் தம்மிடம் இவ்வாறு மாற்றச் சொல்லிச் சொன்னதாக சொன்னதை இஸ்லாமிய அறிஞர்களே பதிவு செய்து வைத்துள்ளனர் . இந்த ஹதீதுகள் அவற்றை தெளிவு படுத்துகின்றன:

அல்லாஹ் மட்டுமே கடவுள் என்று ஒப்புக் கொள்ளும் வரை போரிடும்படி எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. அல்லாஹ் மட்டுமே கடவுள் என்று ஒருவன் ஏற்றுக் கொள்வாயேனால், அவனது உயிரும் உடமைகளும் இஸ்லாமியச் சட்டத்தின் பிரகாரம் பாதுகாக்கப் படும். அவனது கணக்கு அல்லாஹ்விடம் இருக்கும் (தண்டிக்க அல்லது வளங்களை வழங்க ).”
Bukhari Volume 4, Book 52, Number 196:

Narrated Abu Huraira:

Allah ‘s Apostle said, ” I have been ordered to fight with the people till they say, ‘None has the right to be worshipped but Allah,’ and whoever says, ‘None has the right to be worshipped but Allah,’ his life and property will be saved by me except for Islamic law, and his accounts will be with Allah, (either to punish him or to forgive him.)”

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/052.sbt.html

***

முஹம்மது எப்படி மூளைச்சலவை செய்து, ஆசை காட்டி ஜிஹாத்துக்கு தூண்டிவிட்டார் என்று அவரைப் பின்பற்றியவர்களே சொல்லியுள்ளதைப் பாருங்கள். இங்கேயும் நிர்ப்பந்தித்து மதம் மாற்றச் சொல்லி முஹம்மது சொன்னார் என்று அவரது அடியார்களே வாக்குமூலம் தருகிறார்கள்:

நாங்கள் வறியவர்களாயிருந்தோம் . இஸ்லாத்தால் (கொள்ளையடித்து) வளமானோம்…. எங்களது தூதர் மற்றவர்கள் (இஸ்லாத்தை ) அல்லாஹ்வை ஏக இறைவன் என்று ஏற்கும் வரையிலோ அல்லது ( கீழ்ப்படிந்து, இழிந்து) ஜிஸ்யா வரி கட்டும் வரையிலோ (ஜிகாத்) போரிடும்படி எங்களுக்கு உபதேசித்திருக்கிறார் . எங்களது கடவுள் சொன்னதாக எங்களது தூதர் மேலும் ஒன்றைச் சொல்லியிருக்கின்றார். அதாவது நாங்கள் ( ஜிகாத்தில்) உயிரிழந்தால் (ஜன்னத் எனும் ஹூரிகள் காத்திருக்கும்) சொர்க்கத்துக்குப் போய் சொகுசாக வாழ்வோம் என்றும் , உயிருடன் இருந்தான் உங்களது எஜமானர்கள் ஆவோம் .”
Bukhari Volume 4, Book 53, Number 386:

Narrated Jubair bin Haiya:

“We are some people from the Arabs; we led a hard, miserable, disastrous life: we used to suck the hides and the date stones from hunger; we used to wear clothes made up of fur of camels and hair of goats, and to worship trees and stones. While we were in this state, the Lord of the Heavens and the Earths, Elevated is His Remembrance and Majestic is His Highness, sent to us from among ourselves a Prophet whose father and mother are known to us. Our Prophet, the Messenger of our Lord, has ordered us to fight you till you worship Allah Alone or give Jizya ( i.e. tribute); and our Prophet has informed us that our Lord says:– “Whoever amongst us is killed (i.e. martyred), shall go to Paradise to lead such a luxurious life as he has never seen, and whoever amongst us remain alive, shall become your master.”

