ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்

This entry is part [part not set] of 23 in the series 20050805_Issue

உமா


‘ஒரு பறவை தன்னிடம் விடையிருப்பதால் பாடுவதில்லை. அது தன்னிடம் பாடலிருப்பதாலேயே பாடுகின்றது“

– மாயா அஞ்சலு

பறவைகள் போலவே பெண்களிடமும் நிறையவே பாடல்கள் இருக்கின்றன. அவை அவர்களின் மனதில் புதையுண்டு போயிருக்கும் உணர்வுகளை, காயங்களை, அனுபவங்களை விலங்குடைத்து ஆதித்தாயின் வேர்பிடித்து காற்றில் எங்கும் ஒலிக்கச்செய்வார்கள். ஆனால் பறவைகள் போல் பெண்களுக்கு பாடித்திரிய சுதந்திரம் அதிகமில்லை. வெட்டுண்ட இறகுகளுடன் தான அவர்கள் பாடவேண்டியுள்ளது.

அந்த பாட்டில் வலி தெரியும்.. அந்த வலியில் அந்தப் பெண்ணின் உறுதி, தியாகம், முயற்சி வியாபித்திருக்கும்.

ஏமது சமூககட்டுமாணங்கள் பெண்ணையும் பெண்ணின் திறமையையும் அடக்கி அமிழ்த்துவது போல் பெண்ணின் படைப்பிலக்கியத்தையும் வெளியில் அதிகம் தெரியாது திரைமறைவிலேயே வைத்திருக்கின்றது.

இத்தடைகளைத்தாண்டி அவற்றை அனுபவங்களாகக் கொண்டு ஆண் இலக்கியவாதிகளிற்கு சரிநிகராக தொடர்ந்து இலக்கியத்துறையில் இருப்பதென்பது சாதாரண விடயமில்லை. அது ஒரு பெரும் சாதணை.

இச்சாதனையின் கைகளை இறுகப்பற்றி வெற்றியுடன் உலாவருபவர் லண்டளில் வசிக்கும் புகலிட பெண்எழுத்தாளர் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.

50களின் இறுதிப்பகுதிகளில் ஒரு ஆராய்;சிக்கட்டுயைின் மூலம் எழுத்துத்துறையில் நுழைந்த இவர் 60பதுகளில் சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். இதுவரை எட்டு நாவல்களையும், ஆறு சிறுகதைத் தொகுதிகளையும், இரு வைத்தியநூல்களையும், தமிழ்கடவுள் முருகன் பற்றிய வரலாற்று நூலொன்றையும் வெளியிட்டுள்ளார்.

2004ம் ஆண்டு வெளியிடப்பட்ட இவரது நாளைய மனிதர்கள் நாவலிற்கு திருப்பூர் தமிழ்சங்கத்தின் சிறந்த நாவலிற்கான பரிசு கிடைத்துள்ளது. இப்பரிசு வழங்கும் வைபவம் 31ம் திகதி யூலை மாதம் திருப்பூரில் நடைபெறவுள்ளது. இதற்கு முன்பும்; இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார். இலங்கை சுதந்திர எழுத்தாளர் விருது இவரது தேம்ஸ்நதிக்கரையினில் என்ற நாவலிற்கும், சுபமங்களா சஞ்சிகையால் வழங்கப்பட்ட இந்தியவிருது யாத்திரை என்ற சிறுகதைக்கும், அக்கரைப்பற்று இந்து முஸ்லிம் எழுத்தாளர்களால் வழங்கப்பட்ட கலைவாணிவிருதும், தேவசிகாமணி இலக்கியவிருது இவரது இன்னும் சில அரங்கேற்றங்கள் என்ற சிறுகதைக்கும், இலங்கை சுதந்திர எழுத்தாளர் சங்கத்தின் 1998 ம் ஆண்டிற்காள விருது வசந்தம் வந்த போய்விட்டது என்ற நாவலிற்கும், லில்லி தேவசிகாமணி இலக்கியவிருது அரைகுறை அடிமைகள் என்ற சிறுகதைத் தொகுதிக்கும் வழங்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கோளாவில் என்ற கிராமத்தில் பிறந்த ராஜேஸ்வரி 1970ம் ஆண்டிலிருந்து லண்டனில் வசித்து வருகிறார். இலங்கையில் தாதியாகப் பணிபுரிந்த இவர் இலண்டனில் திரைப்படத்துறையில் சிறப்புப்பட்டமும் மருத்துவ வரலாற்றுத்துறையில் எம்.ஏ பட்டமும் பெற்றவர். இதுதவிர குழந்தைகள் உடல்நலம் மற்றும் சுகாதாரவியல் ஆகியத் துைறைகளிலும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.