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/053.sbt.html

***

முகம்மதியராக (முகம்மது ஒரு உண்மையான இறைத்தூதர் என்று ஏற்பவராக) மாறினால் மட்டுமே வாழ அனுமதிக்கப் படுவார்கள் என்று யூதர்களை வாள் முனையில் மிரட்டியது முஹம்மது என்று சாட்சியம் கூறுகிறார் அவரது நல்லடியாரான அபூ ஹுரைரா :

மசூதியில் இருந்த எங்களிடம் வந்து யூதர்களிடம் செல்வோம் என்று இறைத்தூதர் சொன்னார். யூதர்களிடம் சென்று இஸ்லாத்தைத் தழுவினால் பாதுகாக்கப் படுவீர்கள். உலகம் அல்லாஹ்வுக்கும் அவரது தூதருக்கும் மட்டுமே என்று சொன்னார் அவர்.”
Bukhari Volume 4, Book 53, Number 392:

Narrated Abu Huraira:

While we were in the Mosque, the Prophet came out and said, “Let us go to the Jews” We went out till we reached Bait-ul-Midras. He said to them, “If you embrace Islam, you will be safe. You should know that the earth belongs to Allah and His Apostle, and I want to expel you from this land. So, if anyone amongst you owns some property, he is permitted to sell it, otherwise you should know that the Earth belongs to Allah and His Apostle.”

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/053.sbt.html

***

மற்ற மதங்களின் இறையில்லத்தை( கோவிலை) இடித்து அங்கிருந்தவர்களை கொலை செய்யச் சொன்னார் முஹம்மது என்று நபித்தோழர் ஒருவர் தெரிவித்துள்ளார்:
Bukhari Volume 5, Book 59, Number 642:

Narrated Qais:

Jarir said to me, The Prophet said to me, “Won’t you relieve me from Dhu-l-Khalasa?” And that was a house (in Yemem belonging to the tribe of) Khatham called Al-Kaba Al Yamaniya. I proceeded with one-hundred and-fifty cavalry from Ahmas (tribe) who were horse riders. I used not to sit firm on horses, so the Prophet stroke me over my chest till I saw the mark of his fingers over my chest, and then he said, ‘O Allah! Make him ( i.e. Jarir) firm and one who guides others and is guided on the right path.” So Jarir proceeded to it dismantled and burnt it, and then sent a messenger to Allah’s Apostle. The messenger of Jarir said (to the Prophet), “By Him Who sent you with the Truth, I did not leave that place till it was like a scabby camel.” The Prophet blessed the horses of Ahmas and their men five times.

http://www.usc.edu/dept/MSA/fundamentals/hadithsunnah/bukhari/059.sbt.html

நிர்ப்பந்தம் என்று வரும்போது வாள்முனையில் மிரட்டி மதம் மாற்றுவது என்கிற வழக்கை துவக்கி வைத்ததே முஹம்மதுதான் என்பதையே மேலே கண்ட ஹதீதுகள் தெளிவாக்குகின்றன. கடவுள் இப்படியெல்லாம் செய்யலாம் என்று சொன்னார் என்று முஹம்மது சொன்னதால், அதன்படியே நடந்து காட்டியதால் இது ஒரு உண்மையான, ஈமானுள்ள முஸ்லிம் பின்பற்ற வேண்டிய சுன்னாஹ்வாகின்றது .
இதையெல்லாம் சொன்ன நபர், தமது முக்கிய எதிரியான அபூ ஸ்ஃப்யான் தம்மிடம் மாட்டிக் கொண்டபோது சும்மா விட்டார் முகம்மது, அபூ ஸுஃப்யானுக்கும் மகாத்மா முகமதுவை படைவீட்டில் கண்டபிறகு என்றும் இல்லாதவிதமாய் இறைக்கருணை இறங்கி இஸ்லாமிய ஞானம் கிட்டியது என்றெல்லாம் நம்ப துரதிர்ஷ்டவசமாய் நான் இஸ்லாமியனில்லை பாபுஜி அவர்களே.
அப்படி இஸ்லாமியனாக இல்லாத காரணத்தினால்தான் இப்படிப்பட்ட இஸ்லாமிய தர்க்கங்களை என்னால் எதிர்கொள்ள முடியவில்லை. அம்மனமாய்ப் போகும் அரசனின் ஆடையணிகலன்களை குடிகள் வியந்து போற்ற சிறுவர்கள் அடக்க முடியாமல் சிரித்தார்களே அந்த நிலையில் தான் இருக்கிறென் நான். உலகமே இன்று அம்மனமாய் ஊர்வலம் போகும் இஸ்லாமிஸ்டுகளைப் பார்த்து அமைதியின் மார்க்கத்தவர்கள் என்றும் , வன்முறையின் நாயகமாய் விளங்கியவரை அஹிம்சையின் நாயகம் என்று சொல்லும்போது உள்ளுக்குள் இருப்பதை மறைத்துக் கொண்டு ஆமாம் சாமி போட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில் ஏற்கெனவே இருக்கும் உன்மத்தம் இன்னமும் அதிகமாகிறது அரசர்களுக்கு. என் போன்றவர்கள் இந்நிலையில் என்ன சொல்வது, வாயை மூடிக்கொண்டு பலவேளைகளிம் அமைதி காக்க வேண்டித்தான் இருக்கிறது. இதை ஆதாரங்களைக் கண்டு அதிர்ந்து போய் அமைதிகாத்ததுபோன்று பாபுஜி போன்றவர்கள் எழுதுவதைக் கண்டு என்ன சொல்வது?

***

அப்துல்லாஹ்வோ , பாபுஜியோ மேலே கண்டதெல்லாம் இஸ்லாமிய நூல்களில் இல்லை என்று என்னிடம் நிரூபிக்க வேண்டியதில்லை. உலகமே இன்று இதைத்தான் கேட்கிறது . அன்று அரசர்கள் விவாதித்தது குறித்த இன்றைய போப்பரசர்கள் இதைத்தான் சொல்லிச் சொல்லி கேட்கிறார்கள்(போப்பரசர் வலியுறுத்துவது இதைவிடப் பெரிய மூடத்தனத்தை – விரிவாக அதுகுறித்து வாய்ப்பு கிடைக்கும்போது எழுதுகிறேன் ).

முகமது கொண்டுவந்ததில் என்ன புதிதாக இருக்கிறது? வன்முறையை நியாயப்படுத்தும் இறையியலைத் தவிர ? அடித்தவனுக்கு மறு கன்னத்தைக் காமிக்கவில்லை என்பதால் உலகம் முகமதுவின் மீது ஐயம் கொள்ளவில்லை. முகமதுவை இறைத்தூதர் என்று நம்பாதவனின் கன்னத்தை வெட்டலாம், பெண்களைக் கவரலாம் , பொருட்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று ஏழு வானத்திற்கப்பால் இலந்தைமர உச்சியிலிருந்து கொண்டு இறைவன் சொல்கிறார். நான் புராக் வாகனத்தில் ஏறிச் சென்றபோது எனக்கு இதெல்லாம் தெரிந்தது என்று சொன்னாரே முகம்மது, அதை அன்று வேறு வழியில்லாமல் நம்பினார்கள் , இன்று அதை நம்பி ஏரோப்ளேன்களைக் கொண்டு கட்டிடங்கள் மீது பாய்கிறீர்களே, தெருவில் , கடைவீதியில், புகைவண்டிகளில் குண்டு வைக்கிறீர்களே, உங்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லையா என்றுதான் உலகம் இன்று கேட்கிறது இவர்களைப் பார்த்து.
இவை மட்டும் அல்ல, இன்னும் அதிகதிகமான ஆதாரங்களை இஸ்லாமிய ஆவணங்களிலிருந்தே எடுத்துக் காட்ட முடியும். இஸ்லாம் பரவியதற்கு இந்த மூன்று முக்கியக் காரணங்களைச் சொல்லலாம் :
*