மூன்று பிள்ளைகளுக்குத் தாயான இவர் லண்டனில் மனிதஉரிமை போராட்டங்களில தன்னை இணைத்து செயற்பட்டதுடன், புலம்பெயர்ந்த தமிழ்மக்களிற்கான பல அமைப்புகளை நிறுவியுதுடன் பெண்கள் அமைப்புகளிலும் செயற்பாட்டாளராகவுள்ளார்.

இதுவரை அவர் எழுதி வெளிவந்த நூல்கள் பின்வருவன: ஒரு கோடைவிடுமுறை, தில்லையாற்றங்கரையினில், தேம்ஸ்நதிக்கரையினில், உலகமெல்லாம் வியாபாரிகள், பனிபெய்யும் இரவுகள், அம்மா என்றொரு பெண், நாளை இன்னொருத்தன், ஏக்கம், வசந்தம் வந்து போய்விட்டது, அரைகுறை அடிமைகள், அவனும் சில வருடங்களும், நாளைய மனிதர்கள், இலையுதிர்காலத்தில் ஒரு மாலைநேரம், தமிழ்கடவுள்முருகன் -ஒரு வரலாற்றுநூல், தாயும் சேயும் மற்றும் உங்கள் உடல்நலம் பற்றி ஆகிய மருத்துவ நூல்கள்.

இவர் படைப்பிலக்கியத்துறையுடன் நின்று விடாது இரு திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.

இலங்கைத்தமிழ் அகதிகளைப்பற்றிய விவரணப்படமொன்றையும், மணவாழ்வில் பாலியற்பலாத்காரம் பற்றிய திரைப்படமொன்றையும் இயக்கியுள்ளார்.

இவரது படைப்புகள் இனப்பிரச்சனையின் வடுக்களை தம்முள் சுமக்கும் கதாப்பத்திரங்களை கொண்டதாகவும், இலங்கையின் அரசிியல்சூழலைப் பிரதிபலிப்பதுடன், சிலசமயம் அவற்றை விமர்சனத்திற்குள்ளதக்குவதுடன், எமது சமூகத்தின் வேருக்குள் புரையோடியிருக்கும் பெண்ணொடுக்குமுறை, சாதீயம் என்பற்றையும் கோடிட்டுக் காட்டுகின்றன.

ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் தனது கதைகளின் கருக்களிற்காக மாத்திம் சமூக அனர்;த்தங்களைத் தேடிப்போவதில்லை. ஓடுக்கப்படும் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் வேதனைகளைப்புரிந்துகொன்டு;, அவற்றிற்கு தன்னாலான உதவிகளைப் புரிந்துவருகிறார்.

தானுண்டு தன் எழுத்துண்டு என்று நின்றுவிடாது எழுதும் ஏனேய பெண்களை ஊக்குவிக்குமுகமாக ஏழு வருடங்களாக இந்தியாவில் கோவை ஞானியுடன் இணைந்து சிறுகதைப் போட்டிகளை நிகழ்த்திவருகிறார். இச்சிறுகதைகளை நூலாகவும் வெளியிட்டுள்ளார்.

உமா

JSinnatham@aol.com

Series Navigation

உமா

உமா