நிர்ப்பந்தம்.
*

ஆசை.
*

மனப் பிசகு/ மன இருள்.
எல்லாத் தருணங்களிலும் முஹம்மது நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவில்லை . பல சமயங்களில் ஆசை காட்டினார் . பதவி ஆசை, பணத்தாசை , பெண்ணாசை – இப்படி. அதனாலேயே அவரது அடியார்களுக்கு ஜிகாத் செய்து கொள்ளையிடும் பணம் ஆகுமானது என்று கடவுள் சொன்னார் என்று உபதேசித்தார் . குரானிலும் இந்த வரிகளைக் காணலாம்.
சரி , அன்று நிர்ப்பந்தத்தினால் மதம் மாறினார்கள் , ஆசைகளின் தூண்டலினால் மதம் மாறினார்கள் . ஆனால் , இன்னமும் இஸ்லாத்தை விட்டு வெளியே ஏன் இஸ்லாமியர்கள் வரவில்லை என்ற கேள்வி எழலாம். நாகூர் ரூமி அவர்கள் இதே கேள்வியை திண்ணையில் கேட்டுள்ளார் .
பி .கே.சிவகுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை என்னிடம் மரத்தடியில் இதெ கேள்வியை சற்று மாற்றிக் கேட்டார். அலுப்பில் பதில் தரவில்லை நான் . அந்தக் கேள்வியை என்னை விமர்சித்து அவர் எழுதிய கட்டுரையிலும் கேட்டுள்ளார் . அட்லாண்டிக்கு அப்பால் நூலில் அக்கட்டுரை இடம் பெற்றுள்ளது.அந்தக் கட்டுரையின் முடிவு நான் விரும்பியபடியே இருந்ததால், என்னைக் குறித்தான தாக்குதல்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை (ஆனால் அக்கட்டுரையில் கேட்டிருந்த பல கேள்விகளுக்கான பதில்களை எனது கட்டுரைகளில் ஆங்காங்கே தெரிவித்துள்ளேன்) . சிவகுமாரின் கேள்விக்கான பதிலாகத்தான் இங்கே தான் மூன்றாவதாக நான் குறிப்பிட்டுள்ள விஷயம் வருகிறது.
இஸ்லாத்தின் மிகப் பெரிய பலம், மனங்களின் இருக்கும் கரும் கதவுகள் மூலம் நுழைந்து நம்மை ஆக்கிரமித்துக் கொள்வது. நாகூர் ரூமி விரும்பாததுபோல் மார்தட்டும், இஸ்லாத்தின் பரவலும் இதன் மூலமே இன்று சிறிய அளவில் நிகழ்ந்து வருகிறது ( இது குறித்து தனியாக எழுத வேண்டும் . இது மட்டுமல்ல , முகமதின் சமகாலத்தவர்கள் சூனியமாக அடையாளம் கண்டுகொண்ட இந்த இருட்தன்மை குறித்தும், முகமதின் hallucinogenic ஆன்மீக அனுபவங்கள் குறித்தும் தனியாக நீண்டதொரு கட்டுரையை எழுதவேண்டும் ) .
புகைப்பது தீமை என்று தெரிந்தும் ஏன் புகைக்க ஆரம்பிக்கிறோம், ஏன் விடுபட முடியவில்லை? போதைப் பழக்கம் கொடியது என்று தெரிந்தும் ஏன் அதை ஒழிக்க முடியவில்லை? மாறாக போதைக்கு அடிமையாபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கின்றதே ?
இந்த கேள்விகளுக்கெல்லாம் என்ன விடை இருக்கின்றது ? மனித மனத்தின் விசித்திரங்கள் என்றுதான் சொல்ல வேண்டும். எனவே இந்த மன இருள் இஸ்லாத்தின் பரவலில், பரவலையும் விட முக்கியமாக உள்ளே நுழைந்தபிறகு தங்கிவிடுவதற்கு முக்கியக் காரணமாக விளங்குகிறது ( Retention due to black spots in our minds).
***

எனவே இந்த மன இருள் இஸ்லாத்தின் பரவலில், பரவலையும் விட முக்கியமாக உள்ளே நுழைந்தபிறகு தங்கிவிடுவதற்கு முக்கியக் காரணமாக விளங்குகிறது
இன்று இஸ்லாத்தை மற்றவர்கள் புரிந்து கொள்ளாதபடிக்கு , காண்போரின் மனங்களையும் மயக்குவது இந்த இருட்தன்மைதான் . இந்தியத் தத்துவங்கள் , மரபுகள் இந்த இருள் என்றென்றும் இருக்கும் என்கின்றன . [ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா ஒளியுளோர்க்குஅன்றோ ஒழியாது ஒளியும் ஒளியுருள் கண்டகண் போலவே றாயுள
ஒளியிருள் நீங்க உயிர்சிவம் ஆமே ! – திருமந்திரம் – 1819].
***

சுழல் போன்று வந்து மீண்டும் மீண்டும் நம்மை ஆக்கிரமித்துக் கொள்வது இந்த இருள். இந்த இருளுக்கும் மருளுக்கும் தொப்புள் கொடி உறவு உண்டு. இஸ்லாத்தின் மிகப்பெரிய பலம் இந்த மருட்சிதான். ஆன்மீக ரீதியான மருட்சியானது இறைவன் பற்றிய மிரட்டல்களிலிருந்து தொடங்கி, நரகம் பற்றிய அச்சுறுத்தல்களால் பின்பற்றுபவர்களின் மனதை மருள வைக்கிறது. இது போதாதென்று, இதைக் கண்டு மருளாதவர்களை மிரட்டவே ஃபிஸிக்கலாக வன்முறையை பிரஸ்தாபிக்கின்றது இஸ்லாம். இந்த மன மருட்சி, மனதின் சிந்தனையை மூடி மறைத்துக் கொள்கிறது. இஸ்லாமிய வரலாற்றை உற்றுக் கவனித்தால், ஆரம்பத்தில் முகமதுவும் இதே மனநிலையில் இருந்தது தெரியவரும். வானத்தை மறைத்துக் கொண்டு ஆயிரம் இறக்கைகளுடன் தோன்றித் தம்மை இறுக்கிப் பிடித்து பேயடித்தவனின் நிலைக்குக் கொண்டுபோன ஜிப்ரீலின் மீது முகமதுவுக்கு பயம் ஏற்பட்டது. தற்கொலைக்குக் கூட முயன்றார் முகம்மது. பிறகு, தம்மை எதிர்த்தவர்கள் வன்முறையை மேற்கொண்டபோது எதிர்த்துத்தாக்கத் தைரியமில்லாமல் பயந்துபோய் ஊரை விட்டு ஓடினார்(விவேகானந்தர் இதுகுறித்து ஓரிடத்தில் எழுதும்போது, இப்படி எதிர்க்க வழியில்லாமல் வன்முறையை ஏற்பவர்கள் வாய்ப்புக் கிடைத்தவுடன் மற்றாவர்கள் மீது அதே வன்முறையை திணிப்பார்கள் என்று தெரிவிக்கின்றார்). இப்படி மருள் இருளாய் மாறி முகமதுவின் மனதைக் கைப்பற்றிக் கொண்டதுபோலவே, அவரது அடியார்களையும் காலம்காலமாய்ப் பற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறது.

இந்த இருளுக்கும், இதனிலிருந்து மீள மனித குலம் தம்மிலிருக்கும் உயரியசக்தியை விழிப்புணர்வை துணைக்கழைத்து மேற்கொள்ளும் போரே தேவ-அசுர யுத்தமாக இந்தியப் பெருங்கதைகளில் சித்தரிக்கவும் படுகிறது . மனித மனத்தின் விழிப்புணர்வின் உச்சமானதொரு தன்மையை இறைவன் இறங்கி அசுரர்களை எதிர்கொள்வதாக புராணங்கள், கதைகள், வழக்குகள் சித்தரிக்கின்றன. மாட்டுத் தலயுடன் கொண்ட சிந்திக்கா அசுரனை வீழ்த்தும் சக்தியை ஒரு இந்துவாக நம்மில் பலர் வணங்கியிருப்போம்.

சிறுவயதில் நான் அடிக்கடி சிந்தித்ததுண்டு. எப்படி அசுரர்களும் அதே கடவுளை வணங்குகின்றனர் . அசுரர்களுக்கு ஏன் இறைவன் வரங்களை வாரி வழங்குகின்றார் ? அது எப்படி அசுரர்கள் ஏக இறைவனை மட்டுமே வணங்கி உலகங்களையெல்லாம் விடு விடுவென்று ஆக்கிரமித்து விடுகின்றனர் . அது ஏன் கடைசியில் எல்லோரும் இறைஞ்சிய பின்னரே இறைவன் இறங்கி வருகின்றார் – இது போன்ற பல கேள்விகளுக்கு இன்று புலப்படும் விடை, இதெல்லாம் குறியீடுகள் என்பதே. அசுரத்தன்மை என்பது நமது மனத்தின் பின் கதவுகள் தாம். கடவுள் கீழிறங்கி வருவது என்பது கடைசியில் நமக்குள் ஏற்படும் விழிப்புணர்வுதான் .
எதனால் இப்படி மனம் விசித்திரமாக செயல்படுகிறது என்றால், எனக்கு விடை தெரியவில்லை . நான் மேலே சொல்லியுள்ளதுபோன்று , போதைப் பழக்கத்தின் விபரீதம் புரிந்தும் ஏன் அதை எடுத்துக் கொள்கிறோம்? மனித மனத்தின் இயல்பான தன்மைகளுள் இந்த விசித்திரங்களும் அடக்கம் .

இஸ்லாம் விஷயத்தில் இந்த விசித்திரம் மட்டுமல்ல . மேலும் பல விஷயங்களும் கலந்திருக்கின்றன . இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் , அப்படி வெளியேறுபவரைக் கொல்ல வேண்டும் என்று அல்லாஹ்வே சொல்லியிருக்கும்போது, அப்படி கடவுள் சொன்னார் என்று சொன்ன முஹம்மதை கண்மூடித்தனமாக பின்பற்றும் ஏராளமான ஈமான் நிறைந்த இஸ்லாமியர்கள் இருக்கும்போது எப்படி ஒருவரால் வெளியேற முடியும் ? இதையும் தவிர சொந்த பந்தங்களிலிருந்து துண்டிக்கப் படுவது (இதையும் சொன்னது முஹம்மதுதான் ), சமூக அந்தஸ்தை இழப்பது என்று இழப்பதற்கு ஏறாளமாக இருக்கும்போது எப்படி இஸ்லாத்தை விட்டு ஒரு சுயசிந்தனை உள்ள மனிதனால் வெளியே வர முடியும்? – ஒரு வழித் தற்கொலைப் பாதைதான் இஸ்லாம் என்கிற இந்த மார்க்கம்!

***

இஸ்லாம் ஒருவரது மனதை ஆக்கிரமித்துக் கொண்டால் , அது எப்படியெல்லாம் பார்வைக் கோளாற்றை உண்டு செய்கிறது, சிந்தனையைக் குறுக்கிவிடுகிறது என்பதற்கு அப்துல்லாஹ்வின் விளக்கமும் அதை அளப்பரிய உண்மை போல் சிரமேற்கொண்டு சிலாகித்து எழுதியுள்ள பாபுஜியின் கடிதமும் சிறந்த உதாரணம் .. அது மட்டுமல்ல , முஹம்மதுவின் மீதான பயம்தான் அபூ சுப்யானிடம் இருந்தது, மக்கத்து குரைஷிகளை இஸ்லாத்தை ஏற்க வைத்தது என்பதை அப்துல்லாஹ்வின் கீழ்க்கண்ட வரிகள் தெரிவிக்கின்றன :

அப்பாஸ் அவர்கள் அபூஸுஃப்யான் அவர்களிடம், ” உடனடியாக நீ உன் கூட்டத்தினரிடம் சென்று அவர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள அறிவிப்புச் செய் !” என்கிறார். அபூஸுஃப்யான் அவர்கள் மக்கா நோக்கி விரைந்து சென்று மக்காவாசிகளிடம் மிக உரக்க சப்தமிட்டு “குறைஷகளே ! இதோ.. முஹம்மது வந்துவிட்டார். அவர்களை உங்களால் எதிர்க்க முடியாது . அவர்களை உங்களால் எதிர்க்க முடியாது. எனவே , பாதுகாப்புத் தேடி எனது வீட்டிற்குள் நுழைந்து விடுங்கள். என் வீட்டில் நுழைந்தவர்கள் எல்லாம் பாதுகாப்பு பெறுவர் ” என்று முழக்கமிட்டார்.

அபூஸுஃப்யானின் இந்நிலையை கண்ட அவரது மனைவி அபூஸுஃப்யானின் மீசையை பிடித்திழுத்து “கெண்டைக்கால் கொழுத்த இந்த திமிர் பிடித்தவனைக் கொன்று விடுங்கள்! கூட்டத்திற்குத் தலைவனாக இருப்பதற்கு இவன் தகுதியற்றவன்” என்று கூறுகிறார்.

ஆனால், அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத அபூஸுஃப்யான், மக்களே! உங்களுக்கென்ன கேடு நேர்ந்தது . எனது பேச்சைக் கேளுங்கள்!. இவளது பேச்சை கேட்டு நீங்கள் ஏமாந்து விடாதீர்கள். உங்களால் அறவே எதிர்க்க முடியாத படையைக் கொண்டு முஹம்மது உங்களிடம் வந்திருக்கிறார். எனது வீட்டுக்குள் வந்துவிடுங்கள். என் வீட்டில் நுழைந்தவர்கள் பாதுகாப்பு பெறுவர்” என்று கூறினார். அதற்கு “அல்லாஹ் உம்மை நாசமாக்குவானாக! எங்களுக்கெல்லாம் உமது ஒரு வீடு எப்படி போதுமாகும்?” என்று மக்கள் கேட்டனர் . “யார் தனது வீட்டுக்குள் சென்று கதவைத் தாழிட்டு கொள்கிறாரோ அவரும் பாதுகாப்புப் பெறுவார் . யார் மஸ்ஜிதுல் ஹராம் என்னும் புனிதமிக்க கஃபா பள்ளிக்கு செல்வாரோ அவரும் பாதுகாப்பு வெறுவார்” என்று அபூஸுஃப்யான் கூறினார். இதைக் கேட்ட மக்கள் அனைவரும் தங்களது வீடுகளையும் , பள்ளியை நோக்கி ஓடினர்.”
இதைப் படிக்கும் யார்க்கும் இயல்பாகவே புலப்படும் விஷயம் , அபூ சுப்யானுக்கு முகம்மது மீது இருந்த பயம் . முகம்மது ஒரு இறைத்தூதர் என்று அபூ சுப்யானுக்கு எப்படி திடீரென்று தெரிந்தது ? அப்படித் தெரிந்திருந்தால், அதைச் சொல்லியல்லவா மக்கத்து குரைஷிகளை இஸ்லாத்தின் பக்கம் அழைத்திருக்க வேண்டும். மாறாக உங்களால் எதிர்க்க முடியாத அளவுக்கு பெரும் படையுடன் வந்திருக்கிறார் என்றல்லவா மிரண்டு போய் கூக்குரலிடுகிறார்.
முகம்மதிய நண்பர்களுக்கு கமலா சுரைய்யா வேறு வழியின்று மேம்போக்காக இஸ்லாத்தில் இருப்பது புலப்படாதது போலவே அபூ சுப்யானின் திடீர் மத மாற்றமும் புலப்படவில்லை.
அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை . இதெல்லாம் புலப்பட ஆரம்பித்து விட்டால், சுய சிந்தனை செயல்பட ஆரம்பித்து விட்டால் , பிறகு அவர்கள் சாத்தானின் கையாட்களாக ஆகிவிடுவார்களே. அல்லாவுக்கு அடிமைகள் தானே தேவைப்படுகிறது . சாத்தான் தான் சுய சிந்தனையை தூண்டிவிட்டு, இன்று நாம் காணும் எல்லாவித வழிகேடுகளையும் கொண்டுவந்து விட்டுவிட்டானே !
ஆஹா , அனைவரும் கடவுளின் அடிமைகளாக இருந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும், உலகம் முழுவதும் அன்றைய அரேபியச் சுவனம் போலவே இருந்திருக்கும் . பாபுஜிகளும், அப்துல்லாக்க்களும், பேரீச்சம் பழத்தை தின்றுகொன்டு ஒட்டகத்தில் போய்க்கொண்டு இருப்பார்கள். கணிப்பொறி என்ற ஷைத்தானின் உபகரணமும் வந்திருக்காது. நேசக்குமார் போன்ற நெருஞ்சி முட்களுக்கு இஸ்லாம் என்ற இறைவனின் உன்னத மார்க்கத்தை இப்படி மூளையைக் கசக்கிப் பிழிந்து வலிந்து விளக்க வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டிருக்காது.

உங்களது கனவுகளைக் கலைக்க விரும்பவில்லை பாபுஜி அவர்களே . நீங்கள் சொல்லியபடியே வாள் கழுத்தில் பட்டதும், உடனடியாக உலகிற்கு இறைவன் கடைசியாய் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறார் அது சற்று முன்பு வரை தாம் சற்றும் ஏற்றுக் கொள்ளாத முஹம்மது சல்லாஹு வஸல்லம்(இப்படி திராவிடத் தலைவர்களின் தொண்டர்கள் பாணியில் முகம்மதை நான் உணர்ச்சி வயப்பட்டு விளிக்கவில்லையென்றால் உலகின் கோடானுகோடி நபர்களின் அன்பிற்கு பாத்திரமானவரை அவதூறாகப் பேசிய பெரும் குற்றத்துக்கு நான் ஆவேன்!) அவர்கள் தாம் என்று அபூ ஸுஃபியானுக்குள் ஞானம் வந்து புகுந்து கொண்டது உண்மைதான் .

எங்களைப் போன்றவர்களுக்கு இன்னும் அந்த ஞானம் வந்திறங்காததற்கு , சுயசிந்தனையை இன்னமும் எங்களிடம் விட்டு வைத்திருக்கும் இறைக்கு நன்றி சொல்லி,

அன்புடன்

,

நேச குமார் –
18.10.2006

http://nesakumar.blogspot.com

Series Navigation

நேச குமார்

நேச குமார்